காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா செல்ல வேண்டும் என்று விரும்புகிறது
இந்த மாற்றம் சுமூகமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முதல்வர் இந்த யோசனையை பரிசீலிக்க கால அவகாசம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் தலைமைத்துவத்திற்கான அனைத்துப் போட்டிகளுக்கும் மத்தியில், மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதையும், கட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்தை மறுசீரமைப்பதாக, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, புதிய தலைவராக சிவக்குமாரை அமர்த்த வழி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.
மாற்றம் சுமூகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த யோசனையை பரிசீலிக்க முதலமைச்சருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மூத்த அரசியல் வாதி என்பதை மதித்து, காலக்கெடுவை நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறப்படுவதால், இதில் அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, பெங்களூரு செல்வதற்கு முன், டில்லியில் நடந்த இரவு விருந்தில், தனக்கு விசுவாசமான அமைச்சர்களிடம், விரைவில், காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கொண்ட கட்சிக் கூட்டத்தை கூட்டி, பதவி விலகுவது குறித்து, அறிவிப்பேன். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்ற நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மாநில த்தலைவர்கள் சித்தராமையாவை ஆதரித்து, அனைத்து விருப்பங்களையும் கூர்ந்து கவணித்து மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், வரும் நாட்களில் கர்நாடக அதிகாரம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். காங்கிரஸ்,கட்சி சித்தராமையா மற்றும் சிவகுமார் ஆகியோருடன் ஆறு மணி நேரம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதில லிங்காயத்துகள் சார்பாக சித்தராமையாவையும், ஒக்கலீக கௌடாக்கள் சிவக்குமார் தரப்பு என இரு தரப்பிலும் அரசியல் பலப்பரிட்சை நடக்கிறது.
கர்நாடகாவில் தற்போதைய முதல்வர் சித்தராமையா மாற்றப்பட்டு, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி சித்தராமையா பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுப்பது குறித்து டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரிடமும் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர், பதவியை விட்டுக்கொடுக்கும் சித்தராமையாவுக்கு நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் பதவியும், அவரது மகன் யதீந்திராவுக்கு கர்நாடக துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் சிவ குமார் இடையில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இருவரையும் டில்லிக்கு அழைத்தது. நேற்று முன்தினம் இரவே, இருவரும் தனித்தனி விமானங்களில், தங்கள் ஆதரவாளர்களுடன் டில்லிக்கு பயணித்தனர். டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு நேற்று காலை சென்ற முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்று தனி அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் இருந்தார்.அவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பட்டியல் அட்டவணை சமூகத்தவர் ஆக மூன்று பேரும் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் சிவ குமாருடனுடன் தனியாக ஆலோசனை செய்தனர். பின், சித்தராமையா, சிவகுமார் இருவரையும், நேருக்கு நேர் அமர வைத்தும் பேசினர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுலும் அங்கு வந்தார். சித்தராமையாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவரிடம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின், ராகுல் காந்தி புறப்பட்டுச் சென்றார். சித்தராமையா, சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கட்சி அலுவலகத்திலேயே மதிய உணவு உண்டனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே தவிர மற்ற நான்கு பேரும். வெளியே வந்தபோது சிவகுமார் சிரித்த முகத்துடன் காணப்பட்டார்; சித்தராமையாவின் முகம் இறுகிய நிலையிலிருந்தது.
ஆலோசனைக்கு பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், “கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவில் எம்.பி.,யாக உள்ள நான்கு பேரின் பதவிக்காலம், கர்நாடக மேல்சபையில் ஏழு பேரின் பதவிக்காலம் முடிவதால், தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம். மற்ற எந்த விஷயம் பற்றியும் பேசவில்லை. ஊகங்களுக்கு இடமில்லை,” எனக் கூறினார். சித்தராமையா, சிவகுமார் இருவரும் ஊடகத்தினரைச் சந்திக்காமல், தனித்தனிக் காரில் சென்றனர். இதையடுத்து, சித்தராமையாவும், சிவகுமாரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே, ராகுலும், சித்தராமையாவும் தனியாக ஆலோசனை நடத்திய போது, என்ன பேசினர் என்பது குறித்து தகவல் வெளியாகியது. 'நீங்கள் எட்டு ஆண்டுகளாக முதல்வராக சிறப்பாகப் பணியாற்றி உள்ளீர்கள். உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, தேசிய அரசியலுக்கும் தேவை. நீங்கள் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தால், உங்களை ராஜ்யசபா எம்.பி., ஆக்குவதுடன், உங்கள் மகன் யதீந்திராவை கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் ஆக்குகிறேன்' என, ராகுல் காந்தி உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. முதலில், இதை ஏற்க மறுத்த சித்தராமையா, பின் ஒருவழியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எப்படியும் இன்னும் சில நாட்களில், முதல்வர் பதவி விவகாரத்தில், கட்சி மேலிடம் ஒரு முடிவு எடுப்பது உறுதி எனத் தெரிகிறது.













கருத்துகள்