முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராமேஸ்வரம்- காரைக்குடி வழியாக–சென்னைக்கு விரைவில் வந்தே பாரத் ரயில்

இராமேஸ்வரம்-      காரைக்குடி வழியாக–சென்னைக்கு வந்தே பாரத் ரயில்  உத்தேச கால அட்டவணை வெளியீடு

இராமேஸ்வரம்–சென்னை இடையே காரைக்குடி வழியாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான உத்தேச நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம் வழியாகச் சென்று இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுத்த நேரங்கள்: இராமநாதபுரம் – 3.15 PM, சிவகங்கை – 4.10 PM, காரைக்குடி – 4.40 PM, புதுக்கோட்டை – 5.10 PM, திருச்சிராப்பள்ளி– 6.10 PM, விழுப்புரம் – 8.15 PM, தாம்பரம் – 9.40 PM, சென்னை எழும்பூர்–10.20 PM


இந்த ரயில் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்குடி வழியாக வந்தே பாரத் சேவை தொடங்கினால், சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சென்னை பயணம் எளிதாகும் என்பதால் பொதுமக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது உத்தேச நேர அட்டவணை மட்டுமே. ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் நிறுத்தங்கள் மற்றும் பயண நேரங்களில் மாற்றம் இருக்கலாம். தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உறுதிப்படுத்திய பின்னரே பயணத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.  கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான நிதியாண்டு காலகட்டத்தில் 1,356 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 3 நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,511 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய 29 ஆய்வுகளுக்கு (4 புதிய வழித்தடம், 25 இரட்டை வழித்தடம்) ஆகியவைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதலில் உள்ள தாமதம் காரணமாக முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் தடைப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகத் தேவைப்படும் 4,612 ஹெக்டேர் நிலங்களில் 1,178 ஹெக்டேர் ( அதாவது 26 சதவீதம் ) நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசின் ஆதரவு ரயில்வே நிர்வாகத்துக்குத் தேவை.

நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம் காரணமாக திண்டிவனம்- திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர்-தர்மபுரி புதிய வழித்தடம், மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம்  உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவது தாமதமாகியுள்ளது.

தமிழநாடு-தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 2025-26, 2026-27-ஆம் நிதியாண்டில் (30.06.2026 வரை) முறையே 21 இணை ரயில் சேவைகளும் (10 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட), 23 இணை ரயில் சேவைகளும் (16 அம்ரித் பாரத் விரைவு ரயில் உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் ஒரு நவீன, அதிநவீன, மற்றும் அரை-அதிவேக  பயணிகள் இரயில் சேவையாகும். இது உள்நாட்டிலேயே முற்றிலும் வடிவமைக்கப்பட்டு, மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பெருமைக்குரிய இரயில் சேவையாகும். ஆரம்பத்தில் இது 'டிரெயின் 18' என அழைக்கப்பட்டது  இந்த இரயில்கள் தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலையில் ICF  ல் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும். இதற்குத் தனி இன்ஜின் கிடையாது. மெட்ரோ இரயில்களைப் போல, பெட்டிகளின் கீழேயே மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டு சுயமாக இயங்கும் மின்சார பல அலகு (EMU) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, சோதனை ஓட்டங்களின் போது இது மணிக்கு 183 கி.மீ வேகம் வரை எட்டியுள்ளது. தற்போது தண்டவாளக் கட்டுப்பாடுகள் காரணமாக அதிகபட்சமாக 130 - 160 கி.மீ/மணிக்கு செயல்பாட்டு வேகத்தில் இயக்கப்படுகிறது. வெறும் 52 விநாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது, இதில் குளிரூட்டப்பட்ட ஏசி சேர் கார்  மற்றும் பிரீமியம் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் என இரு பிரிவுகள் உள்ளன. எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் 360 டிகிரி சுழலும் இருக்கைகள் உள்ளன, தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிகள் தகவல் திரை, பயோ-வேகக் கழிப்பறைகள்  மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டணத்திலேயே உயர்தரமான சைவ மற்றும் அசைவ உணவு வசதிகளும் அடங்கும். இந்தியாவின் முதல் வந்தே பாரத் இரயில் சேவை 15 பிப்ரவரி 2019 ஆம் தேதி அன்று புது தில்லி மற்றும் வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. நீண்ட தூரப் பயணங்களுக்காக, படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர்  ரயில்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரக்குகளை அதிவேகமாக கொண்டு சேர்க்க வந்தே பாரத் சரக்கு இரயில் சேவைகளும் சோதிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் சென்னை முதல் கோயம்பத்தூர் , திருநெல்வேலி , மைசூர், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இரயில்கள் மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...