மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின்
(Confederation of Indian Industry) தென் மண்டலத் தலைவர் பி.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ.முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தொழிற்துறை வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கொள்கை ரீதியிலான பங்களிப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசுடன் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மை குறித்தும், தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலையான பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில் லஞ்ச லாவண்யமின்றி கமிஷன் இல்லாமல் தமிழ்நாட்டை வளப்படுத்த தொழில் அதிபர்கள் வரலாம் என்ற நிலை முன்னெடுப்பாகப் பார்க்க முடிகிறது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நேற்று தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியீடு குறித்தும் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தயாரிப்பு, திட்டங்களுக்கான செலவீனம், தவெக அளித்துள்ள நிதியுதவி, மற்றும் வாக்குறுதிகள் குறித்த செலவுகள் பற்றியும் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத் தொழில் நிறுவனங்களின் சிஇஓ க்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் BMW, TVS, Hudson உள்ளிட்ட நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே செய்யப்பட்ட முதலீடுகள், தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


கருத்துகள்