அணைத்துக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூபாய்.7500 இழப்பீடு வழங்க வேண்டும்- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
கொரானா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு 7500 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
டில்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்
கொரானா வைரஸ் தாக்குதல் ஊரடங்கால் அனைத்து தலைவர்களும் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் இரண்டாவது முறையாக காணொலிக் காட்சி மூலம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டம் நடந்தது அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்பட பல மூத்த தலைவர்கள் காணொலியில் பங்கேற்றனர்.
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:
ஒவ்வொரு இந்தியரும் வருத்தப்படும் சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொளள வேண்டும். கொரானா வைரஸால் உருவாகிய பொருளாதாரப் பாதிப்பைச் சரி செய்ய அனைவரும் போராடி வரும் நிலையில், சமூகத்தில் வகுப்புவாத தவறான எண்ணங்களையும், வெறுப்பு வைரஸை பாஜக தொடர்ந்து பரப்பி வருகிறது.
பொருளாதாரப் பாதிப்பைச் சரி செய்ய ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு கட்சியும் உழைத்துவரும் போது இதுபோன்ற செயல்கள் கவலையளிக்கிறது. பாஜகவி்ன் செயல்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்திருக்கிறது. இந்த சேதங்களை சரி செய்ய காங்கிரஸ் கட்சி கடினமாகப் பணியாற்றும்.
கடந்த மூன்று வாரங்களாக கொரானா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது, இதைத் தடுக்க பரிசோதனையைத் தீவிரப்படுத்துங்கள் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.லாக்டவுன் கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், ஆக்கப்பூர்வான கூட்டுறவு கோரியும் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.
துரதிர்ஷ்டமாக அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைகளை பாதியளவு தான் ஏற்றார்கள், மற்றபடி மோசமான வழியில்தான் செல்கிறார்கள். இரக்கம், பெருந்தன்மை, எதற்கும் உற்சாகமாகத் தயாராவது போன்றவை மத்திய அரசிடம் வெளிப்படவில்லை.
மக்களுக்கு சுகதாரம், உணவுப்பாதுகாப்பு, வாழ்வாதார விஷயங்கள் உறுதிபட கிடைக்க வகை செய்ய நோக்கமாக வைத்து காங்கிரஸ் கட்சி செயல்படும்
முதல்கட்ட லாக்டவுன் கொண்டுவரப்பட்டபோதே நாட்டில் பலருக்கு வேலைபோய்விட்டது.
குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு அரசு பொருளாதார நிதித்தொகுப்பை வழங்க வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பல மாநில எல்லைகளில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, நிதிப்பாதுகாப்பு, வேலை ஆகியவற்றை வழங்கி உதவிட வேண்டும்.
கொரோனா வைரஸை ஒழிக்க பரிசோதனை, கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் இதைத்தவிர மாற்றுவழியில்லை என்று பிரதமர் மோடியிடம் தொடர்ந்து கூறியிருக்கிறோம். ஆனால் இன்னும் தொடர்ந்து பரிசோதனை அளவு குறைவாகவே இருக்கிறது, பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாடு இருந்து வருகிறது
நாட்டின் வர்த்தகம், தொழில், வியாபாரம் ஆகியவை நின்றுவி்ட்டன, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிந்துவிட்டது. மே 3 ஆம் தேதிக்குப்பின் சூழலை எவ்வாறு கையாளப்போகிறது என்பதற்கு மத்திய அரசிடம் தெளிவான சிந்தனை இல்லை.
லாக்டவுன் மே 3 ஆம் தேதிக்குப்பின் முடிந்துவிட்டால் அதன்பின் நிலைமை மோசமாக இருக்கும்
பொருளாதார நடவடிக்கைகள் மேலும் தேக்கமடையும் போது, நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரி்க்கும். குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7,500 ரூபாய் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி காணொலிக் காட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்