முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு

எகிப்து பிரதமர் தலைமையிலான எகிப்து அமைச்சரவையின் இந்தியப் பிரிவுடன் பிரதமர் சந்திப்பு


அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, கெய்ரோவில் 24 ஜூன் 2023 அன்று எகிப்து அமைச்சரவையில் உள்ள இந்தியப் பிரிவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு (2023) குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா எல்-சிசி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த இந்தியப் பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் அமைக்கப்பட்டது. இந்தியப் பிரிவு எகிப்து பிரதமர் திரு முஸ்தபா மத்பவுலி தலைமையில் பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது

எகிப்து பிரதமர் மத்பவுலியும் அவரது அமைச்சரவை சகாக்களும் இந்தியப் பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்ததுடன், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய துறைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்தியப் பிரதிகளிடமிருந்து நேர்மறையான கருத்துகள் வருவதை அவர்கள் பாராட்டினர். மேலும் பல துறைகளில் இந்தியா-எகிப்து இடையே இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு முழுமையான அரசு ரீதியிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார். மேலும் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு துறைகளில் எகிப்துடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார். 


வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் தளங்கள், மருந்து, மக்களுக்கு இடையிலான உறவு போன்றவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்து பிரதமர் மத்பவுலி மற்றும் ஏழு எகிப்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம்:

எகிப்து மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் டாக்டர் முகமது ஷேக்கர் எல்-மர்காபி

எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சாமே ஷௌக்ரி

எகிப்து திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் திரு ஹாலா அல்-சயீத்

எகிப்து சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் ரனியா அல்-மஷாத்

எகிப்து நிதி அமைச்சர் டாக்டர் முகமது மாயித்

எகிப்து தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் அம்ர் தலாத்

எகிப்து தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் திரு அகமது சமீர் ஆவர்.எகிப்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் பிரதமரின் கலந்துரையாடல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு தமது அரசு முறைப் பயணத்தின்போது கெய்ரோவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார்.

அவர்களுடனான கலந்துரையாடலின் போது, இந்தியா-எகிப்து இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தினர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.

மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்எகிப்து நாட்டின் கிராண்ட் முஃப்தியுடன் (மூத்த மதத் தலைவர்) பிரதமர் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 ஜூன் 2023 அன்று எகிப்துக்கு அரசு முறைப் பயணத்தின் போது எகிப்தின் கிராண்ட் முஃப்தி எனப்படும் மூத்த தலைவரான டாக்டர் ஷாக்கி இப்ராஹிம் ஆலமை சந்தித்தார்.

கிராண்ட் முஃப்தி தமது சமீபத்திய இந்தியப் பயண அனுபவத்தைப் பிரதமரிடம் அன்புடன் நினைவுகூர்ந்தார், மேலும் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளையும் அவர் எடுத்துரைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையையும் கிராண்ட் முஃப்தி பாராட்டினார்.

சமூக மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான அம்சங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.


எகிப்தின் சமூக நீதி அமைச்சகத்தின் கீழ் தார்-அல்-இஃப்தாவில் தகவல் தொழில்நுட்ப உயர்  திறன் மையத்தை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய வல்லுநருமான திரு. தாரெக் ஹெக்கியுடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் புகழ்பெற்ற எகிப்திய எழுத்தாளரும் பெட்ரோலிய நிபுணருமான திரு. தாரெக் ஹெக்கி சந்தித்தார்.

உலகளாவிய புவிசார் அரசியல், எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அம்சங்கள் குறித்து இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.எகிப்தின் முக்கிய யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபாக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடியை 24 ஜூன் 2023 அன்று கெய்ரோவில் இரண்டு முக்கிய இளம் யோகா பயிற்றுநர்களான திருமதி ரீம் ஜபக் மற்றும் திருமதி நாடா அடெல் ஆகியோர் சந்தித்தனர்



யோகாவின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், இந்தியாவுக்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை ஊக்குவித்தார். எகிப்தில் மக்களிடம் உள்ள யோகா மீதான மிகப் பெரிய ஆர்வத்தை அவர்கள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர்பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது

கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர்  திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.



எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்.பிரதமருக்கு எகிப்தின் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் தி நைல்" விருது வழங்கப்பட்டுள்ளது

கெய்ரோவில் உள்ள எகப்து அதிபர் மாளிகையில் (பிரசிடென்சி) இன்று (25-06-2023) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், எகிப்து அதிபர்  திரு அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை வழங்கினார்.

எகிப்து அதிபர் சிசி வழங்கிய இந்த கௌரவத்திற்கு இந்திய மக்கள் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பிரதமர் திரு நரேந்திர மோடியே ஆவார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...