பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார்.
அவருக்கு வயது 85. சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரையுலக நிகழ்வுகளில் தனது அதிரடி பேச்சுகளால் செய்திகளில் இடம்பிடிப்பார். கே.ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தயாரிப்பாளர் கே.ராஜன் மரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ் திரைப்படம் தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் மற்றும் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
கே ராஜன் தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டில் இருந்து தீவிரமாக இயங்கியவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த 'பிரம்மச்சாரிகள்' (1983) திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரைப்பயணத்தைத் தொடங்கினார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தவர், அப்பாஸ் - குணால் நடித்த 'உணர்ச்சிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றினார். இவரது மகன் பிரபுகாந்தும் நடிகராக அறிமுகமானவர்
சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நிலவும் முறைகேடுகள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும் இன்றி, மேடைகளில் அதிரடியாகவும் நேர்மையாகவும் பேசியவர் கே.ராஜன்.

கருத்துகள்