தமிழக ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு. ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி னார். கொரானா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.45 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். தமிழகத்தில் எடுக்கப் பட்ட கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
RNI:TNTAM/2013/50347
கருத்துகள்