முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023 அன்று எகிப்து அமைச்சரவையில் உள்ள இந்தியப் பிரிவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு (2023) குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த இந்தியப் பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரிவு எகிப்து பிரதமர் திரு முஸ்தபா மத்பவுலி தலைமையில் பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது எகிப்து பிரதமர் மத்பவுலியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியப் பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய துறைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்தியப் பிரதிகளிடமிருந்து நேர்மறையான கருத்துகள் வருவதை அவர்கள் பாராட்டினர். மேலும் பல துறைகளில் இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர...

தனியார் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் வாஷிங்டன் டி.சி-யில் இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்.

மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாதரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ரா உடன் பிரதமர் சந்திப்பு மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 21, 2023 அன்று வாஷிங்டன் டி.சி-யில் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்குமாறு மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குறைக்கடத்தி விநியோக சங்கிலியின் பல்வேறு பிரிவுகளில், போட்டித்தன்மை வாய்ந்த நன்மைகளை இந்தியாவால் வழங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியருடன் பிரதமர் சந்திப்பு ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தியாவில் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் ஜி.இ. நிறுவனத்தின் நீண்டகால உறுதிபாட்டை பிரதமர் பாராட்டினார். இந்தியாவில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு உயர்தர தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு பற்றி பிரதமரும், திரு கல்ப் ஜூனியரும் விவாதித்தார்கள். இந்தியாவில் விமானப...

தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, பிரிகேடியர் அமிதா தேவ்ராணி சகோதரிகளுக்கு ராணுவ மருத்துவ சேவைக்கான தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ராணுவத்தில் சிறப்பாக செவிலியர் சேவையை மேற்கொண்டமைக்காக மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, பிரிகேடியர் அமிதா தேவ்ராணி சகோதரிகளுக்கு முறையே 2022 மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த விருதுகள் புதுதில்லியில் இன்று (ஜூன் 22, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. ராணுவ செவிலியர் சேவைப் பிரிவின் கூடுதல் இயக்குநரான, மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி, தெற்கு மண்டல ராணுவ செவிலியர் சேவைப்பிரிவின் பிரிகேடியர் அமிதா தேவ்ராணி ஆகியோரின்  சுமார் 40 ஆண்டு கால அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ சேவையை அங்கீகரித்து இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தின் கோட்வார் மாவட்டத்தைச் சேர்ந்த இவ்விரு சகோதரிகளும் ராணுவத்தினருக்கான மருத்துவமனைகள், செவிலியர் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளனர்

அரசியல் சாசனத்தின் 35-ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

அரசியல் சாசனத்தின் 35-ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது – குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அரசியல் சாசனத்தின் 35 ஏ மற்றும் 370 பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.  ஜம்மு பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் இன்று (22.06.2023) அவர் உரையாற்றினார். தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைந்த பின் இந்தப் பகுதியில்  முதலீடுகள் அதிகரித்து  முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என்று அவர் கூறினார்.  35-ஏ மற்றும் 370 பிரிவுகள் தற்காலிகமாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டதாகவும் ஆனால் அவை 70 ஆண்டுகள் நீடித்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் 370வது பிரிவை உருவாக்க மறுத்துவிட்டார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இப்பகுதியில் இப்போது இணக்கமான சூழல் நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார். வலிமையான மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்பு...

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித் துறையினர்  சோதனை நடத்தினர்.  காஞ்சிபுரம் நகாராட்சி ஆணையராக இருந்த மகேஸ்வரி, சில மாதங்களுக்கு முன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாறுதல் ஆகி பொறுப்பேற்ற நிலையில் திண்டுக்கல் ஆர்.எம். காலனியிலுள்ள மகேஸ்வரி வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தினர். இதே போல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த தூய்மைப் பணி ஆய்வாளர்கள் மூவரின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் நகாராட்சி ஆணையராக இருந்த போது அரசு கொள்முதல் விவகாரத்தில் மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக  எழுந்த புகாரின் பேரில் தற்போது வருமானவரித் துறையின் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுஉள்ளது.

உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு மனுவில் மூத்த வழக்கறிஞர் வாதம்

முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த  வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ளார். அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையிலிருந்து வருகிறார். இதற்கிடையே சட்ட விதிமுறைகளின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வில்லை எனவும், இடைக்கால ஜாமின் வழங்கிடவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி  மேகலா தாக்கப் செய்த ஆட்கொணர்வு  மனுவை ஜூன்  15 ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தாலும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த (எச் சி பி) ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணையில்  பழைய தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதம் செய்தார் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில்  நடிகர் சஞ்சய் தத், நக்கீரன் ராஜகோபால் வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோளுடன் பல தீர்ப்புகளை சுட்டிக் காட்டினார் என்.ஆர்.இளங்கோ அதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவ...

ரூர்க்கி ஐஐடி-ல் கார்பன் மற்றும் காற்றுமாசில்லா வளாகத்தை நோக்கிய முன்னெடுப்பு

ரூர்க்கி ஐஐடி-ல் கார்பன் மற்றும் காற்றுமாசில்லா வளாகத்தை நோக்கிய முன்னெடுப்பு ரூர்க்கியில் உள்ள மத்திய தொழில்நுட்ப கழகமான ஐஐடி-ல் கார்பன்-நடுநிலை மற்றும் காற்று மாசு இல்லாத வளாகத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக பெட்ரோல்-டீசல் அடிப்படையிலான வாகனங்கள் இல்லாத ஒரு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இம்முயற்சி அந்த வளாகத்தில் கார்பன் தடம் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும். வளாகத்தில் தனிநபர்கள் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இ-ரிக்ஷாக்களை பயன்படுத்துதல் போன்ற நிலையான போக்குவரத்து முறைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஜூன் 15, 2023 அன்று, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ரூர்க்கியில் ஐஐடி வளாகத்தில் பெட்ரோல்-டீசல் (புதைபடிவ எரிபொருள்கள்) இல்லாத வாகனக் கொள்கையைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை மற்றும் புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த நினைவூட்டலாக உள்ளது. மேலும் கழிவு நீர் மறுசுழற்சி, மறுசுழற்சி பரவலாக்கப்பட்ட முறையில் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றிற்காக...