முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அமைச்சர் ர. வினோத்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று 6.8.2026 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.






​மாநில சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு  அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது.









  மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூபாய் 14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  புதிய திட்டங்களாக  இயற்கை பேரிடர்களிலிருந்து விவசாயிகளின் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் ரூபாய் 31 கோடி நிதி ஒதுக்கீட்டில் புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்.    பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், பதநீர் மற்றும் பனங்கருப்பட்டி போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கவும் ரூபாய் 16 கோடி நிதியில் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம்’ நிறுவப்படும்.







கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தகுதிவாய்ந்த 10,000 பெண்களுக்கு ஆண்டுதோறும் விலையில்லா உயர் மகசூல் கறவை மாடுகள் வழங்க ரூபாய் 57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.வேளாண்மை ஆராய்ச்சி: உதகமண்டலத்தில் (ஊட்டி) விவசாய ஆராய்ச்சியை வலுப்படுத்த ரூபாய் 5 கோடியில் புதிய வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.







கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற குறிப்பிட்ட வரம்பு வரையிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்திற்காக ரூபாய் 7,432 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டின் தொடர் நடவடிக்கைகள் (2026-27)முன்னதாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையின்படி, பின்வரும் தொலைநோக்குத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன:விவசாயிகள் சேவை மையங்கள்: விவசாய உள்ளீடுகள் மற்றும் நவீன தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்க 1,000 புதிய விவசாயிகள் சேவை மையங்கள்.மலைப்பகுதி விவசாயிகள் மேம்பாடு: 63,000 மலைப்பகுதி விவசாயிகளுக்கு உதவ தனி நல்வாழ்வுத் திட்டம்.நுண்ணீர்ப் பாசனம்: சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன முறைகளை ஊக்குவிக்க ரூபாய் 1,168 கோடி நிதி ஒதுக்கீடு.பயிர் காப்பீடு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய 35 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு ரூபாய் 841 கோடி காப்பீட்டு நிதியுதவி.தமிழ்நாடு அரசு உழவர்களின் நலனுக்காகவும், பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும் தனித் தமிழ்நாடு வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையை வழங்கி வருகிறது. இது வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் விலங்கு வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறது.முக்கிய குறிக்கோள்கள்வேளாண் உற்பத்தியை உயர்த்துதல்.உழவர்களுக்கு நவீன கருவிகளை வழங்குதல்.புதிய நீர்ப்பாசன வழிகளை உருவாக்குதல்.இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல்.முக்கிய திட்டங்கள்பயிர்க் காப்பீடு.இலவச மின்சாரம்.உழவர் சந்தைகளை மேம்படுத்துதல்.மானிய விலையில் உரங்கள் மற்றும் விதைகள் வழங்குதல். உள்ளிட்டவை. 


 இந்த நிலையில் இன்று சட்டமன்றப் பேரவையில் திமுக சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

கருத்துகள்