பத்து காவல்துறை அதி
காரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
உளவுத் துறையில் டிஜிபியான பாலநாக தேவி சைபர் கிரைம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். வேலூர் சரக டிஐஜி-யான தர்மராஜன் சென்னை உளவுத்துறை (பாதுகாப்பு) டிஐஜி-யாக நியமனம்..
சென்னை சட்டம் – ஒழுங்கு (தெற்கு மண்டலம்) இணை ஆணையரான ப.கெர்லா செபாஸ் கல்யாண் சென்னை உளவுத்துறை (உள்நாட்டுப் பாதுகாப்பு) டிஐஜி-யாக மாற்றப்பட்டார். திருநெல்வேலி சரக டிஐஜி-யான சரவணன் சென்னை சிஐடி (CID) உளவுத்துறை டிஐஜி-யாக நியமனம்.
திருவாரூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கராட் கருண் உத்தவ்ராவ் சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்பி-யாக மாற்றம்.
தென்காசி மாவட்டக் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (I) எஸ்பி-யாக நியமனம்.
தூத்துக்குடி மாவட்டக் கண்காணிப்பாளர் மதன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (I) எஸ்பி-யாக மாற்றம்.
‘Q’ பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் சண்முகம் ஸ்பெஷல் பிரான்ச் CID (II) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மெட்ரோ மண்டல குற்றப் பிரிவு சிஐடி கண்காணிப்பாளர் மாதவன் சென்னை செக்யூரிட்டி பிரான்ச் CID (II) எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம் – ஒழுங்கு ஏஐஜி-யாக இருந்த சிலம்பரசன் சென்னை ஸ்பெஷல் பிரான்ச் CID (ஸ்பெஷல் டிவிஷன்) எஸ்பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.






கருத்துகள்