கடந்த கால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் பல முறை அழுகிய முட்டைகளை
வழங்கப்பட்டதைக் பாஜகவின் சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்ததாக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், மேலும் தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமலிருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல. முட்டைகளின் சேமிப்புக் காலம், மற்றும் தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-,
"தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூபாய் 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூபாய் 3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் வாங்கி சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. .முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல.
குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும். எனத் தெரிவித்துள்ளார்.Noon meal eggs with Tamil Nadu government seal- உள்ள முட்டை ஒரு உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிக குறைந்த விலையில் ரூபாய் இரண்டுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான உணவுகள் விற்கப்பட்டது கடந்த காலத்தில் கண்டறியப்பட்டது இங்கு குறிபபிடத்தககது.




கருத்துகள்