முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எந்த மானமுள்ள் தமிழனும் இன்னொருவர் காலடியில் விழுந்து கிடக்க மாட்டான்்ராகுல்காந்தி பேச்சு

எந்த மானமுள்ள் தமிழனும் இன்னொருவர் காலடியில் விழுந்து கிடக்க மாட்டான். ஆனால், மிகப்பெரிய பாரம்பரிய இனத்தின் முதல்வராக இருக்கும் பழனிசாமி மோடி, அமித்ஷாவின் காலில் விழுந்துக் கிடப்பதை பார்க்க எனக்கு கோபமாக வருகிறதென சென்னை பரப்புரையில் ராகுல்காந்தி   பேச்சு    தற்போதுள்ள அதிமுக பழையது  அல்ல. அது முகக்கவசம் அணிந்த, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் நடத்தப்படும் அதிமுக என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் தமிழரும் நரேந்திர மோதியின் முன் தலைவணங்க விரும்பவில்லை. எந்த தமிழரும் அமித் ஷா அல்லது மோகன் பகவத்தின் காலில் விழ விரும்பவில்லை. எனவே தற்போதைய தமிழக முதலமைச்சர் ஏன் மோதி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸிடம் சரண் அடைந்துவிட்டார்? எந்த ஒரு தமிழரும் அவ்வாறு செய்யமாட்டார்கள். இது அவர்களின் பண்பாட்டிற்கு எதிரானது. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள முதல்வர் தலைகுனிந்து நிற்கிறார். ஏனெனில், மோதி, மத்திய புலனாய்வு துறையைக் கையில் வைத்திருப்பதால், தமிழக முதல்வர் அவருக்குத் தலைகுனிகிறார். அதற்கான விலையை அவர் கொடுப்பதில்லை. தமிழக மக்கள்தான் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். தம...

மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதம்

மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதமா க விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இந்த அபராத விதிப்பிற்கு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நிதியியல் கொள்கை 2021ல் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதியியல் கொள்கை 2021ல் பிரிவு 139AA(2) கீழ் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அப்படி இணைக்காத பட்சத்தில் தாமதம் கட்டணமாக 1000 ரூபாய் தொகையை அபராதமாகப் பிரிவு 234H சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும் எனப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பான் கார்டு செல்லாது ஆதார் உடன் இணைக்காத பான் கார்டுக்கு அபராதம் மட்டும் அல்லாமல், பான் கார்டும் செல்லாத ஒன்றாக அறிவிக்கப்படும். பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும் மட்டும் அல்லாமல் புதிய பான் கார்டு வாங்குவதற்கும் கட்டாயம் தேவை என்பதால் முன்கூட்டியே இணைப்பது நல்லது. இல்லையெனில் அபராதம் உடன் புதிய பான் கார்டு வாங்க வேண்டி வரும். சரி பான் இணைப்பது எப்படி..?! வருமான வரித் தளம் மூலம் இணைக்கலாம். ...

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தடை

தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மற்றும் மக்களவை இடை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட தடை இந்திய தேர்தல் ஆணையம் 2021 பிப்ரவரி 26, மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் தெரிவித்தபடி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி  மற்றும் மக்களவை இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், மாரச் 27ம் தேதி(சனிக்கிழமை) காலை 7 மணி முதல்  2021 ஏப்ரல் 29ம் தேதி(வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு இடைபட்ட காலத்தை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட காலமாக,    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  மேலும், மக்கள் பிரதிநிதித்துவ ச...

ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை – உடாய் விளக்கம்

ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை – உடாய் விளக்கம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள்) சட்டம் 2016 (”ஆதார் சட்டம்”)இன் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியான அதிகார அமைப்பு ஆகும்.   இந்த சட்டத்தின் 3-வது பிரிவின்படி, வாழுநர் (Resident) வழங்கும் டெமொக்ராபிக் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்து சேகரித்து இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ”ஆதார்” என்ற 12 இலக்க தனிப்பட்ட அடையாளத்தை வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும். ஆதாரின் நோக்கம் சரிபார்க்கக்கூடிய அடையாளத்தை வழங்குவதாகும், இது திறமையான, வெளிப்படையான, நல்லாட்சிக்கும், மானிய சலுகைகள் மற்றும் சேவைகளுக்கும் பயன்படுகிறது. ஆதார் சட்டத்தில் உள்ளபடியும் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படியும் அடையாளத் தகவல் மற்றும் தனிநபர்களின் அங்கீகார பதிவுகளின் பாதுகாப்பை UIDAI உறுதி செய்கிறது. UIDAIஆல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், ஆதார் எண்கள் அங்கீகாரத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது. அ...

பொதுவாழ்வில் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் பொதுவாழ்வில் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல் பொதுவாழ்வில் மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, விவாதங்களின் தரத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளுக்கு  தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கல்வியாளருமான திரு நூகலா நரோத்தம் ரெட்டியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பேசிய அவர், அண்மைக் காலங்களில் ஒரு சில மாநில சட்டமன்றங்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாகத் தெரிவித்தார். “இடையூறு என்பது விவாதங்களிலிருந்து வழி தவறுவதையும், ஜனநாயகம் மற்றும் தேசத்தின் பாதைகளிலிருந்து விலகுவதையும் குறிக்கிறது”, என்று அவர் எச்சரித்தார். சட்டமன்றங்களில் உறுப்பினர்களின் செயல், மக்களின் லட்சியங்களை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமென்று கூறிய திரு நாயுடு, சட்டமன்றத்தின் நேரத்தை மேலும் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் அவர்கள் உபயோகிக்க வேண்டும் என்று ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்75-வது சுதந்திர தின. புகைப்பட கண்காட்சி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மண்டல கூடுதல் ரயில்வே மேலாளர் திரு சச்சின் புனேதா தொடங்கி வைத்தார் மத்திய அரசின் 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தை' குறிக்கும் வகையில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தால் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டுவரும் கண்காட்சி வரிசையில் இது பத்தாவது ஆகும் வரவிருக்கும் 75-வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில், 'விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்'  கொண்டாட்டங்களை, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தில் உள்ள தண்டி வரை மகாத்மா காந்தி மேற்கொண்ட உப்பு சத்தியாகிரக யாத்திரையை நினைவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட  பாதயாத்திரைக்கு  மார்ச் 12 அன்று கொடியசைத்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், மத்திய அரசோடு இணைந்து 2021 மார்ச் 12 ஆம் தேதி தொடங்கி 75 வாரங்களுக்கு கண்காட்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன.        இத்தகைய கண்காட்சி ஒன்றை சென்னை சென்...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

 மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை க்கான பதிவு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் துவக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம். ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.  இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும். 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது நாடு முழுவதும் 1247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.