--- *பிரபல ஜோதிடர் திரு AM. ராஜகோபாலன் தம்பதிகளுக்கு 102 வயது பூர்த்தி - பொற்கால நினைவுகள்* பிரபல ஜோதிடர் திரு AM. ராஜகோபாலன் தம்பதிகள் இன்றுடன் 102 வயது பூர்த்தி செய்கின்றனர். அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். *1. அவரது கல்வி & துவக்கம்:* அரசியல் மற்றும் இந்திய வரலாற்றில் பட்டம் பெற்றவர். ஒரு முன்னணி தினசரியில் தனது எழுத்துப் பணியை தொடங்கி 22 ஆண்டுகள் பணியாற்றினார். பணி நிமித்தமாக நாடு முழுவதும் பயணம் செய்து பழமையான கோவில்களை பற்றி தகவல் சேகரித்தார். பின்னர் மற்றொரு தினசரியில் ஜோதிட பக்கத்திற்கு பொறுப்பேற்ற போது ஜோதிட நூல்களை முறையாக கற்று, மிகவும் தேடப்படும் ஜோதிடரானார். *2. பத்திரிகை பணி:* அந்த நாட்களில் நான்கு பக்கங்கள் கொண்ட "உங்கள் எதிர்காலம்" என்ற வார இதழை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தினார். அது அற்புதமான விற்பனையை பெற்றது. பின்னர் ஒரு பிரபல வார இதழ் குழுமம் ஜோதிடத்திற்காகவே தனி இதழ் தொடங்கிய போது, அதன் நிறுவன ஆசிரியராக இருந்து புகழின் உச்சிக்கு சென்றார். அவரது நூற்றாண்டு விழா 2024-ல் சென்னையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. *3. அவர் கால...
RNI:TNTAM/2013/50347