தமிழ்நாடு முதலமைச்ச
ர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு..முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் தனிச் செயலாளர்கள் ஆட்சிப்பணி நிர்வாகத்தில் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு
இதில் துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடைப பராமரிப்பு , போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அரசு துறைகளிலிருந்து, முதல்வர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை, துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் விபரங்களை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வர். நான்கு பேரும் கவனிக்க வேண்டிய துறைகள், நேற்று ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




கருத்துகள்