முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு புதிய நியமனம் மற்றும் மாற்றங்கள்

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயசந்திரன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் 


நிதித்துறை செயலாளரான திமுக ஆட்சியில் இருந்து பல ஊழலுக்கு துணையாக செயல்பட்ட உதயசந்திரன் மாற்றப்பட்டு, சித்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாலராக இருந்து திமுகவுக்கு ஆதரலாக பல தீய காரியங்கள் செய்த நிலையில் தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




சுற்றுலா வளர்ச்சித்துறை மற்றும் கலாசாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்






.அமுதா சிறந்த அதிகாரி என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் திமுகவுக்கு ஆதரவாக கரூர் விவகாரத்தில் உதயசந்திரன் தூண்டுதலில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு தேவையான சில வீடியோக்களை மட்டும் காட்டி, முழுப் பழியையும் தவெக தலைவர் முதல்வர் விஜய் மற்றும் கட்சி மீது சுமத்த முயன்றதால் அவர் செய்த செயல் ஒரு நடுநிலை அதிகாரியின் செயல்பாடாகத் தெரியவில்லை மாறாக, ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் போல பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அதிகாரி என்ற முறையில் நடுநிலையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம். 

ராம்சார் நிலத்திற்குள் முறைகேடாக பிரிகேட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை CMDA அப்பழுக்கற்ற அதிகாரி பிரகாஷ் IAS தற்பொழுது ரத்து செய்வாரா  என்பது  எழுவினா?  ஜோதிடருக்கு அரச பதவி, என பேசும் பலர் கடந்த ஆட்சியில் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் நியமனம் செய்த நிகழ்வு குறித்து பேசியிருக்க வேண்டும்.தனது குதிரை இன்சிடாடஸுக்கு அரசவையில் பொறுப்பு வழங்கிய ரோம் அரசர் கலிகுலாவை குறிப்பிட்டு..




கார்த்தி ப. சிதம்பரம் MP பதிவு   செய்த நிலைமை. தமிழகத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தமிழகத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக (ஏஜி) பதவியேற்க உள்ளார்.

திரைப்பட நட்சத்திரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசு, மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரி பதவிக்கு விஜய் நாராயணனை நியமித்துள்ளது,

முந்தைய திராவிட முன்னேற்றக் கழக  அரசாங்கத்தின் போது மாநிலத்தின் உயர்மட்ட சட்ட அதிகாரியாகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமாவுக்குப் பிறகு அவர் தற்போது பதவியேற்பார்.

விஜய் நாராயண் இதற்கு முன்பு 2017-2021 வரை தமிழ்நாடு ஏஜியாக பணியாற்றினார்.

விஜய் நாராயண் லயோலா கல்லூரியில் பட்டம் பெற்று எல்.எல்.பி. 1982  ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரி, சென்னையில்  பின் 2004 ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் பதவியைப் பெற்றார்.

அவர் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான கே. கே. வேணுகோபால் மற்றும் நீதிபதிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்.

இவர் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் மருமகன் ஆவார். இவரது தந்தைவழி தாத்தா பழம்பெரும் வழக்கறிஞர் எம்.கே.நம்பியார் மற்றும் அவரது தாய்வழி தாத்தா சர்தார் கே.எம்.பணிக்கர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவார்.தமிழ்நாடு அரசு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணனை அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமித்துள்ளது.விஜய் நாராயண் இதற்கு முன்பு அதிமுக ஆட்சியின் போது 2017 முதல் 2021 வரை அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...