முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக மாநிலங்களவைத் தேர்தலும், நடப்பு அரசியல் நகர்வுகளும்

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியான 24 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.





மேலும், சி.வி. சண்முகம், சுனேத்ரா பவார் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர். இதன் காரணமாக, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.




ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு, தமிழகத்தில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவைப் பதவியை ராஜினாமா செய்ததாலும், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் சுனேத்ரா பவார் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாலும் இவ்விரு மாநிலங்களிலும் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் அறிவிக்கை ஜூன் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்படும். அன்று தேர்தல் நடைமுறைகள் முறையாக தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 8 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நள்ளிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற நிலையில், தவெக சார்பாக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தற்போது தமிழ்நாடு சார்ந்து நிறுத்தப்படலாம், அல்லது, தவெகவில் சபாநாயகர் குடும்பம் சார்ந்த சத்யபாமா,


அல்லது லயோலா மணி வேட்பாளராக வாய்ப்பு என்ற நிலை தான் உள்ளது.

பிற்ப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் நலனைப் பாதுகாப்பதும் ஒரு வகையில் சமூகநீதி தான்! 

இனி அட்டவணை பட்டியல் ஜாதி வாக்கு வங்கியை விசிகவால் திமுகவிற்கு திருப்பி தர முடியாது!  அதுபோலவே இஸ்லாமிய சிறுபான்மையினரின் வாக்கு வங்கியும், கிருஸ்தவ வாக்கு வங்கி தற்போது நடிகர் விஜய் தவெக தலைவராகி முதல்வர் சி. ஜோசப் விஜயாக வந்த பின்னர் திமுக வாக்கு வங்கி இனி வேறு வழியைத் தான் தேட வேண்டும்! 

அதையும் தவெக அரசே செய்து தரும்! 

தவெக அரசும் கட்சியும் காட்டும் மிகையான அட்டவணை பட்டியல் ஜாதி ஒரு சாரார் ஆதரவு தேவேந்திர வேளாளர், உள்ளிட்ட மற்ற சமூகங்களை திமுகவின் பக்கம் திருப்பும்! 




அதேசமயம், திமுக தன்னைத் தொடர்ந்து பழைய சிறுபான்மை ஆதரவு நிலைக் கட்சியாக காட்டிக் கொண்டால், திமுக முற்றாக அழிந்து போகும்! 

சமூக நீதி என்பது  பட்டியல் சமூக மக்கள் பாதுகாப்பு மட்டும் இல்லை என்பதை திமுகவுக்கு இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்!விஜயின் அரசியலாலும் ஆட்சியாலும் தமிழ்நாடு அரச நிர்வாகத்தில் மாற்றம் வருமா என்பது தெரியாது அது வராமலே கூடப் போகலாம் ஆனால் அவரால் அரசியல் கட்சிகளில் பலத்த மாற்றம் வந்துள்ளது அதனை ஒப்புகொள்ளத் தான் வேண்டும், 

முதல்வர் ஜோசப் விஜயின் நகர்வு அல்லது அவரை இயக்கும் கோஷ்டிகளின் நகர்வு திமுக கூட்டணியினை உடைப்பதாகவே ஏற்படுத்தப்பட்டு உள்ளது, நிச்சயம் அவர்கள் நினைத்திருந்தால் அதிமுகவோடு ஒட்டி கொண்டு திமுகவின் உதிரிகளை புறம் தள்ளியிருக்கலாம் ஆனால் விசிக , கம்யூனிஸ்ட், பாகிஸ்தானை உருவாக்கிய அந்த முகமதலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் என எல்லோரையும் பிடித்து அமைச்சர் பதவி கொடுத்திருப்பது திமுக கூட்டணிக்கான முதல் அடி,




காங்கிராஸை பிரித்து கையில் வைத்திருப்பதும் அப்படியே 

விசிக போன்ற கட்சிகளுக்கு அமைச்சர் பதவி என்பது வெறும் மைனாரிட்டி அரசை சமாளிக்க அல்ல, இனி எக்காலமும் திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாத படி இவர்களைத் தூண்டிவிட்டு திமுகவுக்கு கட்சி ரீதியாக ஆட்சி ரீதியாக மிகபெரிய நெருக்கடி கொடுக்கும் ஒரு உத்தி

இவர்கள் கவனம் முழுக்க திமுகவினை சிதைப்பதிலே தான் இருக்கிறது என்பதுதான் இங்கு கவனிக்கதக்கது

இப்போது திமுக தனிமரமாகி "பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக" எனற புலம்பல் நிலை தான் ஏ. ராஜா மூலம் வெளிவந்த ஒரு அநாகரீகப் புலம்பல் 










இப்படி திமுக கூட்டணியினை ஒரு பக்கம் அக்கட்சி விறகுக்கட்டை போல கூட்டணியைப் பிளந்து போட்ட நிலையில் அதிமுகவினை இரகசியமாகக் கையாளுகின்றது, தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அதிமுகவினர் வேகமாக தவெகவில் இணைகின்றார்கள், விரைவில் பெரிய முகங்கள் கூட இணையலாம்

கட்சித் தாவல் விதிப்படி பதவி போகும் எனும் அச்சத்தால் பல அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று யோசிக்கலாம் ஆனால் நாளையே மேல் சபை எம்பி போன்ற பதவிகள் தவெகவினால் கிடைத்தால் நிச்சயம் கட்சி தாவுவார்கள், அதிமுக கதை இனி அவ்வளவு தான் ஜெ. மரணம் முதல் சிதைவு அதில் அரசியல் காரணம் பல இனி எழும்ப வழியில்லை

ஆக தமிழ்நாடு அரசியல் இப்போது தனித்துவிடபட்ட திமுக ஒரு பக்கம், கூட்டணி அரசு கொண்ட தவெக ஒரு பக்கம் என மாறிவிட்டது




இப்போது திமுகவுக்கு வலுவான கூட்டணி வேண்டும், கூட்டணி இல்லாமல் அதுவும் தேசிய கட்சி பலம் இல்லாமல் அவர்களால் அரசியல் செய்யமுடியாது

ஆக திமுகவுக்கு இப்போது இருக்கும் மிகசிறந்த வாய்ப்பு பாஜகவுடன் ஒட்டிக் கொள்வது, இங்கு பாஜக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் என நினைத்தால் அண்ணாமலை போன்றோர் எதிர்ப்பால் அது நடக்காது என நினைத்தால்  பலரது அரசியல் அறிவு அவ்வளவு தான்

பாஜகவுக்கு தேவை டெல்லியின் எம்பி கணக்கு, அவர்களால் முடிந்தவரை தமிழ்நாடு முட்டிமோதி தனியேவும், அதிமுகவை பலவாக உடைத்தும் பின் அதிமுக கூட்டணியோடும் தேர்தலைப் பார்த்துவிட்டார்கள், தனியே கட்சி ஆட்சியினை பிடிக்கும் என்பது பின் காலத்தில் அடுத்த தலைமுறையில் நடக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிகின்றது, ஆனால் பாஜகவின் தொண்டன் கனவு,  இலவ மரத்தைக் காவல் காத்த கிளியின் நிலைதான்.









இதனால் டெல்லியில் எம்பி கணக்கு, தமிழ்நாடு வாக்கு வங்கி கணக்கு என எல்லாம் கணக்கிட்டால் திமுக அதன் சரியான இலக்கு

ஏற்கனவே சிறுபான்மை வாக்கு தாழ்த்தபட்டோர் வாக்கு விஜய்க்கு சென்றுவிட்டதால் திமுக கடும் ஊழல் செய்து மாட்டிக் கொண்டு அழுத்தத்தில் இருக்கின்றது, காங்கிரஸை இனி தவெக விஜயால் சுலபமாக கழற்றிவிட முடியாது அதன் பின்புலம் வேறு என்பதால் பாஜகவுக்கும் திமுக தான் வாய்ப்பு என்பதை உணர்ந்து இனி அவர்கள் அரசியல் பாஜகவை நோக்கி நகர்ந்து செல்லும்




அநேகமாக இந்நேரம் அறிவாலயத்தின் பரணில் இருந்து வாஜ்பாய் கலைஞர், வாஜ்பாய் அத்வாணி, வாஜ்பாய் மோடி என பழைய படங்கள் எல்லாமே தூசு தட்டபடலாம், "தாரதரமில்லா ஆட்சியினை அகற்ற தாமரைக்கு கைகொடுப்போம்" போன்ற வசனங்களுடன் அவர்கள் கை நீட்டலாம், பாஜகவும் அதை பற்றிக் கொள்ளலாம்

மக்களாட்சி அரசியல் இதுதான், அதுவும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலும் இதுதான், அதே நேரம் திமுகவின் எதிர்காலமும் இன்னும் 10 ஆண்டுக்கு மேல் இல்லை என்பதால், சசிகலா இல்லா அதிமுகவின் நிலை ஸ்டாலின் குடும்பம் இல்லா திமுகவுக்கு நிகழும் என்பதால் மேற்கு வங்காளம் போல் நிதானமாக இங்கு பாஜக ஆட்சிக்கு வரலாம் அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்





சரி, அப்படியானால் தவெக நிலை என்னாகும் என கேட்டால் அக்கட்சி ஒரு பொருட்டே அல்ல என்பதுதான் நிலவரம், ஆதவ் அர்ஜூனரவையும், திருமாவளவன் உள்ளிட்ட சிலரை பாஜக இனி கூர்ந்து கவணிக்கும் இடத்தில் அக்கட்சியும் ஆட்சியும் வீழும் என்பதை விட விஜய் எனும் ஒற்றை மனிதர் விலகினால் அக்கட்சியே வீழும் என்பதால் அதை பாஜக ஒடுக்குவது சுலபம், என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.










இருந்து பாருங்கள், கொஞ்ச காலம் விஜய் கோஷ்டி ஆடும் அதை எதிர்த்து திமுக பாஜகவோடு கைகோர்த்து ஆடும், எல்லாம் முடியும் போது பாரதபோரில்  கௌரவர் அழிந்து, பாண்டவர் வனவாசம் சென்றபின் பரீட்சித்து மஹாராஜா எஞ்சியிருந்தது போல பாஜக மட்டும் எஞ்சியிருக்கும். இதுவே மேலிடத்து அரசியல் கணக்கு. ஆனால் விசிலுக்கு வாக்களித்த

மக்கள் இப்போதய கூட்டணி மந்திரி சபை அமைவதை  அந்த அரசியல் முகம் தெரியாத மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...