முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெதர்லாந்திலிருந்து பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள்,

நெதர்லாந்திலிருந்து நமது பிரதமருடன் நாடு திரும்புகிறது ஆனைமங்கலம் செப்பேடுகள்,


முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வழங்கப்பட்ட 30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாசனம் ஒரு பொக்கிஷமாகும். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தை அமைத்த ஸ்ரீ விஜய பேரரசு மன்னருக்கு, ஆனைமங்கலம் கிராமத்தை தானமாக வழங்கியதை இவை பதிவு செய்கின்றன.இந்தச் செப்பேடுகள் முதலாம் இராஜராஜ சோழனின் 21-வது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1010-1012) வெளியிடப்பட்டன. கடாரத்தை (தற்போதைய இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பகுதிகள்) ஆண்ட ஸ்ரீ விஜய மன்னன் 'சூளாமணிபன்மன்' கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமம் தானமாக வழங்கப்பட்டது. சோழப் பேரரசின் கடல் கடந்த வர்த்தக வலிமையையும், இந்து மன்னரான இராஜராஜ சோழன் பௌத்த மதத்திற்கு அளித்த சமய சகிப்புத்தன்மையையும் இந்த தானம் உலகிற்கு பறைசாற்றுகிறது.


செப்பேடுகள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தொடக்கப் பக்கங்கள் சமஸ்கிருதத்திலும், பெரும்பான்மையான தகவல்கள் தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் சின்னமான 'புலி' முத்திரை இதில் இடம்பெற்றுள்ளது.நில எல்லைகள், வரி விலக்குகள், மற்றும் நிர்வாக நடைமுறைகள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டுள்ளன.கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பில் இருந்த இந்த வரலாற்றுச் செப்பேடுகள், யுனெஸ்கோ தலையீட்டின் பேரில் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இந்தச் செப்பேடுகள் பெரிய லெய்டன் செப்பேடுகள் (Leiden plates) என்றும் அழைக்கப்படுகின்றன. ராஜராஜன் சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடு,                  300 ஆண்டுகளாக நெதர்லாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து சென்றுள்ள நிலையில்,  அவரிடம் இந்த செப்பேடுகளை நெதர்லாந்து. ஒப்படைத்தது.300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய சோழர் கால செப்புப் பட்டயங்கள்! 

​பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற "ஆனைமங்கலம் சோழர் காலச் செப்புப் பட்டயங்கள்" (Leiden Plates) நெதர்லாந்து அரசால் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன!

​மாமன்னன் இராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில், நாகப்பட்டினத்தில் இருந்த சூடாமணி விஹார புத்த மடாலயத்திற்கு வரி மற்றும் நில வருவாய் தானமாக வழங்கப்பட்டதை இந்த 21 செப்புப் பட்டயங்கள் விவரிக்கின்றன.



​சுமார் 30 கிலோ எடையும், சோழர்களின் அதிகாரப்பூர்வ இராஜமுத்திரையையும் கொண்ட இந்த பட்டயங்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் செதுக்கப்பட்டவை.

​18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடந்த 160 ஆண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

​பல ஆண்டுகால ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, நமது சோழர் பெருமையின் அடையாளம் மீண்டும் இந்திய மண்ணை வந்தடைந்துள்ளது.லெய்டன் பட்டயங்கள் (அ) ஆனைமங்கலம் செப்பேடு (அ) சோழா ராஜ சாசனம் [A Royal Charter (or) a Sasana of the Chola kings (or) Cholas Plates or Charter]

கி.பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராசஇராச சோழன் காலத்தில் நாகையில் 'ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை' என்னும் பௌத்தப் பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீ விஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட  விஜய குலோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின் படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை மாற விஜயதுங்க வர்மன் தந்தையான சூடாமணி வர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாதலின், இதற்குச் 'சூடாமணி விகாரை' என்று பெயராயிற்று. 

இந்தச் சூடாமணி விகாரைக்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர் உண்டு. கடாரத்தரசன் இவ்விடத்திலேயே கட்டிய மற்றொரு விகாரைக்கு இராஜேந்திர சோழன் பெரும் பள்ளி என்று பெயர். ஆனைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தார். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னரே அவர் இறந்துவிட, அவனுக்குப் பின் அரசாண்ட இராசேந்திர சோழன், செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித் தந்தான். அவன் எழுதிக்கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச் சாசனங்களுக்கு 'லீடன் சாசனம்' (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. [Epigraphia Indica Vol.22 by Chakravarti, N.P.,] என்னும் நூலில் இந்தச் சாசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

https://archive.org/details/in.ernet.dli.2015.69621/page/n29/mode/2up

லெய்டன் செப்புத் தகடுகளின் இரண்டு தொகுப்புகள், பெரிய லேடன் தகடு மற்றும் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் உள்ள சிறிய லேடன் தகடுகள் ஸ்ரீவிஜய மன்னர்களின் முயற்சியால் நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தை நிறுவியதைக் குறிக்கிறது. சோழ மன்னன் I இராஜராஜன் (985-1016) ஆட்சியின் போது கட்டுமானம் தொடங்கியது மற்றும் அவரது மகன் மற்றும் வாரிசு I ராஜேந்திரன் (1012-1044) கீழ் முடிக்கப்பட்டது. தமிழில் சிறிய லேடன் தகடுகள் நாகப்பட்டினம் விகாரையுடன் இணைக்கப்பட்ட ஒன்பது அலகு நிலங்களைக் குறிக்கின்றன.

பெரிய தகடுகளில் 111 வரிகள் கொண்ட சமஸ்கிருதப் பகுதியும், 332 தமிழ்ப் பகுதியும் உள்ளன. 21வது ஆட்சியாண்டில், சூளாமணிவர்ம விகாரையில் உள்ள புத்தரின் உயரமான கோவிலுக்கு அரசர் ஆனைமங்கலம் கிராமத்தை வழங்கியதாக சமஸ்கிருத நூல் கூறுகிறது.

காணொளிக்காக நன்றி:- Time and Trial 

நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தில் பாதுகாக்கப்படும் ஆயிரம் ஆண்டுப் பழமையான சோழர்கால அரச சாசனம் .!

https://www.facebook.com/AncientTamilCivilizationATC/videos/615619583151477

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...