ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டு வந்தார்கள்.
அந்த செப்பேடுகளை தமிழ்நாடு கொண்டு வரவேண்டும் என பேசுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் எனத் தெரிய வேண்டாமா?
இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும். இந்த ஊராட்சியில் ஆனைமகானம்,
மஞ்சவாடி, ஒர்குடி, பூலாங்குடி, ஆனைமங்கலம், என தேவூர் அருகில் உள்ள பழமையான கிராமம் கி.பி. 985 ஆம் ஆண்டில் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் . இன்றைய இந்தோனேசியப் பகுதியான 'ஸ்ரீவிஜய' நாட்டின் சைலேந்திரகுல மன்னரான மாற விஜயதுங்க வர்மன், தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டுகிறார். இராஜராஜ சோழன், அந்த பௌத்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். தந்தையின் அந்த வரலாற்று ஆணையை, அவரது வீரம் செறிந்த மகன் முதலாம் இராஜேந்திர சோழன் செப்புத் தகடுகளில் நிரந்தர சாசனமாகப் பொறித்து வைக்கிறார். இதுவே 'ஆனைமங்கலம் செப்பேடு'.வரலாற்றுக் கருவூலம்: இராஜேந்திர சோழன் காலத்து கல்வி, கலாச்சாரம், அரசியல், கட்டடக்கலை, பொருளாதாரம் மற்றும் ஆட்சியமைப்பு பற்றிய குறிப்புகள் இதில் அணுவணுவாக விவரிக்கப்பட்டுள்ளன.
26 கிராமங்கள் தானம்: ஆமூர், நாணலூர், புத்தாகுடி, மூஞ்சிகுடி, சந்திரபாடி, உதய மார்த்தாண்ட நல்லூர் உள்ளிட்ட ஊர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இராஜராஜ சோழனின் சாதனைகளுடன் 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை இதன் மூலம் அறியலாம்
சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய அந்த வரலாற்று நகரம், 13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரப் பாண்டியனின் படையெடுப்பால் அரண்மனைகளும் மதில்களும் தகர்க்கப்பட்டு முற்றிலும் சிதைக்கப்பட்டது.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவையாறு கொள்ளிடம் ஆற்றுப் பாலம் கட்டுவதற்காக, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உள் திருச்சுற்று மதில்களில் இருந்த, நம் முன்னோர்கள் செதுக்கிய கிடைத்தற்கரிய கல்வெட்டுப் பாறைகளைத் தூண்களாகப் பயன்படுத்தினர்.
இன்றும் அந்த எழுத்து வரிகளைப் பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் நாம் காண முடியும். சோழர்களின் இத்தகைய பெருமைகளைத் தாங்கிய செப்பேடுகள் நம்மை ஆண்ட பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு, போர்ச்சுக்கல், டச்சுக்காரர்கள் என பலர் காலத்தில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டன. அப்படித் தப்பிய இந்த ஆனைமங்கலம் செப்பேடு இப்போது நல்லெண்ண அடிப்படையில் திரும்புவது நம் வரலாற்று ஆய்வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆலயத்தையே பராமரிப்பு செய்யாத நிலையில் ஆவணங்கள் பாதுகாப்பு இயலாது ஆகவே மத்திய அரசு ஆவணக் காப்பகமே சரி என்பது பலரது கருத்து..






கருத்துகள்