எந்த மானமுள்ள் தமிழனும் இன்னொருவர் காலடியில் விழுந்து கிடக்க மாட்டான்.
ஆனால், மிகப்பெரிய பாரம்பரிய இனத்தின் முதல்வராக இருக்கும் பழனிசாமி மோடி, அமித்ஷாவின் காலில் விழுந்துக் கிடப்பதை பார்க்க எனக்கு கோபமாக வருகிறதென சென்னை பரப்புரையில் ராகுல்காந்தி பேச்சு தற்போதுள்ள அதிமுக பழையது அல்ல. அது முகக்கவசம் அணிந்த, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் நடத்தப்படும் அதிமுக என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தத் தமிழரும் நரேந்திர மோதியின் முன் தலைவணங்க விரும்பவில்லை. எந்த தமிழரும் அமித் ஷா அல்லது மோகன் பகவத்தின் காலில் விழ விரும்பவில்லை. எனவே தற்போதைய தமிழக முதலமைச்சர் ஏன் மோதி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸிடம் சரண் அடைந்துவிட்டார்? எந்த ஒரு தமிழரும் அவ்வாறு செய்யமாட்டார்கள். இது அவர்களின் பண்பாட்டிற்கு எதிரானது. ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள முதல்வர் தலைகுனிந்து நிற்கிறார். ஏனெனில், மோதி, மத்திய புலனாய்வு துறையைக் கையில் வைத்திருப்பதால், தமிழக முதல்வர் அவருக்குத் தலைகுனிகிறார். அதற்கான விலையை அவர் கொடுப்பதில்லை. தமிழக மக்கள்தான் அதற்கான விலையை கொடுக்கிறார்கள். தமிழர்களின் உயர்ந்த பண்பாடு, கலாச்சாரத்தை விலையாக கொடுக்கிறார்கள்,'' என விமர்சித்தார்.
திமுக கூட்டணி
''உங்களின் வலிமை என்பது சிறு,குறு தொழில்கள். தமிழகத்தில் இருந்துதான் பலவிதமான காரர்கள் மற்றும் பல விதமான உற்பத்தி பொருட்களை இந்தியா முழுவதும் செல்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி இருபுறமான தாக்குதலை தமிழக உற்பத்தியாளர்கள் மீது செலுத்தியது. லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்துவிட்டார்கள். ஆனால் தமிழக முதல்வர் எதுவும் சொல்லவில்லை. தற்போது இந்திய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் போடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து ஒருவார்த்தை கூட முதல்வர் தெரிவிக்கவில்லை. அதேபோல, தமிழர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகப் பேசவில்லை. மோதி மற்றும் அமித் ஷா எது வேண்டுமென்றாலும் செய்யலாம், முதல்வர் எதுவும் சொல்லவில்லை,'' என்றும் தெரிவித்தார்.
"ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த அனைத்தும் பா.ஜ.கவின் சதிவேலை"
''எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், நீங்கள் உங்கள் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றின் மீது தாக்குதலை சகிக்கமாட்டீர்கள். ஸ்டாலின் தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என்பதை மக்களைப் பார்த்துச் சொல்லமுடியும். தற்போது தேர்தல் மக்களின் முடிவை உறுதிப்படுத்துவதாக அமையும்.முதலில் அவர்களை தமிழகத்தில் நுழைவதைத் தடுக்கவேண்டும். பின்னர் அவர்களை டெல்லியில் இருந்து துரத்தவேண்டும். அவர்கள் கடைபிடிக்கும் மோதல் போக்கை தமிழகம் போல இந்தியாவின் பல மாநிலங்களும் விரும்பவில்லை. அன்பு, மரியாதை, பாசம் என்பதுதான் தமிழர்களை அணுகும் ஒரேமுறை என்பதை பாஜகவினர் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு இந்தத் தேர்தல் மூலம் அதனை உணர்த்துவோம்,'' என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.


கருத்துகள்