* பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் மீது சிவில் மற்றும் கிரிமினல் மானநஷ்ட வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். *வழக்கு விவரம்:* - *டெல்லி உயர்நீதிமன்றத்தில்* - ரூ.2 கோடி இழப்பீடு கோரி சிவில் வழக்கு - *பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில்* - கிரிமினல் மானநஷ்ட வழக்கு துபே தனது X பதிவில், "இனி நீதிமன்றமே முடிவு செய்யும், இந்த வழக்கு எனது கடந்த 18 ஆண்டு கால நாடாளுமன்ற பணியையும் மதிப்பிடும்" என தெரிவித்துள்ளார். *பின்னணி என்ன?* 1. சுபாஷ் கார்க் ஒரு பாட்காஸ்ட் பேட்டியில், நிஷிகாந்த் துபேவை *"பிளாக்மெயில் செய்யும் நபர்"* என கூறியதாகவும், 2018-ல் எல்ஐசி தலைவர் மூலம் டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் வாங்க தனது அலுவலகத்திற்கு வந்ததாகவும் குற்றம் சாட்டினார். 2. இதை துபே மறுத்துள்ளார். தான் ஒருபோதும் கார்க் அலுவலகத்திற்கு செல்லவில்லை எனவும் இது அவதூறு எனவும் கூறினார். 3. முன்னதாக துபே, கார்க்கிற்கு 7 நாள் கெடுவுடன் சட்ட நோட்டீஸ் அனுப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். ஆனால் கார்க் அதை நிராகரித்தார். *மோதலுக்கு காரணம் ஜிடிபி சர்ச...
RNI:TNTAM/2013/50347