சென்னை திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்.
"சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கத் தவறியதால், காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் சஸ்பெண்ட்" என, காவல் துறைத் தலைமை தெரிவித்தது.
சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்கத் தவறியதாக, சென்னையில், இதுவரை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இது புதிது. இப்போது தான் முதல்முறையாக தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது. சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியிலுள்ள மதுபானக் கடைக்கு அருகே, அதிகாலை வேளையிலேயே தனி நபர்கள் மாமூல் மூலம் கள்ளச்சந்தையில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அதோடு கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதை மாமூல் வாங்கி தடுக்கத் தவறிய, சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கண்டுகொள்ளாமல், கடமை தவறி அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளது. வரவேற்கிறோம்.
அதே போல திருவாரூர் மாவட்டம் கீழகாவாதுகுடி கிராமத்தை சேர்த்த பாரதிதாசன். வீட்டுமனை ரசிது வாங்குவதற்காக திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாமிநாதனை நாடியிருக்கிறார் அப்போது வீட்டுமனை ரசிது வழங்குவதற்காக 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதைத் தொடர்ந்து பாரதிதாசன் திருவாரூரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதனிடம் கொடுப்பதற்காக பாரதிதாசன் சென்று கொடுத்த போது அங்கு மறைத்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் அவருடைய அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகிய இருவரையும் லஞ்சம் பெற்ற கையடன் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறி விட்டு சுரேஷ் குமார் 3 வது மடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்மந்தமாக அரசு அலுவலர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தார்கள். இந்த தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விசாரணை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்தப்படுமென திருவாரூர் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் கருண் காரட் தெரிவித்தார். இந்த விசாரணையின் இறுதியில் வெளியாகும் அறிக்கையைகா கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார். லஞ்சம் வாங்கிய குற்றவாளிக்கு ஆதரவாக மக்கள் வரிப்பணத்தில் மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும் அதுவே குற்றம், அரசு ஊழியர்கள் சங்கப் போராட்த்தை வண்மையாக கண்டிக்கிறோம்.
நீங்கள் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று போராடுகிறீர்களா? அல்லது லஞ்சம் வாங்கியவருக்கு ஆதரவாகப் போராடுகிறீர்களா?அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையினரைக் கண்டித்துப் போராடுகிறீர்களா?
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும்
எத்தனை மணிக்கு அலுவலகம் செல்கிறீர்கள்?
10 மணிக்கு அலுவல் நேரம் என்றால் 12 மணிக்கு தான் அலுவலக வாசலையே எட்டி பார்க்கிறீர்கள்! மாலை 3மணி 4.மணி 5 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடுகிறீர்கள்!
சில அலுவலர்கள் காலையிலேயே போதை!
போதையில் அலுவலகத்திற்கு வரும் நபர்களை நாங்கள் அடையாளம் காட்டட்டுமா?
அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது
பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்தால் அதில் பத்து சதவீதம் மட்டுமே நடவடிக்கை இதில் விசாரணையை எதிர் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு சங்கம் போராடுமா? இது என்ன நியாயம்?
"தங்கம் சாதிக்காகதை சங்கம் சாதிக்கும்" என்பார்கள்.உங்கள் சங்கம் நேர்மையான உண்மையான லஞ்சம் வாங்காத, சாமான்ய மக்களுக்காக உழைக்கும் அலுவலர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்! மேல் அலுவலர்களால் அவர்கள் பாதிக்கப்படும் போது நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்!
திருத்துறைப்பூண்டியில் லஞ்சம் வாங்காத அதிகாரிகள் அலுவலர்கள் இருந்தால் பட்டியல் போடுங்கள் பார்ப்போம்!
திருத்துறைப்பூண்டி வட்டாட்சியராக பணிபுரிந்த மலர்க்கொடி மீனியல் வேலைக்கு 8 ,10,12 லட்சம் என ஏலம் போட்டதை ஆதாரத்தோடு நமது இதழ்கள் அரசியல் ஒற்றன், அமைதிப்படை, மாவட்ட முரசு, பப்ளிக் ஜஸ்டிஸ், ஈகிள் ரவுண்ட்ஸ் உள்ளிட்ட புலனாய்வு மாத இதழ்களில் செய்தி வெளியிட்டது
என்ன நடந்தது? அந்த அம்மாவுக்கு புரோமோஷன் மேல புரோமோஷன் இதுவே வெட்கக்கேடு! இல்லையா?
அடுத்த தாசில்தார் பரமேஸ்வரி, லஞ்சத்தின் மொத்த உருவம்! அவர்மீதும் செய்தி வெளிட்டோம் புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் இல்லை
திருக்கொள்ளிக்காடு செயல் அலுவலர் ஜோதி மீது இரண்டு மாதம் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டோம். கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
டாஸ்மாக் மேலாளர் இப்படி. பத்துக்கும் மேற்பட்ட நேரடியாக விஜிலன்ஸ் நடவடிக்கை என ஆதாரம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அனைத்து அரசுத்துறை அலுவலகத்திலும் லஞ்சம் புரையோடிப்போய்க் கிடக்கிறது.
இருப்பவனிடம் வாங்கிக்கங்க!, என்பதே பலர் வாதம் ஆனால் இல்லாதவனை ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள்?.
உயர் அதிகாரி மற்றும் அலுவலர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுக்கிறதே ஜீப் டிரைவர்கள் தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமானால் அனைத்து ஜீப் டிரைவர்களையும் கண்காணித்தாலே போதும்! பிடிபடுவார்கள்! மேலதிகாரிக்கு 2000 என்றால் ஜீப் டிரைவருக்கு 500
மேல் அதிகாரிக்கு 50,000 என்றால் ஜீப் டிரைவருக்கு 5000.
உங்களுக்கு பிடிக்காதவர்களை நீங்களே ஒரு ஆளைக்கொண்டு பெட்டிஷன் போடுவது! பிறகு மெமோ கொடுப்பது! மெமோவை குளோஸ் பண்ண பணம் வாங்குவது! இந்த நடைமுறை இல்லாத. இல்லாத அலுவலகம் உண்டா?
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பால்வாடியில் குழந்தைகளே இல்லாமல் பள்ளிக்கூடம்!
மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தாக,சமையலரை
மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்க வைத்து அந்த பகுதி ரிப்போர்ட்டரை அடித்து கீழே தள்ளிவிட்டு காமகுரோத வார்த்தைகளால் திட்டினார். அடாவடியாக நடந்து கொண்ட நிருபர் விபி.பிரபாகனை கைது செய்யகோரி போராட்ட நோட்டீஸ் போட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை மிரட்டி மூத்த ஒரு செய்தியாளர்மீது நிமிர்ந்து நில் திரைப்படம் போல வழக்குப் பதிவு செய்தீர்கள்! தவறு நடந்து விட்டது வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என மாவட்ட சங்கத்தினர் முன்னிலையில், கூறிய நிலையில் உங்கள் நிலைபாட்டை பல செய்தி ஊடகங்கள் அறிந்தோம்.
போராடுங்கள்!நியாயத்தின் பக்கம் நின்று போராடுங்கள்!
அப்பாவி மக்கள், உங்களை நம்புகிறார்கள்! உங்களுக்கு அரசாங்கம் நல்ல சம்பளம் கொடுக்கிறது அது போதும்!
கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்! என்பதே தவறு
ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தாதீர்கள்!
மக்களுக்காக.. 24 மணி நேரம் உழைக்கும் அதிகாரிகளும், அரசு அலுவலகர்களும் சிலர் இருக்கிறார்கள்
எல்லோரையும் நாங்கள் குற்றம் சுமத்தவில்லை!
லஞ்சம் மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவாக சங்கங்கள் செயல்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
லஞ்சம் வாங்கினால் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்படுவோம்! வேலை போய்விடும்! நடுரோட்டில் தான் நிற்போம்! என்ற பயம் வரவேண்டும்.
மக்கள் விரோத செயல்களுக்கு துணை போக வேண்டாம்!
நாங்கள் எதையும் செய்வோம் எங்களுக்கு சங்கம் பாதுகாப்பு கொடுக்கும் என்கிற எண்ணத்தை அடியோடு மாற்றிக்கொள்ளுங்கள். மீண்டும் எழுதுகிறேன்.
நிமிர்ந்து நில் லஞ்சம் தவிர். இது வரை லஞ்சம் இனி சேவைக்குறைபாடு ஐந்து வயதுக்கு உட்பட்ட கைக்குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஆதார் கணக்குப்பதிய - முதலில் 'அட்வான்ஸ்' ஆக டோக்கன் பெற வேண்டும், அதற்கு ஒரு வரிசை தினமும் அஞ்சலகத்தில் காத்துக்கிடக்கிறது.
தினமும் 50 பேருக்கு மட்டும்தான் டோக்கன்.
அஞ்சலகம், மண்டல மாநகராட்சி அலுவலகங்களில் கொடுக்கிறார்கள்.
காலை 9 மணி முதல் 10.30 மணிவரை வரைதான்.
ஏழுமணிக்கே பொதுமக்கள் குவிந்து விடுகிற நிலை.
காலை 10 மணி முதல் 5 மணிவரை என அலுவல் நேரத்தில் எப்போது வந்தாலும் டோக்கன் பெறாமல் இயல்பாக 'ஆதார் போட்டோ சூட்' செய்ய விட்டால் தான் என்ன
பொதுமக்களை தேவையில்லாமல் அலையவிடும் போக்கு இது. சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதாக கட்டமைத்து அப்பாவி பொதுமக்களை கதறவிடும் போக்கினை எப்போதுதான் அரசு எந்திரங்கள் மாற்றிக்கொள்ளும்?
ஆதார் விவகாரம் என்பதால் இதை மாநில அரசிடம் சொல்லி முறையிடுவதா, அல்ல மத்திய அரசிடம் சொல்லி முறையிடுவதான்னு தெரியவில்லை. என பலரும் எழுப்பும் வினா?லஞ்ச ஊழல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு மாநில லோக் ஆயுக்தா குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல சட்டத்திருத்தம் தேவை, மேலும் சிங்கபபெண் காவல் படை போல லோக் ஆயுக்தா காவல் படை தனியே தேவை, மேலும் தற்போது ஊழலில் ஊறித் திளைத்து கொழுத்த லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள 70 சதவீதம் பணியாளர்கள் மாற்றம் அவசியம், மேலும் மக்கள் பங்களிப்பு நபர்கள் இணைந்துஅரசு ஒரு குழு அமைக்க வேண்டும், அதில் ஊழல ஒழிப்பு நபர்கள் துறையூர் பகலவாடி குருநாதன் போல சிலர் வரவேண்டும், மேலும் லோக் ஆயுக்தா குறித்த உயர்நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கை அரசு தலைமை வழக்கறிஞர் கூர்ந்து கவனித்து கடந்த ஆட்சிக்கால தவறுகள் நீக்கி நீதிமன்ற உத்தரவை பெறவேண்டும், பின்னர் தான் ஊழல் ஒழிப்பு 40 சதவீதமாவது சாத்தியமாகும், மக்கள் ஊழல் ஒழிக்க பயப்படாத நிலை வர வேண்டும், அதற்கு விழிப்புணர்வு வர விளம்பரம் மற்றும் தாலுகா அளவில் அரசின் நேரடி புகார் பெட்டி அவசியம், அரசு ஊழியர்கள் தவறு செய்தால் தண்டனை இல்லை என முதல்வர் ஜெ.ஜெயலலிதா கால அரசாணை ரத்து செய்வதும் ஒரு ஒழுங்கு முறைச்சட்டம் கலந்த ஊழல் ஒழிப்பு அரசாணை அவசியம், அப்போது தான் முதல்வர் மீதான மக்கள் நம்பிக்கை நிறைவேறும். புதிய அமைச்சர்கள் 9 நபர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதும், அவர்கள் தற்போது உள்ள செயல்பாடு தொடர்ந்தால் ஊழல் கடடுப்பாடடில் வரும். கடந்த ஆட்சியில் 800 கோடிகள் ஊழல் செயத முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் இன்னும் பதிவு செய்யவில்லை என்பதும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிராஸ்பார்மர் கொள்முதல் செய்த ஊழல், மற்றும் முன்னாள் அமைச்சர் பி. கே.சேகர்பாபு மீது இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களில் சுவாமிக்கு அணிவிக்கக் கொடுத்த தங்க நகைகளை தங்கக்கட்டியாக உறுக்கி கடடியாக்கி ஊழல் செய்த குற்றத்திலும் நடவடிக்கை தேவை, மேலும், சில முன்னாள் பத்து மந்திரிகள் மீதான சொத்துக்குவிபபு வழக்குகளை சரியாக நடத்தி நீதிமன்றம் தண்டனை தர தீர்வு காண வேண்டும், என்பதே வாக்களித்த மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளாகும்.நடக்குமா?









(1).jpg)

















கருத்துகள்