முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமாவும்,நடப்பு அரசியல் களமும்

அதிமுக போட்டி அணி சட்ட மன்ற உறுப்பினர்கள்

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயகுமார் ஆகிய மூவர் ராஜினாமா. செய்தனர்

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர், பெரும்பான்மைக்காக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் உள்ள தவெக அதிமுக வை உடைத்தது  21-நாட்களில் ராஜினாமா.செய்தனர் சட்டமன்ற உறுப்பினர் பதவி கட்சி கொறாட முடிவாகாத நிலையில் உத்தரவை மீறியதாகக்  கூற முடியாவிட்டாலும்



வாக்களித்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ளனர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர். இந்த மனு சபாநாயகர் பரிசீலனையில் உள்ள நிலையில் 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுள்ளார் . வரும் காலங்களில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் கோரிக்கை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் இராஜினாமா செய்த மூவரும் 10 ஆம் அட்டவணைப்படி சட்டமன்ற உறுப்பினராக தகுதி இழப்பார்களா ? தகுதி இழப்பை தவிர்க்கவேமுன் கூட்டியே இந்த இராஜினாமாவா?  என்பது தெரியவில்லை. தவெக கட்சி ,விசிக வை முழுமையாக நம்பவில்லை! இன்னும் சில ராஜினாமாக்கள் இனி மேல் வரும்! திருச்சிராப்பள்ளி (கிழக்கு)  தொகுதி 


இடைத்தேர்தலுடன் ராஜினாமா செய்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் எளிதில் ஜெயிக்கலாம்னு ராஜினாமா செய்தவர்கள் நினைக்குறாங்க, திமுக வும், அதிமுகவும் இப்டித்தான் கடந்த காலத்தில் நடத்திய நிகழ்வு,  இன்னும் சில தொகுதி உறுப்பினர் ராஜினாமா நடந்தால் இடைத் தேர்தல் நடக்கும் ஆறுமாத காலத்தில் அரசியல் களம் மக்கள் முடிவில்.தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமைtv வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கடுங்குற்றச்செயல்கள் மீது துரிதமாக வழக்கு பதிவு செய்ய முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவு



தமிழ்நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் - எனவும், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையின் போது முதலமைச்சர்  உத்தரவு                                                              இந்த நிலையில் பல அனுபவ அமைச்சர்கள் மத்தியில் சில அமைச்சர்கள் துறை சார்ந்த அனுபவம் இல்லை எனில் ஊழல் அலுவலர்கள் அதிகாரம் வேலை செய்யும் நமக்குக் கிடைத்த அமைச்சர்கள் சிலர் நல்லவர்கள் எனக் கூறினாலும் வல்லவர்களாக இல்வை ஊழல் நபர்களை அலுவலராக வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு சாத்திமில்லை, இந்து சமயத்திற்கான அறநிலையத்துறை மற்றும் அறக்கட்டளைகள் சம்பந்தப்பட்ட துறை  அதன் அமைச்சர் எஸ். ரமேஷ் 


ஆலயத்தில் சென்று சிலைகள் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க துரிதமாகஆவண செய்வார், மற்றும் அதில் நடந்த குற்றமிளைத்தவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பார் கோயில் நிலங்களில், நந்தவனங்களில் அக்கிரமப்பிரவேஷ ஆக்கிரமிப்புகளை மீட்டு நடவடிக்கை எடுப்பார், கோவிலில் சுவாமிக்கு அணிவிக்க உபயதாரர்கள் வழங்கிய நகைகளை கடந்த கால அரசாங்கம் உறுக்கி விற்பனை செய்ததைக் கண்டுபிடித்து நடவடிக்கை வரும், இந்து சமய வருமானம் இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே செய்வார் என நினைதது முதல்வர் சி.ஜோசப் விஜயின் வேட்பாளர் அமைச்சர் முகம் தெரியாமல் குடும்பம் குடும்பமாக வாக்களித்து, தற்போது வந்த அபைச்சர் 

கோவில்களில் விற்பனையாகும் தின்பண்டங்களில் ஒரு பாக்கெட் விற்பணை முறுக்கை எடுத்து சோதிக்க்கிறார். அதை செய்ய வேண்டிய பணி சுகாதார ஆய்வாளர் பணி கோவில் செயல் அலுவலர் பணி அவரை பணி நீக்கி நடவடிக்கை எடுத்தால் அணைத்து ஆலயங்களில் பயம் வரும் நடவடிக்கை எடுக்க காரணமாக அமையும்.




அந்த முறுக்கு தயாரித்த தேதி மே மாதம் 15 என்று இருக்கிறது, உடனடியாக அமைச்சர் கேட்ட கேள்விதான் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. 

"இங்கே 15 மே என்று இருக்கிறது, இது மே 15 தான் தயார் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிறார், கோவிலில் பிரசாதக் கடை தேவையில்லை அது விற்பனை வருமானம் இதில் அன்னதானம் வேறு அதற்கு பதில் பிரசாதம் இலவசம் எனக் கூறலாம், ஆலயத்தில் விற்பனை கூடாது,

இதை அமைச்சர் செய்தால் பொதுமக்கள் நன்றி  பராட்டுவர். ஆனால் சிறு பிள்ளைகள் பேச்சை நம்பிய மக்கள் வகையா யானை வாயில தப்பி சிங்கம் வாயில் மாட்டிகிட்டோம் எனப் பேசுவது தான் தற்போது உண்மை.  இந்து சமய அறநிலைத்துறையில் மாற்றங்கள் வேண்டும் எதைச் செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என தினமும்  அங்கலாய்ப்பவர்கள்  மாண்புமிகு அமைச்சருக்கு 



அறநிலையத் துறை செயல்பாடுகளில் முன்னேற்றம் தொடர்பாக சில கருத்துகளை தங்கள் பரிசீலனைக்கு முன் வைக்கலாம் 

ஹிந்து சமய அறநிலையத்துறை என்பது வெறும் கோவில் நிர்வாகத் துறை அல்ல. அது ஒரு நாட்டு நாகரிகப் பண்பாடு கலந்த யுக யுக நினைவகம், ஆன்மீக அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு மையம், சமூக ஒற்றுமையின் அடித்தளம், தர்ம சத்திரம் மற்றும் சாவடிகள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் உயிரோட்டம்.  ஒரு அமைச்சர் இந்தத் துறையை சிறப்பாக நடத்த வேண்டுமெனில்,



ஏ பி சி என வகைப்படுத்திய ஆலயங்களில் மற்றும் ஸ்கீம் உள்ள ஆலயங்களில் மற்றும் ஸ்கீம் இருந்தும் நடைமுறைப் படுத்லாமல் ஙெயல் அலுவலர் நிரவாகத்தில்,தக்கார் டிரஸ்ட் மேற்பார்வை செய்யும் ஆலயத்தில் 

“கோவில் வருமானம்” என்ற அளவில் மட்டுமே இல்லாமல்,

“நாகரிக பாதுகாப்பு மற்றும் பக்தர் நம்பிக்கை நிர்வாகம்” என்ற உயர்ந்த கோணத்தில் பார்க்க வேண்டும்.

உண்டியல் வருவாய் என்பது கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் காணிக்கை அதை பிற மதத்தைச் சார்ந்த நபர்கள் யாரும் வழங்குவதில்லை 

1.முதன்மை நிர்வாகக் கொள்கையாக கடைபிடிக்க வேண்டியவை

கோவில் என்பது: அரசின் அலுவலகமும் அல்ல அரசியல் மேடையும் அல்ல என்பதை உணர்ந்து 






அரசுக்கு வருமானம் தரும் மையம் மட்டும் அல்ல வியாயார ஸ்தலமுமல்ல,  மக்கள் ஆன்மீக நம்பிக்கையின் உயிர் மையம்

இதை மேம்படுத்துவது என்பது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பாராம்பரிய உணர்வுகள் சார்ந்தது . அதனை மனதில் கொண்டு நிர்வாகச் சீர்திருத்தமும், தொழில் நுட்பம் சார்ந்த உதவியும் அமைய வேண்டும்

2.கோவில் சொத்து பாதுகாப்பு பல கோவில்களின்: நிலங்கள்குளங்கள் மாட வீதிகள், நந்தவனங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் சுவாமியோ அல்லது அரசோ அலலது அறநிலையத்துறையோ நேரடியாக அவர்கள் வாங்கியவை அல்ல அது ஹிந்து மதத்தை நேசித்த ஆட்சி செய்த நாடுகளின் அல்லது சமஸ்தானங்களின் மன்னர்கள்,மற்றும் தனவான்கள், மற்றும் பக்தர்கள், தர்ம உபயதாரர்கள், மற்றும் ஆலயப் புனரமைப்பு செய்த புண்ணிய ஆத்மாக்களின் கொடை இதில் பழைய மூல ஆவணங்கள் ஆவணக் காப்பகத்தில் உண்டு அது வரலாறு தனி, அவை அணைத்தும் பாதுகாக்க  முழுமையாக டிஜிட்டல் பதிவேடு செய்யப்பட வேண்டும்.

செய்ய வேண்டியது:  மாநில அளவிலான ஒவ்வொரு கோவில் சொத்துக்கும் Unique ID  ஆன்லைன் பொதுமக்கள் பார்வை வசதி, ஆக்கிரமிப்பு கண்காணிப்புப்பிரிவு   மாவட்ட வாரியான சட்டப் பிரிவு  இதைச் செய்தால் :கோவில் சொத்துக்களைத் திருட்டுககள் செய்வது குறையும்வருமானம் உயரும் ஊழல் குறையும்,

3.பக்தர்கள் கோவில் வருகை அதை தொடர்பான நிர்வாகம்  இன்று மக்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்: நீண்ட வரிசைகள், கூட்ட நெரிசல், தரமற்ற குடிநீர், கழிப்பறை சீர்கேடு, தரிசன குழப்பம், தகவல் இல்லாமை, ஆகியது,

4.கோவில் வருமானம் தொடர்பாக அர்சின் வெளிப்படைத் தன்மை, மற்றும் வெள்ளை அறிக்கை,



கோவில் வருமானம் தொடர்பாக Temple Financial Transparency Portal ஒன்றை உருவாக்கி அதில் தினசரி உண்டியல் வருமானம்,  மாதாந்திர செலவுகள், பூஜைகள்,  புனரமைப்புப் பணிகளில் ஊழல் இல்லாத காண்டிராக்டர் ஒப்பந்தங்கள்,

உபயதாரர்கள் உபயம் tracking  மற்றும் தணிக்கை அறிக்கைகள்

இவற்றை பக்தர்கள் மக்கள் பார்க்கும்படி அமைக்க வேண்டியது அவசியம்.

5.கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், தவில், நாயணம் வித்வான் , ஓதுவார், சுயம்பாகம், கார்வார், பேஷ்கார், உள்துறை மணியம், மெய்காவல், சேவர்த்திகள் உள்ளிட்ட பெரும்பாலும்  குறைந்த சம்பளம், பயிற்சி இல்லாமை,  நலத்திட்டக் குறைபாடு  என்ற அளவில் பணி செய்கின்றார்கள்

அர்சகர்களுக்கான பயிற்சி வேத ஆகம விதிகள் பூஜை விதிகள் குறித்து பன் மொழி மற்றும் பக்தர் தொடர்புப் பயிற்சி,    மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஹெல்த் இன்ஷீரன்ஸ், குடும்ப நலத்திட்டங்கள், என்று திட்டமிட்டு ஏற்படுத்தலாம் 

6 கோவில் பாரம்பரிய பாதுகாப்பு பல ஆயிரம் ஆண்டுகள்                                               பழமையான கல்வெட்டுகள், செப்பப்படடயங்கள்  ஓவியங்கள், சிற்பங்கள்,அழிந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க டிஜிட்டல் மியூசியங்கள் அமைக்கப்படவேண்டும் 





7 கோவில்  சார்ந்த பொருளாதார வளர்ச்சி பெரிய கோவில்களை சுற்றி: சிறு தொழில்கள், பூ வியாபாரம்  கைவினை,    பிரசாதம், சுற்றுலா  என்று வளர இயலும். இதனை ஒழுங்கே முறைப்படுத்தி Temple Economy Zones,  திட்டமிட்டு அமைக்கலாம்

8 ஆன்மீகம், கலாச்சார, பண்பாட்டை இளைஞர்களுக்கு கொண்டு செல்லுதல், இன்றைய இளைஞர்கள், யுவதிகளுக்கு கோவில்களை ஆன்மீக மையமாக அல்ல விழா அல்லது சுற்றுலா இடமாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்களின் சமகால தொழில் நுட்ப, பன்னாட்டு அறிவைக் கருத்தில் கொண்டு  temple history digital museums, guided heritage tours



மாணவர்களுக்கு கலாச்சார வகுப்புகள், devotional music training  தமிழ் தேவாரம்,திருவாசகம் திவ்யப் பிரபந்தம், உள்ளிட்ட அணைத்து பக்தி இலக்கியப் பயிற்சி என்பதாக முயற்சி செய்யலாம்

9.கோவில் நிர்வாகத்தில் நிதி செயல்பாட்டில் ஊழலைத் தவிர்க்க தகுதியான தணிக்கையாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  நிதி வல்லுனர்கள், பக்தர்களின் பிரதி நிதிகள், என குழுக்கள் அமைத்து நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும்

10 மாவட்ட வாரியான மதிப்பீட்டு முறை :-அமைச்சர்: மாதந்தோறும் மாவட்ட ஆய்வு செய்ய வேண்டும்.  இதில் மதிப்பீடுகளுக்கு உள்ளூர் கட்சிக்காரர்கள் பேச்சு கேட்காமல் பக்தர்கள் திருப்தி, வருமான உயர்வு, சுத்தம், பாதுகாப்பு cஎன்று சப்ஜெக்ட் மட்டும் பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்



ஸ்ரீ ரங்கநாதன் அமைச்சருக்கு துணை வர வேண்டும் "கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,

மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,

ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்

விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே"

எல்லோருக்கும் தலைவனான பெருமாளை, வணங்கியவர்கள் பெரும்பேறு பெற்றார்கள் . நாமும் பெருமாளை அப்படியே வணங்கி வாழ்வோம் என சொல்வது திருவாய் மொழி தந்த வேதம் தமிழ் செய்த பாண்டியன் மன்னன் மாறன் காலம் தொட்டு இறைவனின் சொத்து 3 ஆயிரம் கிலோ தங்க நகைகளை கடந்த திமுக ஆட்சியில் உறுக்கி என்ன செய்தார்கள் !

அதில் சம்பந்தப்பட்ட அதிகாரம் மிக்க அதிகாரியானவர்  ஐரோப்பாவுக்கு போன அறநிலையத்துறை கமிஷ்னர் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ்.!

இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக ஸ்ரீதர் பொறுப்பேற்றது முதலே, துறையில் ஒருவித சுணக்கம் நிலவி வந்தது. ஆணையர் என்ற கம்பீரமான பதவியில் அமர்ந்திருந்தாலும், அவரிடம் எந்தவிதமான சுறுசுறுப்போ அல்லது அறக்கட்டளை துறையை ஆன்மீகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற செயலோ எண்ணமோ இருந்ததில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு பலமான அரசியல் காரணமிருந்தது.

துறை முழுவதும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எனும் ஊழல்வாதியின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்ரீதரும் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளவும், எந்தப் பிரச்சினையிலும் சிக்காமல் இருக்கவும் முன்னாள் அமைச்சரின் நிழலாகவே நடக்க தன்னை பழகிக்கொண்டார். அமைச்சரின் தயவிருந்ததால், கோப்புகளைப் பார்ப்பதோ,கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதோ அவரது வேலைத் திட்டத்தில் இல்லை. காலத்தைக் கடத்துவது மட்டுமே அவரது ஒரே குறிக்கோளாக இருந்ததன் விளைவாக, அவருக்குக் கீழ் சபாடினேட் சர்விஸ் பணியாற்றிய இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என யாருக்கும் முறையான வழிகாட்டுதல்களை எதுவும் ஸ்ரீதர் வழங்கவில்லை.


முன்னால் அமைச்சரைச் சார்ந்திருக்கும் படியே வழிவகை செய்தார். இதனால் நேர்மையாகப் பணியாற்ற நினைத்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர். அதில் இனை ஆணையர் பாரதி போல பல கோடி ஊழலும் செய்தனர்.

ஸ்ரீதருக்குள் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அடுத்த தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும், எப்படியும் முன்னாள் அமைச்சருக்கு மீண்டும் அதே துறைதான் கிடைக்கும், நாமும் இப்படியே எவ்விதப் பொறுப்புமில்லாமல் காலத்தைக் கழித்துவிடலாம் என்று கணக்குப்போட்டார். ஆனால் கடவுள் நிந்தனை விடுமா? காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே!

தேர்தல் முடிவுகள் வந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் விசில் ஊதி தலைகீழாக மாறியிருந்தது. நம் போல சிலர் எதிர்பார்த்தாலும் பலர் அதை மறுத்த நிலையில் வேறு விதமாக, தவெக வெற்றி பெற்று, புதிய அரசை கூட்டணியாக அமைத்தது.

திடீரென ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றம் ஸ்ரீதரின் தலையில் இடி போலவே இறங்கியது. தான் பாதுகாப்பாக நினைத்த முன்னால் அமைச்சரின் நிழல் இப்போது இல்லை. புதிய தவெக கூட்டணி அரசு, ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்கிற பயம் அவரைத் ஆட்கொண்டது.

விசாரணைகளும், துறை ரீதியான நடவடிக்கைகளும் தன் பக்கமாகத் திரும்புவதை உணர்ந்த ஸ்ரீதர், தற்காலிகமாகத் தப்பிக்க ஒரு திட்டம் போட்டார். விடுப்பு எடுத்துக் கொண்டு, குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு உல்லாசச் சுற்றுலாவும் சென்று வந்துள்ளார்.

அதற்குண்டான செலவுகளை தென்சென்னையின் புகழ்பெற்ற நிலை-1 திருக்கோயிலின் தக்கார் முழுமையாக ஏற்றுக்கொண்டார்.    அந்த தக்கார் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். தயவால் பல அதிகாரிகளை தன் வசப்படுத்திக்கொண்டு, தனக்கு வேண்டியதை ஊழல் மூலம் சாதித்துக்கொண்டார். குறிப்பாக நிலம் தொடர்பான அனைத்து வேலைகளையும் கனக்கச்சிதமாக செய்து பல கோடிகளை லஞ்சம் லாவண்யம் மூலம் சுருட்டிவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னால் இவர் செய்த தெய்வ குற்றம் மற்றும் பாவத்தின் பலனாக பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணையர் ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். மற்றும் 

குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்துகொண்டு, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஒசியில் உல்லாசச் சுற்றுலா சென்று வந்த விபரம் துறை சார்ந்த நேர்மையான சில அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. ஸ்ரீதர் போன்ற அதிகாரிகளின் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், அது புதிய த.வெ.க. காங்கிரஸ் சார்ந்த கூட்டணி அரசுக்கும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் யின் பெயருக்கும் தேவையில்லாத அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

அதாவது இந்து சமய அறநிலையத்துறையியில் ஆணையராக இருந்த குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., முரளிதரன் ஐ.ஏ.எஸ்., ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். என திமுக ஆட்சி ஐந்து வருடங்களில் தமிழ்நட்டின் கோவில்களில் இருந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்தது. ஹிந்து கோடீஸ்வரரர்கள்,  ஹிந்து தொழிலதிபர்கள், கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த நகைகள், ஹிந்து பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய 200ஆண்டுகளாக பாதுகாத்த  சுவாமிக்கு அணிவிக்கும் அலங்காரத் தங்கங்கள் இவைகளிலிருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ எடைகொண்ட தங்கம் வெள்ளி நகைகள், மற்றும் வைர, வைடுரிய நகைகள் தணிக்கையில் கொண்டுவரவில்லையாம். முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு 3 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விஷயம் நன்றாகவே தெரியுமாம்.

தணிக்கை அதிகாரிகள் தங்க நகைகளைப் பற்றிக் கேட்டால் பல ஊழல் பெருச்சாளிகள் தின்று விட்டதாக கணக்கில் கொண்டுவரலாம் என்ற யோசனையில் இருக்கிறார்களாம். அதை ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இந்தப் பிறவியில் அவருக்கு கிடைத்த புணணியமாக இறை தொண்டாக இந்த ஊழல் வாதிகளிடம் இருநது சபரிமலை வழக்கு போல நடவடிக்கை நடத்த வேண்டியது அவசியம்.  ஊழல் ஒழிப்பு எனக் கூறும் முதல்வர், மற்றும் அமைச்சர் நடவடிக்கை எடுத்தால் சிவனருள் உண்டு. அமைச்சரை பிராமணன் என வசைபாடும் திகவின் கி. வீரமணி யாதவ் சம்மந்தி மலேசியாவில் வீரமா காளியம்மன் கோவில் கட்டிய அகமுடையர் பிள்ளை எவ்வளவு முற்போக்கு பேசினாலும், கருப்புச் சட்டை போட்டாலும் பெரியார் எனும் ஈ.வே. ராமசாமி சிலைக்கு மாலை போட்டு அவர் உருண்டு புரண்டாலும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா வை அந்தனராக இருந்தும் சமுக நீதிகாத்த வீராங்கனை என அழைத்து விருது வழங்கிய நிலையில் தற்போது அமைச்சர் எஸ். ரமேஷை பிராமனர் எனவும், பெண் ஆணையரை பிராமணர் எனவும் பேசியது அவர்களை மாற்றி மீண்டும் குமரகுருபரன் வந்தால் ஊழல் செய்த பழைய திமுக மந்திரியை காப்பாற்றும் நோக்கம் அதில் அப்பட்டமாகவே தெரிகிறது, கடவுள் மறுப்பாளரான கி. வீரமணிக்கு கடவுள் ஆலயத்தில் கருத்துக் கூற அவசியம் என்ன ஊழல் தான் ஜாதியை ஒழிக்க' போராடுவதாக சொல்லிக்கொள்ளும் கி.வீரமணி போல பெரியாரிஸ்ட்களுக்கு அமைச்சர் ஆனாலும் கடைசி வரை பாப்பான் தான். 

அவரிடம்  அறிவை அனுபவத்தைப் பார்க்காமல் ஜாதியை மட்டுமே பார்ப்பார்கள்.

பெரியாரிஸ்டாக இருந்து மறைந்த பல பிராமணர்கள் 'பெரியாரிஸ்ட்'களுக்கு ஜால்ரா போடும் வரை முற்போக்காளராகவும் எதிர்த்து கேள்வி கேட்கும் போது பார்ப்பானாகவும் தான் தெரிந்தார்கள்.இனியும் தெரிவார்கள். 

அதற்கு உதாரணம் வைணவ கமல்ஹாசன் , சைவ ஞாநி சங்கரன், ஆர்.எஸ். பாரதி எல்லாம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.

இன்றைய தமிழ்நாடு அரசின் இந்து சமபய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இன்னும் எத்தனை பெரியார் சிலை மாலை போட்டோ ரிலீஸ் பண்ணினாலும் கடைசி வரை அவர்களுக்கு அவர் பார்ப்பான் தான். ஆனால் நமக்கு நாம் விரும்பும் நல்ல இளைஞர் அமைச்சர்.

இது மாறாது. ஏனென்றால் பெரியார் எனும் ஈ. வே.ராமசாமி சொல்லிக்கொடுத்த பாடம் இது தான். ஒரு ஜாதியின் மீதான வன்மம், துவேஷம்

"வைதீக பிராமணனை விட முற்போக்கு பிராமணன் ஆபத்தானவன்" என்பது கமலஹாசன் விஷயத்தில் கண்ட உணமை. அதை நாம் கூறுவதை விட கௌதமி தடிமல்லா கூறினால் சரியாக இருக்கும். முதலமைச்சருக்காக முதலான         அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்ன ஜாதியென்றே கட்சியில் தெரியாமல் தான் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் யகுதியைச் சேர்ந்தவரை வைணவப் பிராமணர்களும், அதிகம் முத்தரையர்களும்  வாசிக்கக் கூடிய ஸ்ரீ ரங்கம் தொகுதியில நிக்க வைத்ததாகக் கூறுவதை நம்ப வேண்டும்.

கொஞ்சம் அதிகமாகவே நடக்கும் டிஜிட்டல் பிரச்சாரத்தை வைத்து சின்னப் பிள்ளைகளை வேணுடுமானால் ஏமாற்றலாம், எல்லோரையும் முடியாது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பட்டியல் அட்டவணை ஜாதிப்பாசம் அதிகம் என்பதை அவர் விசிகவில் இருந்த போதே நாடறியும். நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கூறுகிறார் இது தவெக கட்சி இல்லை ஆகவே கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர்வைக்கப் போவதாகக் கூறகிறார் 

தவெக தலைமையிலான கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்படும் - காங்கிரஸ் வருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர்.கருத்து ஆக மக்கள் வாக்களித்து ஏமாந்த நிலை.ஒரு கதை இங்கு கூறியாக வேண்டும் "ஒரு புலி வேடனைத் துரத்தியது, வேடன் அருகிலிருந்த மரத்தில் ஏறினான்,  அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. அப்போது  புலி கரடியிடம்  "இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு" என்றது.

 ஆனால் கரடி  "இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன்" எனக் கூறிவிட்டு கரடி உறங்கிற்று.

சற்று நேரம் கழித்து புலி வேடனிடம்: "எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்". என்றது  வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்,

கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றை மீண்டும் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மரத்தில் ஏறியது,

அப்போது புலி கரடியிடம்.: "இந்த மனிதன் நன்றிகெட்டவன்.  சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என உன்னையே தள்ளிவிட்டான். அவனை இப்பொழுதே தள்ளிவிடு" என்றது.  அதற்கு கரடி : "எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக, நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியதாகும்" என்றது.  வேடனைக் கீழே தள்ள மறுத்தது. துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது  சாதாரண மனிதர்களின் இயல்பு. 



நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கமான குணம் உள்ளவர்கள், அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.

எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும், யார் எப்படி நடந்தாலும், தன்னுடைய ஒழுக்கமான குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் திக வின் கி.வீரமணி இதில் எது என்பதே. பகுஜன் ஜமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கு. அதில் காங்கிரஸ் பிரமுகர் மீது குற்றம் சுமத்திய நபர்கள் பலர் உண்டு 

இன்னும் பல சென்னை நகர விசிக கட்சி வரவு செலவுகள். வசூல்களுக்கு இப்போது நடப்பது நன்றிக் கடன். இதில் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) இடைத்தேர்தலில் விசிக திருமாவளவன் பானையில்  தவெகவின் ஆதரவில் போட்டியிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்குமா. பரிச்சைக்குத் தயாராகும் கூட்டணி. மக்கள் முடிவில் தெரியும்.இந்தியாவில் இதுவரை நடந்த அட்டவணை பட்டியல் ஜாதி அரசியல் ஏன் இதுவரை தேறாமல் போனது என்றால், அவர்களுக்கு நானே மீட்பர் எனக் கிளம்பும் யாரும் அரசியல் பரிசுத்தர்கள் இல்லை என்பது தான் உண்மை .




பல உதாரணங்கள் உண்டெனினும் பெரும் உதாரணம் படு கொலையான ஆம்ஸ்ட்ராங்,  பகுஜன் ஜமாஜ் கான்ஷிராம் பணத்தால் வளர்ந்த, (தேவநாதன் யாதவ், அம்பேத்கார் ராஜன், ஆம்ஸ்ட்ராங்) இந்த மூவரில் ஒருவர் படுகொலையான ஆர்ம்ஸ்ட்ராங் தான் மாநிலத் தலைவராக இருந்த வட மாநிலக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் தலைவர் கானஷிராம் உறுவாக்கிய அவரது ஆதரவாளர் தான் அட்டவணை படடியல் ஜாதி சார்ந்த முன்னால் உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி.  இந்தியாவின் பிரதமர் ஆகப்போகிற முதல் அடடவணை பட்டியல் ஜாதி அரசியல்வாதியாக ஆரம்பத்தில் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்பட்டவர். பிறகு  அடிப்படைவாதமாக மாறி பிரிவினை வாதிகள் சிலர் மட்டுமே கூறும் ஹிந்துத்துவ எனும் அரசியலில்   ஒருகட்டத்தில் சமரசம் செய்து கொண்டார். அட்டவணை பட்டியல் சார்ந்தோரின் நலன்களுக்காக பாடுபடுவதாக மக்களால் கருதப்பட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, தொடக்கத்தில் அந்த சமுதாயத்தினரின் நலன்கள் சார்ந்த பிரச்னைகளுக்காக மட்டும் தீவிரமாகக் குரல் எழுப்பியது. பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிறுபான்மையினர், முன்னேறிய வகுப்பினர் ஆகியோருக்கும் கட்சிக்குள்ளும் அரசு பதவி வகிக்கவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமை வாய்ப்பு அளித்தது. மிகபெரும் பிம்பமாக உருவானார்,உத்திரப் பிரதேச மாநில முதல்வர் பொறுப்பும் அவருக்கு தேடிவந்தது. அட்டவணை பட்டியல் சமூக மக்களின் நம்பிக்கை என அவர் பெரும் வடிவம் பெற்றார். 

அட்டவணை பட்டியல் ஜாதி மக்களுக்கு  பாதகம் நிகழ்ந்தாலும் கூட தனது உயர் ஜாதிக் கூட்டாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் மாயாவதி தானே காத்தார். உயர் ஜாதி வாக்கு வங்கியைக் குறிவைத்து அவர் நடத்திய அந்த சதுரங்க ஆட்டத்தில் மாயாவதியால்  வெற்றியடைய முடியவில்லை. கடைசியில் இரண்டு பக்கமும் வாக்குகளை இழந்து பரிதாபமான ஒரு இடத்தில் வந்து தான் தற்போது நிற்கிறார்.  

அட்டவணை பட்டியல் ஜாதிகளுக்கு என்ன செய்தார் என்றால் ஒன்றுமில்லை அம்பேத்கார் சிலையும் மற்றும் யானை சிலையும் தவிர வேறு சாதனை இல்லை, மாறாக செலவி ஜெ.ஜெயலலிதாவின் சாயலில் இல்லை அவரை விட மேலாகவே ஆட்சி அதிகாரம் என ஆட்டம் போட்டார். ஊரெல்லாம் தன் சிலையும்,தன் கட்சியின் யானை சிலையுமாக திறந்து அவர் செய்த அட்டகாசத்தின் பலன், அடுத்த தேர்தலிலேயே கடுமையாக எழமுடியாமல் அடித்து வீழ்த்தபட்டார். இந்த அட்டவணை பட்டியல் ஜாதி இம்சைகளுக்கு, யோகி ஆதித்யா நாத் சாமியார் குரூப் பரவாயில்லை என அங்கு தற்போது பாஜக வந்துவிட்டது. இதைத்தான் 

ராம்விலாஸ்  பாஸ்வான் ஒருகாலத்தில் செய்தார், ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்த ரீதியான தலைவர்களில் மிக முக்கியமானவராக அறியப்பட்டார், அடிப்படை ஹிந்துத்துவ ஆற்றல்களுக்கு எதிரான போரில் முக்கியமான தளகர்த்தராக வி. பி. சிங், எச் டி.தேவகௌடா, ஐ. கே.குஜ்ரால் உள்ளிட்ட பிரதமர் அரசுகளில் பதவியில் இருந்தவர். அவரது பதவி ஆசை அதே வலது சித்தாந்த அரசியலுக்குள் அவரை மூழ்கடித்தது. பீகார் முதல்வராவதற்கான கனவில் ராம் விலாஸ் பாஸ்வான் ஒரு பட்டியல் அட்ட்டவணை ஜாதி கூடுதல் இஸ்லாமியர் சூத்திரத்தை உருவாக்க விரும்பினார், ஆனால் அது நிதீஷ்குமாரின் காரணமாக இதுவரை கனவாகவே போய்விட்டது.

பீகாரின் 16 சதவீத அட்டவணை பட்டியல் ஜாதி மக்களில், நிதீஷ் சுமார் 11 சதவீத மக்களை மகாதலித் என புதிய பிரிவில் சேர்த்துள்ளார். இதன் காரணமாக மகாதலித் ஜாதிகள் நிதீஷுடன் நிற்கத் தொடங்கியுள்ளன. 

அதே சமயம், நிதீஷ் குமார், பாஜகவுடனான தனது நட்போடு சேர்ந்து, பல விஷயங்களில் முஸ்லிம்களை எதிர்ப்பதன் மூலம் ஏராளமான வாக்குகளைப் பெறுகிறார். இதன் காரணமாக பீகாரில் கூட ராம் விலாஸ் பாஸ்வானால் தலித் கூட்டு முஸ்லிம் கூட்டணியை உருவாக்க முடியவில்லை. 2009 ஆம் ஆண்டு மக்களவை மற்றும் 2010 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், லாலு பிரசாத் யாதவுடன் சேர்ந்து ராம் விலாஸ் பாஸ்வான் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்த முயன்றார், ஆனால் அதிலும் அவருக்கு தோல்வியே கிடைத்தது . கடைசியில் அவர் ஆரம்பத்தில் அரசியலில் தூக்கி பிடித்த அட்டவணை பட்டியல் ஜாதி சித்தாந்தங்களுக்கு பொருந்தாத ஒரு அடையாளத்தோடு ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே இறந்து போனார். இன்று மகன் பாஜகவின் கூட்டணி அரசின் அமைச்சர்,

தமிழ்நாட்டில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒரு காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் உரிமைக்காக போராடும் ஒரு அடடவணை பட்டியல் ஜாதிப் போராளியாக அறியப்பட்டவர், அவருடைய அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைப் படைத்தவர்.இப்போது தமிழக அரசியல் களத்தில் டாக்டர் கே.கிருஷ்ணசாமி பதவிக்காக அவர் சார்ந்த மக்களை வைத்து வெளிப்படையாக ஹிந்துத்வ சார்பு அரசியல் செய்யம் ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கப்படுகிறார் அவரை உயர்த்திப் பிடித்தவருக்கு அரசியல் அடையாளம் கொடுத்த அட்டவணை பட்டியல் ஜாதிப் போராளி என்னும் அடையாளத்தை அவர் இழந்து பல காலம் ஆகிறது .

எஞ்சி இருந்தது விசிக திருமாவளவன் மட்டுமே.

அவர் மீது வலதுசாரிகள் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை, அவரது அரசியல் பாதையை நாக்பூர் (RSS /BJP) நோக்கித் திருப்பிவிட்டால், ஏறத்தாழ முற்றிலுமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றிய மாதிரி என்றொரு கணக்குப் போட்டு அவருக்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டன. கடந்த 25 ஆண்டுகளில்  திருமாவளவன் வலதுசாரிகளுக்கு எதிரான உறுதியான கருத்தியல் பயணம் திசை மாறவில்லை. வருங்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எளிதாக அதிமுகவின் முதுகில் ஏறி சட்டமன்றத்துக்குள் நுழையலாம் என்கிற அவர்களின் பகற் கனவை மெய்ப்பிக்க வேண்டுமென்றால் , அவர்கள் திருமாவளவனை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியாக வேண்டும்.


இல்லையென்றால், திமுகவின் தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி உருவாகும் போது, அதை சித்தாந்த ரீதியாக ஒருங்கிணைக்கக் கூடிய மிகப்பெரிய ஆற்றலாக  திருமாவளவன் இருப்பார் என்பது வலதுசாரிகள் முழுமையாக உணர்ந்து இருக்கும் உண்மை. அதில் தற்போது தவெக முந்தியது 

நாக்பூர் RSS குருமார்கள் கடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து  தமிழ்நாடு பாரதீய ஜனதாவுக்கு வழங்கிய முக்கியமான அசைன்மென்ட்  திருமாவளவனை திமுகவிடம் இருந்து  எப்பாடுபட்டாவது தனிமைப்படுத்துவது. 

அதற்காக அவர்கள் விஜய் மூலமாக விரித்த வலையில் சிக்கி இந்திய அளவிலும் தமிழகத்திலும் அட்டவணை பட்டியல் ஜாதி அரசியலின் பிரதான முகமாக பார்க்கப்பட்ட தன்னுடைய அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறார் திருமாவளவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பதவிக்காக கொள்கைகளில் கொஞ்சமும் யோசிக்காமல் சமரசம் செய்து கொள்ளும் அரசியல்வியாதிகளுக்கு நடுவில் , தன்  அரசியல் கொள்கையை எந்த தருணத்திலும் நீர்த்துப்போக விடாமல்  விளிம்பு நிலை வாழ் மக்களோடு, அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து, கண்ணிய எல்லைகளை மீறாத அரசியல் நாகரீகத்தோடும், அரசியல் அடக்குமுறைகளை கண்டு பணியாத நெஞ்சுரத்துடனும் இதுவரை களமாடி வந்த  பட்டியல் ஜாதி மக்கள் போராளி திருமாவளவன் இன்று தன்னுடைய அரசியல் மற்றும் அட்டவணை ஜாதி போராளி அடையாளங்களை மொத்தமாக தொலைத்துவிட்டு விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியையும் பெருமளவில் இழந்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தவெக ஆதரவில் அமைச்சர் பதவி 

பட்டியல் ஜாதியில் ஒரு பிரிவு மக்கள் அரசியல் என்பது அவர்களுக்கான அரசியலே அல்ல , யாரோ ஒருவர் ஆட்சிக்கு வருவதற்காக ஓட்டை பிரிக்கும் தந்திரம். அதைத்தான் பட்டியல் ஜாதிகளின் அரசியல் கட்சிகள் அம்பேத்கர் பேரை முன்னிறுத்தி நாடெங்கும் செய்து வருகின்றன‌. அவர்களுக்கு எதிரிகள் அவர்களே தான் என்பதைத்தான் அட்டவணை படடியல் ஜாதி அரசியலைப் பேசும் திருமாவளவன் மற்றும் வி சி கட்சி மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...