மனித உயிர்களின் பாதுகாப்பைக் கருதி, வெறிநாய்க்கடி பாதித்த மற்றும் ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளனர்
பதிவு செய்யப்பட்ட வெறிநாய்கடி அதாவது ராபிஸ் மரணங்களுக்கு ஈடாக குடித்து விட்டு போதையில் நிகழ்த்தும் வாகன விபத்து மரணங்கள் அதிக எண்ணிக்கை உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்.?குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க வேண்டும்.
ஆண்டிற்கு சராசரியாக 5000 ராபீஸ் மரணங்கள் பதிவாகின்றன. பதிவு செய்யப்படாத மரணங்களும் உள்ளது. அதையும் சேர்த்தால் 10,000 என்ற அளவில் கூட இருக்கலாம்.
ஒவ்வொரு உயிரும் நாட்டிற்கும் அதைவிட சார்ந்த குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு உயிரிழப்பு என்பது அந்த குடும்பத்தை முற்றிலும் சிதைத்து விட கூடும்.
ராபீஸ் மரணங்களுக்கு தீர்வு அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கருணைக்கொலை செய்வதும் அந்த இனத்தை அழிப்பதும் தீர்வு அல்ல. அது அயல் நாட்டு நாய்கள் வளர்க்க உதவுமே தவிர நம் நாட்டு இன நாய்கள் அழிகப்பட்டுவிடும் அபாயம் உள்ளதை இங்கு கவனிக்க வேண்டும்.
ராபீஸ் மரணங்களுக்கு யாரெல்லாம் காரணம்?
இதற்கு காரணம் முறையாக நாய்களுக்கு ராபிஸ் தடுப்பூசி செலுத்ததாத உள்ளாட்சி நிர்வாகங்கள், பேராசை ஊழலில் திளைத்த சில மனிதத் தவறுகளே காரணம்.
தெருநாய்கள் குறித்த வழக்கில் மாநில வாரியாக உள்ள நாய்கள் எண்ணிக்கை
அந்த அந்த மாநில அரசுகள் வாங்கிய ராபிஸ் தடுப்பூசி எண்ணிக்கை, செலுத்தப்பட்ட எண்ணிக்கை அது குறித்த ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டதா? அதை தனியார் கால்நடை மருத்துவ மனைக்கு மாறி தவறு செய்யும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
நாய்களுக்கு ஏற்கனவே உள்ள ABC விதிகளை பின்பற்றி இருந்தால் ராபீஸ் மரணங்கள் நிகழ்ந்திருக்காது இவ்வளவு தெரு நாய்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்காது. இதற்கு காரணமானவர்கள் குறித்து ஏதேனும் விசாரணை உண்டா?
ஊழல் லஞ்ச வெறி பிடித்த மனிதத் தவறால் நடந்த மரணங்களுக்கு தெரு நாய்களை அறவே ஒழிப்பு செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
ராபீஸ் நாய்களை விட பல மடங்கு கொடியவர்கள் இந்த இலஞ்ச ஊழலில் திளைத்த மனித மிருகங்கள்.
கோர்ட் சூட் அணிந்து உயர்வான நிலையில் இருந்தால் மற்ற உயிரினங்களை விட உயர்வானது எனது உயிர் என்ற எண்ணம் ஆபத்தானது.அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கான ஆரம்ப புள்ளியும் அதுவே.
தெரு நாய்கள் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை வேண்டும்.
அனைத்து தெரு நாய்களுக்கும் வருடத்தில் இரண்டு முறை ராபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மனித நடவடிக்கைகளால் தாக்கும் குணம் கொண்ட நாய்களை மட்டும் கண்டறிந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் மனிதர்களோடு இணக்கமாக மாறிவிடுவார்கள் பழக்க வழக்கத்தால்.
பொது இடங்களில் சுற்றும் அனைத்து நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைப்பது என்பது அறிவியல் பூர்வமான அணுகுமுறை கிடையாது மற்றும் சாத்தியமற்றது.
ராபீஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை மருத்துவ முறைப்படி கருணைக்கொலை செய்ய வேண்டும்.
முறையாக ABC RULES பின்பற்றினால் தெரு நாய்கள் எண்ணிக்கையை மிகவும் எளிதாக குறைத்து விடலாம்.
வணிகரீதியான நாய்கள் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வதை தடை செய்யலாம்.
இங்கு நாள்தோறும் மனித மிருகங்களால் நடத்தப்படும் குற்றங்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காத வண்ணம் சென்று கொண்டு இருக்கும் வேளையில்?
எதிர் காலத்தில் நம் நாட்டு நாய்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.புதிதாக வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) இந்தியாவில் குற்றங்கள் 2024 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது மற்றும் குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் மனிதக் கடத்தல் வழக்குகள் ஓரளவு குறைந்துள்ளது.
6,000 பாதிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது
நாடு முழுவதும். சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் மாநிலப் போக்குகள் இந்தியாவில் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகை தொடர்பான தற்போதைய சவால்களை எடுத்துக்காட்டுகின்றன:தேசிய கொலை நோக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த மொத்த கொலைகள் விபரம்
2024 ஆம் ஆண்டின் இந்தியாவில் உள்ள என்சிஆர்பி குற்றத்தின் சமீபத்திய புள்ளி விபர அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 27,049 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 27,721 வழக்குகளில் இருந்து 2.4 சதவீதம் சரிவைக் குறிக்கிறது. பணியகத்தால் வரைபடப்படுத்தப்பட்ட முதன்மை மேக்ரோ நோக்கங்களில்
தகராறுகள்: 9,607 வழக்குகள் (முக்கிய காரணம், இது சொத்து, குடும்பம் மற்றும் பணத் தகராறுகளை உள்ளடக்கியது)
தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது பகை காரணமாக : 3,638
வழக்குகள் (எந்த வகையின் கீழ் திட்டமிடப்பட்ட, இலக்கு வைக்கப்பட்ட ஒப்பந்த கொலைகள் அல்லது "சுபாரி" வெற்றிகள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன)
ஆதாயம்: 1,460 வழக்குகள் (கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் அல்லது அதற்காக செய்யப்பட்ட கொலைகள்
நிதி இலாபங்கள்)காணாமல் போனவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள்
உயரும் எண்கள்: காணாமல் போனவர்களில் கணிசமான பகுதியினர், இடம்பெயர்வு தொடர்பான மற்றும் கடத்தல் அபாயங்களை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் உள்ளனர்.
பிராந்திய நுண்ணறிவு: மாநில சட்டசபை சுருக்கங்கள் மற்றும் நீதித்துறை ஆய்வுகள் குறிப்பிட்ட பிராந்திய இடையூறுகளை வெளிப்படுத்துகின்றன:
ஒடிசா: 2024 ஆம் ஆண்டில் 6,838 குழந்தைகளும், 2025 ஆம் ஆண்டில் 8,206 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர், மொத்த காணாமல் போன குழந்தைகளில் சுமார் 87 சதவீதம் பெண் குழந்தைகள்.
பீகார்: ஆண்டுதோறும் சராசரியாக 12,000 முதல் 14,000 வரை காணாமல் போனோர் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, காணாமல் போன குழந்தைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மாநில அமைப்புகள் கண்டுபிடித்து மீட்டெடுக்கின்றன.தேசிய குற்ற ஆவணங்கள் பீரோ (என்சிஆர்பி) வெளியிட்ட சமீபத்திய க்ரைம் இன் இந்தியா 2023 அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 29,670 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கும் தோராயமாக ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட பஞ்சமா பாதகம் என்ற நிலைமை
உரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்ட முழுமையான வழக்குகளின் சூழல் மற்றும் வரலாற்று ஒப்பீடு:
2023 ஆம் ஆண்டு : 29,670 வழக்குகள்
2022 ஆம் ஆண்டு : 31,516 வழக்குகள்
2021 ஆம் ஆண்டு : 31,677 வழக்குகள்
2020 ஆம் ஆண்டு : 28,046 வழக்குகள்2022 ஆம் ஆண்டில், முழுமையான மற்றும் உத்தியோகபூர்வ அரசாங்கத்தால் சரிபார்க்கப்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்ட மிக சமீபத்திய ஆண்டு, மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் வாகனம் ஓட்டியதால், இந்தியா முழுவதும் 4,201 பேர் உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில், இந்த விதிமீறலினால் 10,080 சாலை விபத்துகள் என அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளன.
2023 ஆம் ண்டு : தற்காலிக தரவுத்தொகுப்புகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு பகுப்பாய்வுகள், மொத்த தேசிய விபத்து இறப்புகள் 1.72 லட்சமாக உயர்ந்தாலும், குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்படும் இறப்புகள் 3,600 முதல் 3,700 வரை இருந்தன.
பொதுவான போக்கு: செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தாலும், இந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு அதிக வேகம் முக்கிய காரணமாகும், இது ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகிறது.இந்தியாவில், ஆண்டுதோறும் 2,00,000 பேர் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காததால் இறக்கின்றனர். 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 12 மாத காலப்பகுதியின் சமீபத்திய தரவு மிகவும் கடுமையான நகர்ப்புற வாழ்வியல் நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, 5,500 க்கும் மேற்பட்ட மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் மற்றும் 26 முக்கிய இந்திய நகரங்களில் குறைந்தபட்சம் 34 இறப்புகள் நேரடியாக நடந்தவை கழிவுநீர்-அசுத்தமான குழாய் குடிநீரின் காரணமாக பதிவாகியுள்ளன.
தேசிய நெருக்கடியின் அளவு
உலகளாவிய தரவரிசை: உலகளாவிய நீர் தரக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது.
மாசுபாடு விகிதம்: நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் தண்ணீரில் கிட்டத்தட்ட 70 சதவீதம் அசுத்தமானது.
தண்ணீர் பற்றாக்குறை: ஏறக்குறைய 600 மில்லியன் இந்தியர்கள் - ஏறக்குறைய பாதி மக்கள்தொகை-அதிகமான நீர் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.
நோய் சுமை: வரலாற்று ரீதியாக, 2005 மற்றும் 2022 க்கு இடையில், நீர் மூலம் பரவும் நோய்கள் உள்ளது.
ஒரு சம்பவம் குறித்து பார்வை இது :-பூனை தாக்கிய விபத்துக்குப் பிறகு, “நித்யா” என்ற சிறிய கிளிக்கு சரியாக பறக்கும் திறன் இழந்தது.அது பிலிப்பைன்ஸின் டாவாவில், பாதுகாப்பாளர் மார்க் ஜோசப் கொலாண்டோ வளர்த்து வந்தார். அதை பூனை தாக்குதல் நடத்த அதில் காயத்திற்குப் பிறகு நித்யா என்ற கிளி உயிர் பிழைத்தது
ஆனால் அதனுடைய உடல் இனி சிறகுகள் சேதமாகி பழையபடி பறக்கும் நிலைமை இல்லை.
நிற்கவும் முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை. பறக்க முயன்று சரியாக தரையிறங்க முடியவில்லை.
ஒரு பறவைக்கு இது வெறும் அசைவிழப்பு அல்ல. அது சுதந்திர வான்வெளியை இழந்ததற்கு சமம்.
“என் இரண்டாவது இதயத் துடிப்பு” என் அழைத்த தனது பறவை வாழ்நாள் முழுவதும் தரையில் மட்டும் இருக்க வேண்டுமென்பதை மார்க்கால் சகிக்க முடியவில்லை.
அதனால் அவர் ஒரு அசாதாரணமான விஷயத்தை உருவாக்கினார்.
ட்ரோனுடன் இணைக்கப்பட்ட சிறிய வெளிப்படையான பாதுகாப்புக் குடில்.
பாதுகாப்பானது. எடைக்குறைவானது.
நித்யா எனும் கிளி மீண்டும் காற்றை உணர வேண்டும் என்பதற்காக சிறப்பாக அன்போடு வடிவமைக்கப்பட்டது.
பிறகு, அவர் கிளி நித்யாவை மெதுவாக வானத்தில் உயர்த்தினார்.
வீடியோவில், அந்த சிறிய வெளிப்படையான குடிலுக்குள் இருக்கும் நித்யா, ட்ரோன் மேலே பறக்கும் போது மீண்டும் உலகத்தை ரசிப்பது தெரிகிறது.
அது முழுமையான பறத்தல் இல்லை. ஆனால் அது பறவைக்கு கிடைத்த சுதந்திரம்.
சில நேரங்களில் அன்பு என்பது, நாம் நேசிக்கும் ஒருவருக்கு இனி மகிழ்ச்சி கிடைக்காது என்பதை ஏற்க மறுப்பதாக இருக்கும்.
மார்க் ஒரு ட்ரோன் மட்டும் உருவாக்கவில்லை.
நித்யா கிளிக்கு மீண்டும் வானத்தைத் தொட்ட உணர்வை பரிசாக கொடுத்தார். அது போன்ற நிலை அணைத்து உயிர்களுக்கும் உண்டு,

















கருத்துகள்