முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளிநாடு வாழ் இந்தியர் திரும்பி வந்த பின் ஒரு வில்லங்கப்புகார்

         'எப்போது போன் செய்தாலும் நர்மதா போன் பிஸிதான். அங்கதான் டவுட் வந்துச்சு.. ராஜேஷ்தான் காரணம். சில சமயம் என் போனை எடுக்கவே மாட்டார்.. இங்க தான் எனக்கு டவுட் ஆரம்பிச்சது, பணம் எல்லாமே போச்சு..   எஸ்.ஐ ராஜேஷூடன் மனைவி நர்மதாவுக்கு உள்ள கள்ளத் தொடர்பு பற்றி புலம்பும் வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்.. பேரதிர்ச்சியில் ! சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதியினருக்கு இருகுழந்தைகள் உள்ளனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்னையில் தனியாக இருந்த நர்மதாவிற்கு திருநின்றவூர் போலீஸ் எஸ்ஐயுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பும் பணம் அனைத்தையும் அந்த எஸ்ஐயிடம் கொடுத்து விட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஜனார்தனுக்கு மனைவியின்  மீது சந்தேகம் ஏற்பட்டு தொடர்ந்து ஜனார்த்தனன்  கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில் நர்மதா எஸ்ஐ இருவரும் தனியாக சந்தித்தபோது அவரை பின்தொடர்ந்த ஜனார்த்தனன்  புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அதைக் கொண்டு அவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். எனது மனைவி நர்மதாவிற்கும், திருநின்றவூர் எஸ்ஐ ராஜேஸுக்கும் தகாத உறவு உள்ளது. அதை தட்டிக் கேட்டபோது அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.  அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்த போது நான் அவர்களை பின் தொடர்ந்து சென்று புகைப்படம்  எடுத்துள்ளேன். என் மனைவி நர்மதா குழந்தைகள் பெயரில் நான் வாங்கிய 5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எஸ்ஐ ராஜேஷிடம் கொடுத்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தர வேண்டும் என ஜனார்த்தனன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனார்த்தனன் துபாயில் வேலை பார்க்கும்.. வெளிநாடு வாழ் இந்தியர் .கடந்த  மே மாதம் சென்னைக்கு வந்திருந்த ஜனார்த்துக்கு.  மனைவியின் பல சமாச்சாரங்கள் தெரியவந்தன. "நான் துபாயில் வேலை பார்த்து வருகிறேன்..என் மனைவிக்கும் திருநின்றவூரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நான் கண்டித்தேன்.. அதனால் எனக்கும் என் சகோதரி குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என் குழந்தைகளைப் பார்க்க நான் சென்றபோது, ராஜேஷ், நர்மதா 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டித்தேன்.. அப்போது ராஜேஷ் என்னை தாக்கினார். என்னைத் தாக்கிய ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஜனார்த்தனன் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும், சென்னையில் சொந்தமாக ஒரு கம்பெனி தொடங்கி உள்ளார்.. அதையும் நர்மதாதான் கவனித்துக் கொள்வாராம்.. மாமியார் வீட்டு தொந்தரவு காரணமாக, குழந்தைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் சொத்தை உயில் எழுதி வைத்து அதையும் ஏமாற்றி விட்டதாக ஜனார்த்தனன் சொல்கிறார்.. எப்போ போன் பண்ணாலும், நர்மதா போன் பிஸியாகவே இருக்குமாம்.. சில நேரம் போனே எடுக்க மாட்டாராம்  இப்படியெல்லாம் ஜனார்த்தனன் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் இது அத்தனையையும் நர்மதா மறுக்கிறாராம். "ஜனார்த்தனனுக்கு குடிப்பழக்கம், சூதாடும் பழக்கம் உள்ளதால், அதில்தான் லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார். என் குடும்பத்தினர் தான் சொத்துக்களை விற்று அதை சரி செய்தனர்.. குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்தது அவரது சுயநினைவோடுதான்.
ஜனார்த்தனனின் சகோதரி, கட்சியில் இருக்கிறார்.. அவர் சொல்லிதான் போலீசில் புகார் தந்தார்.. எனக்கு மாமியார் வீட்டு தரப்பில் நிறைய மிரட்டல் வந்தது.. அந்த சமயத்தில் கேகே நகரில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த ராஜேஷ் சட்டப்படி எனக்கு உதவினார்.. ஆனால் எங்களை தவறாக ஜனார்த்தனன் பேசுகிறார்.. இப்படி தொடர் தொல்லைகள் தந்ததால், கோர்ட்டில் விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்" என அவர் தரப்பு கருத்தை எடுத்து வைக்கிறார்.
எனினும், இதில் யார் பக்கம் உண்மை என்பது சரியாகத் தெரியவில்லை.. ஆனால், போலீஸ்காரரை பற்றியே இப்படி ஒரு பகீர் புகார் கிளம்பி உள்ளதால், இரு தரப்பையும் தீர விசாரித்து உரிய முடிவை காவல்துறை எடுக்க வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் ஒரு உண்மை வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய பலர் குடும்பத்தில் விவாகரத்து வரை வருவது தற்போது ஜகஜநிலையாகிப் போக காரணம் ...உங்கள் பார்வைக்கே விட்டு விடலாம் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...