முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இணைந்து மாதிரி சில்லறை விற்பனை மையத் திட்டத்தை தொடங்கியுள்ளன

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இணைந்து மாதிரி சில்லறை விற்பனை மையத் திட்டத்தை தொடங்கியுள்ளன இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மாதிரி சில்லறை விற்பனை மையத் திட்டத்தை தொடங்கியுள்ளதோடு, தர்பன்@பெட்ரோல்பம்ப் எனும் டிஜிட்டல் நுகர்வோர் பின்னூட்டத் திட்டத்தையும் அறிவித்துள்ளது  மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து ஒரு நாளைக்கு 6 கோடிக்கும் அதிகமான நுகர்வோருக்கு சேவையாற்றி கொண்டிருக்கும் தங்களது கட்டமைப்பின் சேவை தரங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த உறுதி ஏற்றுள்ளன. மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இந்த முன் முயற்சியைத் தொடங்கி வைத்தார். மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி முன்னிலை வகித்தார். இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் திரு தருண் கபூர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வேகமாக ...

உள்நாட்டில் லித்தியம்-அயன் மின்கலம் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசின் ஏஆர்சிஐ, பெங்களூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

உள்நாட்டில் லித்தியம்-அயன் மின்கலம் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசின் ஏஆர்சிஐ, பெங்களூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் லியான் மின்கல தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க லியான் மின்கலன்களை உருவாக்குவதற்கான பரிசோதனைக் கூடம் பெங்களூரில் விரவைில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பவுடர் மெட்டலார்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ்-க்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம்(ஏஆர்சிஐ), பெங்களூரில் உள்ள என்சுயர் ரிலையபிள் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தை கடந்த 25ம் தேதி செய்தது.  தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. லியான் மின்கல நடைமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிபுணத்துவம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் லியான் மின்கலப் பயன்பாட்டின் வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பப் பரிமாற்றம் இருக்கும் இது குறித்து ஏஆர்சிஐ நிர்வாக கவுன்சில் தலைவர் டாக்டர். அனில் ககோதார் கூறுகையில், ‘‘ஏர்சிஐ மற்றும் என்சுயர் ரிலையபிள் பவர் சொல்யூஷன்ஸ் இடையேயான கூட்டுறவு, பருவநிலை மாற்ற சவால்களுக்குத் தீர்வு காண்பதில் முக்கியமான மைல...

மாநகரத்திற்கும் கிராம வாழ்க்கைக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த ஒரு குழந்தையின் பார்வையை விளக்கும் நீதி ஹாக்கி கன்னட மொழித் திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதி உதவியுடன் அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்கிய கன்னட திரைப்படம் 'நீலி ஹக்கி', மாநகரம் மற்றும் கிராம வாழ்க்கைக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த ஒரு குழந்தையின் பார்வையை விளக்குகிறது பத்து வயது சிறுவனான சித்தா தனது அழகான கிராமத்தை விட்டு ஆரவாரம் நிறைந்த மாநகரத்திற்கு குடும்பத்துடன் இடம் பெயர்கிறான். அங்கு அவன் உணரும் விஷயங்கள் வாழ்க்கையின் நிதர்சனங்கள் குறித்து பேசுவதோடு, நிலைத்தன்மை மற்றும் நகரமயமாக்கல் குறித்த முக்கியமான கேள்விகளையும் எழுப்புகின்றன. இவ்வாறு, அறிமுக இயக்குநர் கணேஷ் இயக்கிய கன்னட திரைப்படம் 'நீலி ஹக்கி', மாநகரம் மற்றும் கிராம வாழ்க்கைக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த ஒரு குழந்தையின் பார்வையை தனக்கே உரிய பாணியில் விளக்குகிறது கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா திரைப்பட பிரிவில் பார்வையாளர்களுக்காக இப்படம் திரையிடப்பட்டது. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இப்படத்தின் இயக்குநர், "52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பார்வையாளர்களுக்காக இப்படத்தை திரையிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வருட...

லூதியானாவில் இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

லூதியானாவில் உள்ள இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை லூதியானாவில் உள்ள இரண்டு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் 2021 நவம்பர் 16 அன்று தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை வருமான வரித் துறை தொடங்கியது. லூதியானாவில் உள்ள 40 இடங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரு குழுமங்களில் நடைபெற்ற தேடல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளின் போது, கணக்கில் வராத பணத்தின் மூலம் சொத்து விற்பனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்த ஆவணங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய நபர் ஒருவரின் வீட்டை கட்டுவதற்கு கணக்கில் வராத பணம் செலவு செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணக்கில் வராத சுமார் ரூ 2 கோடி பணம், அந்நியச் செலாவணி, சுமார் ரூ. 2.30 கோடி மதிப்புள்ள நகைகள் இந்த சோதனை நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குஷிநகர் விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம்

குஷிநகர் விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம் உத்தரப் பிரதேசத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட குஷிநகர் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. 2021 நவம்பர் 26 அன்று தில்லி மற்றும் குஷிநகருக்கு இடையே உடானின் பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் முதல் விமானம் இயக்கப்பட்டது. 2021 அக்டோபர் 20 அன்று குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது குஷிநகர் ஒரு சர்வதேச புத்த புனித யாத்திரை தலமாகும். கௌதம புத்தர் இங்குதான் மகாபரிநிர்வாணம் அடைந்தார். லும்பினி, சாரநாதந்த் கயா ஆகிய புனித யாத்திரை தலங்களைக் கொண்ட புத்த வட்டாரத்தின் மையப் புள்ளியும் இந்தப் பகுதி தான். இந்த பிராந்தியத்தை தேசிய மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் யாத்ரீகர்களுடன் குஷிநகர் விமான நிலையம் நேரடியாக இணைக்கும். குஷிநகர் விமான நிலையத்தை 3600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முனைய கட்டிடத்துடன் ரூ 260 கோடி மதிப்பீட்டில் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையம் உருவாக்கியுள்ளது. கூட்ட நேரத்தின் போது 300 பயணிகளை கையாளும் வகையில்...

94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படம் ‘கூழாங்கல்’

94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமான ‘கூழாங்கல்’ திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை விவரிக்கிறது 94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமான ‘கூழாங்கல்’ திருமணமான பெண் ஒருவரும் அவரது குழந்தையும் எதிர்கொள்ளும் துன்பங்களை விவரிக்கிறது இயக்குநர் விக்னேஷ் ஷிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். கருத்தடையான், செல்லப்பாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவாவில் நடைபெற்று வரும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பில் இன்று பேசிய திரு வினோத்ராஜ், “எளிமையான வடிவத்தில் சொல்லப்பட்ட ஒரு எளிய கதை இது. என் வாழ்க்கையிலிருந்தே இப்படம் உருவாகியுள்ளது. குடிகார கணவரால் எனது சகோதரியும் அவரது சிறு குழந்தையும் படும் துன்பங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது,” என்றார். தனது முதல் திரைப்படத்தைப் பற்றி மேலும் கூறிய அவர், கூழாங்கல் ஒரு குடிகார ஆணுக்கும் அவரது மகனுக்கும் இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்டது, தந்தையின் வீட்டிற்குச் சென்ற மனைவிய...

கஞ்சநாயக்கன்படியில் கொள்ளையர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி திட்டம் வகுத்துக் தந்து தலைமறைவான காவல்துறை தலைமைக் காவலர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தாலுகாவிலுள்ள கஞ்சநாயக்கன்படியில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் (வயது 80). அவரது மனைவி இறந்ததுவிட தனியாக வசித்து வருகிறார். அதைத் தெரிந்து வைத்துக் கொண்ட ஒரு கும்பல்,  காரில் வந்து  வீட்டுக்குள் நுழைந்து, அவரைக் கட்டிப் போட்டுவிட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி பீரோவிலிருந்த ரூ. நான்கு இலட்சத்தையும், ஐந்து சவரன் தங்க நகையையும் கொள்ளையடித்த் தப்பிச் சென்ற நிலையில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை ஆய்வாளர் பார்த்திபன், காரியாபட்டி காவல்நிலையத்தின் சார்பு ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்களைத் தேடிய நிலையில் கோபிக் கண்ணன், சம்பத்குமார், மகேஷ் வர்மா, அஜய் சரவணன், அலெக்ஸ் குமார், மூர்த்தி ஆகிய நபர்கள் பிடிபட்ட நிலையில். அந்தக் கொள்ளையர்களிடமிருந்து. 88 ஆயிரம் ரூபாயும் , 2½ சவரன் தங்க நகையையும்  மீட்டு விசாரணை நடத்திய நிலையில், இத் திருடன்களுக்குக் கொள்ளை அடிக்க ஆலோசனை வழங்கியது இலட்சுமி நகர் மூன்றாவது தெருவில் குடியிருக்கும் காவல்த...