முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் ஜெயம் ரவி வாழவில் மாமியார் தான் வில்லி

திரையுலகில்  சென்னை சாந்தோம் பகுதியில் கல்பனா ஹவுஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,


காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகள் பல திரைப்படங்கள் அங்கு படமாக்கப்பட்டவை தான், அதன் உரிமையாளர்கள் தேவகோட்டை பி. எஸ. எஸ் எனும் பெயர் கொண்ட நாட்டுக்கேட்டை நகரத்தார் குடும்பம் அதை நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் அபகரித்தது  நீண்ட நெடிய கதை சிலப்பதிகாரக் கோவலனை ஏமாற்றிய திருவிடைமருதூர் மாதவியாக  அதை கேமரா விற்பனை செய்த மிகச் சாமானியன் விஜயகுமார் தன் மனைவி சுஜாதா மூலம் சோமசுந்தரம் என்பவரை நீதிமன்றம் மூலம் ஏமாற்றி 100 கோடி பங்களாவை அபகரித்ததை திரையுலகில் பலர் அறிவார்கள். இது முன்கதை சுருக்கம் :, சுஜாதா அவரது மகளான ஆர்த்தியுடன் தான் திருமன வாழ்வில்  காதலித்து எடிட்டர் மோகன் மகனாக ஜெயம் ரவியுடன் சென்னை கோடம்பாக்கம் டப்பிங் தியேட்டரில் துவங்கிய, நட்பு உறவாகி

தற்போது பிரிவாகி உள்ளது, இதில் நடிகை குஷ்ப இடையில் புகுந்து இவர்கள் வாழ்வில் கும்மியடிக்க சுஜாதா விஜயக்குமாரிடம் குஷ்பூ பெரிய கடன் வாங்கியதால் வந்த பண நட்பு, அது மட்டும் தான் என்றில்லை, இதில் நடிகர் தனுஷ் பெயர் இதுவரை வெளிவரவில்லை, இவர்களின் முதல் டார்கெட் தனுஷ் தான் ஆனால் தனுஷ் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து தற்போது விவாகரத்து மூலம் தப்பிவிட ஆர்த்தி தாயாரிடம் சிக்கிய ஜெயம் ரவி இப்போது கத்திக் கதறுகிறார். இனி உங்களுக்கு உண்மை புரிந்திருக்கும். இனி நடந்த சம்பவங்கள் குறித்துக் காணலாம்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறிய நடிகர் ஜெயம் ரவி  "விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன்; என் குடும்பத்தைக் கெடுத்தது, மூன்று எழுத்து இட்லி நடிகை," என, குஷ்புவின் பெயரைக் கூறாமல் நேற்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.பிரபல நடிகர்   45 வயதாகும். ஜெயம் ரவி, ஜெயம் துவங்கி எம் குமரன் s/o மஹாலக்ஷ்மி மற்றும்  தனி ஒருவன் வரை பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இவர் காதலித்து திருமணம் செய்த மனைவி ஆர்த்திக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு (ஓ.பி )நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே ஜெயம் ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருவரும் பல நிகழ்வுகளுக்கு ஒன்றாகவே சென்றனர். சில தினங்களுக்கு முன், 'ஆர்த்தி குறித்து கெனிஷா எதுவும் பேசக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தான் யார், தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகள் என்ன என்பதை,கெனிஷா வீடியோவாக வெளியிட்டார். மேலும், 'நான் அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். சென்னையை விட்டும் வெளியேறி விட்டேன்.

'ஆன்லைன்' விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் சோர்ந்து விட்டேன். 'இன்ஸ்டாகிராம்' மற்றும் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகுகிறேன். பெண்ணியம் வெற்றி பெற்றது. மகிழ்ச்சி தோற்றுப்போனது' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று ஜெயம் ரவி மோகன் அளித்த பேட்டியில் :சாதுவாக இருந்த என்னை, சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். இத்தனை நாள் பேசாமல் இருந்தது தவறு. மற்றவர்கள் போல், எனக்கு 25 பேர் கொண்ட குழு கிடையாது. கடந்த 23 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வந்துள்ளேன். என் குடும்பத்தை ஏதேனும் குறை கூறினால், சும்மா இருக்க மாட்டேன்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் படம் எடுத்தவன் நான்.

இவ்வளவு நாள், நான் அமைதியாக இருந்ததுக்கு காரணம், உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  குழந்தைகள் மீது அன்பு இல்லை என்று என்னைப் பார்த்து சொல்கின்றனர். என் பாசம் குறித்து யாரும் பேசாதீங்க.அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை எனத் தெரிந்து தான் ஓடி வந்தேன். பாதுகாவலர்களுடன் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். 'சைபர் புல்லிங்கால்' கெனிஷாவை ஊரை விட்டே அனுப்பி விட்டனர். அவர்களை சும்மா விடமாட்டேன்.

நான் எதுவும் இல்லாமல், வீட்டை விட்டு <வெளியே வந்தேன். அவர்கள் நன்றாக கோடிக் கணக்கான சொத்துக்களோடு, சுகமாக இருக்கின்றனர். 'அந்தக் குடும்பம் வேண்டாம்' என, என் பெற்றோர் கெஞ்சினர். நான் தான் கேட்கவில்லை. என் கஷ்டத்தில் என் கூட இருந்தவர் கெனிஷா. என் பசங்களுக்காக மட்டும்தான் அமைதியாக இருக்கிறேன்.

என்னை நிம்மதியாக வாழ விடாமல் செய்கின்றனர். மூன்றெழுத்து நடிகை ஒருவர், என் குடும்பத்தை கெடுக்கிறார்.

எனக்கு நடந்தது, 'பிளாக் மெயில்' திருமணம். கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டி, திருமணம் செய்தனர். அவர்கள் குடும்ப தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நான் நடிக்க வேண்டும் என்றனர்.சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், எந்த வேலை செய்தும் பிழைத்து கொள்வேன். என்னை மன்னித்து விடுங்கள்; என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் தனிப்பட்ட பிரச்னைகள் தீர்ந்த பின் தான் நடிக்க வருவேன்.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவது இல்லை. என் படங்கள் திரைக்கு வராது. எனக்கோ கெனிஷாவுக்கோ ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர்கள் தான் காரணம். எனத் தெரிவித்தார். இந்த நிலையில் இவர் யாரை குற்றம் சுமத்துகிறறார்  என உற்று நோக்கினால் பின்னணியில் பெரிய கதையே உள்ளது." வருமானத்தையும் பிடுங்கிக்கிட்டு, 6 கோடி கடனையும் ஜெயம்ரவி மீது தூக்கிபோட்டு, பெற்றோரையும் பார்க்க விடாமல், சுதந்திரத்தையும் பறித்து, குழந்தைகளையும் பார்க்க விடாமல், எத்தனை நாளைக்கு இப்படிச் செய்ய முடியும்? கைதித்தனமான வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள் என்கிறார்" பிரபலத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபலத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு "மாமியார் கொடுமைக்கு ஆளானார் ஜெயம் ரவி.. கணவன் மனைவி எடுக்க வேண்டிய முடிவுகளை மாமியார் தான் எடுத்துள்ளார்.. மனைவியிடம் கிடைக்காத அன்பும், ஆதரவும் கெனிஷாவிடம் ஜெயம் ரவிக்கு கிடைத்துள்ளது. பொன் முட்டையிடும் வாத்து, கூடாரத்தை விட்டு ஓடிவிட்டது.. இன்று அந்த வாத்து வேறு கூடாரத்தில் சரணடைந்துவிட்டது.நீலிக்கண்ணீர் வடித்து இழந்த வாழ்க்கையை திரும்ப பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.. அழுது உருண்டாலும், உருண்டு பிரண்டாலும் மாண்டோர் மாண்டோர் தான். அதுபோல் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இருந்த காதல் செத்துப்போய்விட்டது. இனிமேல் அதற்கு உயிர் தர முடியாது.அவர்களின் திருமண வாழ்க்கையில், நாம் இந்த அளவுக்கு அழுத்தமாக கருத்துச் சொல்வது தவறாக இருக்கலாம். ஆனால், எனக்கு சில விஷயங்கள் தெரியும்.. அந்த அளவுக்கு ஜெயம் ரவி காயப்படுத்தப்பட்டார். தாய் தகப்பனை பார்க்க அவருக்கு அனுமதி தர மறுக்கப்பட்டது, பேரக்குழந்தைகளை பார்க்க ஜெயம் ரவியின் பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சுஜாதா விஜயகுமார், ஆர்த்தி என்ற கட்டுப்பாட்டுக்குள், கல்பனா ஹவுஸ் என்ற காம்பவுண்டுக்குள் சென்றதுமே, ஜெயம் ரவி மூலம் வரும் மொத்த பணத்தையும் தாங்களே சம்பாதித்து கொள்ள வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மைக்கு வந்துவிட்டது. 

தனி ஒருவன் பாகம் 2 எடுப்பதற்கு, ஜெயம் ரவியின் தேதி வாங்க, அவரது சொந்த அப்பாவே 6 வருடமாக போராடுகிறார்.. அப்பாவுக்கு உதவி செய்ய ஜெயம்ரவியும் விரும்புகிறார்.. ஆனால், அவர் தடுக்கப்படுகிறார். சந்தேகப்பார்வையுடன் ஜெயம் ரவியை பார்த்தே துன்புறுத்தப்பட்டார். சாப்பிட, தூங்க, ரெஸ்ட் எடுக்கக்கூட மனைவியின் பர்மிஷன் தேவையா?கணவனுடன் கருத்து வேறுபாடு என்றால், குழந்தைகளை கருவியாக அந்தப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.. இது நாட்டியக் காரிகள் சார்ந்த பெண்களைப் போல ஓட ஓட விரட்டிட்டு, இன்றைக்கு ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஆர்த்தியை பிரிவதுதான், அடுத்த வாழ்க்கை என்று ஜெயம் ரவி தீர்க்கமாக முடிவுக்கு வந்துவிட்டார். இனி மிச்சமிருக்கும் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கெனிஷா ஆறுதலாகவும், அன்பாகவும் இருப்பதால், அந்த கூடாரத்தில் சரணடைந்துவிட்டார். என்னுடைய வாழ்க்கை துணை இனி கெனிஷாதான் என்று சொல்கிறார். எந்த அளவுக்கு காயப்பட்டிருந்தால், இன்று உடைத்து பேசியிருப்பார்? ஆனால், ஜெயம் ரவி பற்றி தவறான வதந்திகளும் பரப்பப்படுகிறது.. உண்மையிலேயே அவர் நல்லவர்.. 25 வருடமாக சினிமாவில் அப்பழுக்கற்றவர்...ஆனாலும் குடும்பத்தில் கொடுமைப்படுத்தப்பட்டார்.. சொந்தமாக பேங்க் அக்கவுண்ட்கூட ஜெயம் ரவிக்கு இல்லால், அவரை தனித்து செயல்பட விடாமல் முடக்கி வைத்திருந்தார்கள்..

ஜெயம் ரவியை வைத்து, அடங்க மறு என்ற படத்தை வேறு ஒரு தயாரிப்பாளர் எடுக்க முன்வந்தால், ஜெயம் ரவியின் மாமியாருக்கு அங்கேயும் காசு ஆசை வந்தது. எல்லாவற்றிலும் காசு, காசு, காசு..!  வருமானத்தையும் பிடுங்கிக்கிட்டு, 6 கோடி கடனையும் ஜெயம்ரவி மீது தூக்கிபோட்டு, பெற்றோரையும் பார்க்க விடாமல், சுதந்திரத்தையும் பறித்து, குழந்தைகளையும் பார்க்க விடாமல், எத்தனை நாளைக்கு இப்படி செய்யமுடியும்? கைதித்தனமான வாழ்க்கையை யாருமே விரும்ப மாட்டார்கள்.

நல்ல மனுஷனை எல்லா விதத்திலும் காயப்படுத்தி, காயப்படுத்தி ஓடவிட்டது ஆர்த்தியும், சுஜாதா விஜயகுமாரும்தான்..

ஜெயம் ரவி நல்ல மனிதன், அதிலும் ஈரமுள்ள மனிதன்" என்று தெரிவித்துள்ளார்.   ஜெயம் ரவி குடும்பம் உயர் நீதிமன்றம் மூலம் எச் சி பி  வழக்கு மூலமே மீட்க முடியும். பணம் தான் வாழ்கை எனும் சிலர் நடவடிக்கை தான் ஒரு கலைஞனான ஜெயம் ரவி என்ற நடிகர் வாழ்க்கைக்கு எதிரியாக்கியது.                                " நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு - பலர்

ஆளைக் குல்லாபோடுவதும் காசுக்கு - சிலர்

கூடுவதும் குழைவதும் காசுக்கு,

காசுக்கு காசுக்கு காசுக்குபணம் படைத்தவரின் சொல்லைக்கேட்டு

அதுக்கு தாளம்போட்டு - பலர்

பல் இளித்து பாடிடுவார் சிறு பாட்டு

பணம் படைத்தவரின் சொல்லைக்கேட்டு

அதுக்கு தாளம்போட்டு - பலர்

பல் இளித்து பாடிடுவார் சிறு பாட்டு

எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு"..... கவிஞர் மருதகாசி  பாடல் தான் இங்கு பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...