கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
குறு விவசாயிகளுக்கு ரூபாய் .50,000 வரை பயிர்க்கடன்கள் -முழு தள்ளுபடி. சிறு விவசாயிகள் - 50 சதவீதம் கடன் தள்ளுபடி 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கை.“5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி...” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள்,இன்று ரூபாய் 50,000 வரை மட்டும்”என அறிவிப்பு அதிலும் மே 2025-பிப்ரவரி 2026 என்று கால அளவீடு செய்தது தான் இது ஏமாற்றம் இல்லையா?
50 சதவீதம் தள்ளுபடி இல்லை ரூபாய் 50,000 மட்டுமே கால அளவு
கட்டுப்பாடு வேறு உள்ள நிலையில் பயனடையும் உண்மை விவசாயிகள் யார் என்பது இனி மேல் தான் தெரியும். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளின் ரூபாய் .50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது, மேலும், ரூபாய் .50,000 முதல் ரூபாய்.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கும் ரூபாய் .5000 முதல் ரூபாய் .40,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம்
இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளின் சுமையையும் முழுமையாக குறைக்காது என்றாலும், தற்போதைய பொருளாதார சூழலில் விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் முயற்சியாக பார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து இயற்கை சீற்றங்கள், உற்பத்தி செலவுகள் உயர்வு, விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அரசு இன்னும் விரிவான நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
அதேபோல், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், அவர்களுக்கு மீண்டும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எளிதில் புதிய கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கு எந்தவிதமான நிர்வாகத் தடைகளும் இருக்கக் கூடாது. சிறு, குறு விவசாயிகளை தவிர்த்து மீதமுள்ள விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பெற்ற பயிர் கடனை ஓரளவு நிவாரணமாக அளிக்கும் அளவுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் முதுகெலும்பாக விளங்கும் அனைத்து விவசாயிகளை பாதுகாப்பதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அரசின் முதன்மை பொறுப்பாகும். அதற்கான நல்ல திட்டங்கள் தொடர்ந்து விவசாயிகளுக்கு பயன் அளிக்க நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்..தமிழ்நாட்டில் கூட்டுறவு விவசாய பயிர்க்கடன் என்பது கிராமப்புற விவசாயிகளுக்கு வேளாண்மை சாகுபடிச் செலவுகள், உரம் மற்றும் விதைகள் வாங்க, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுகா கடன் சங்கங்கள் (PACS) மூலம் மிகக் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் உரிய காலத்தில் பயிர்க்கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது. மேலும், குறு விவசாயிகள் பெற்ற ரூபாய் . 50,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது, முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி மிகவும் குறைவாக இருக்கும் (தோராயமாக 4 சதவீதம் முதல் - 7 சதவீதம் வரை). பயிர்க்கடன் மட்டுமின்றி, உழவர் அட்டை (Kisan Credit Card), சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான முதலீட்டுக் கடன்களும் கிடைக்கும்.



கருத்துகள்