கனிமச் சுரங்கங்கள் ஏலம்
மற்றும் செயல்பாட்டு நிலவரம் குறித்து சுரங்கத்துறைச் செயலாளர் ஆய்வுமத்திய சுரங்கத்துறை செயலாளர் திரு பியூஷ் கோயல் இன்று அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மற்றும் ஏ- வகை கனிம வளம் நிறைந்த மாநிலங்களின் அதிகாரிகளுடன் இணைந்து, 9-வது மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
நாடு முழுவதும் கனிமச் சுரங்கங்கள் ஏலம் விடுதல் மற்றும் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சுரங்கத்துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல், உள்நாட்டு கனிமவள உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஏலம் விடப்பட்ட கனிம சுரங்கங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டில் ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 2015-16 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 108 கனிமச் சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது குறித்து இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பிறகு ஏலங்களின் வேகம் கணிசமாக அதிகரித்தது. 2021-22 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான காலத்தில் 364 கனிமச் சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன. (சராசரியாக ஆண்டுக்கு சுமார் 90 சுரங்கங்கள்)
2025-26 நிதியாண்டில் மட்டும், சாதனை அளவாக 212 கனிமச் சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. ஏல முறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஒரே நிதியாண்டில் அதிகபட்ச எண்ணிக்கையிலான கனிமச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

கருத்துகள்