அரசு ஊழியர்களின் ஊதியவெட்டும் ஒப்படைப்பு விடுப்பும் இல்லை என்பதும் அனைத்துத் தரப்பு தொழிலாளர் களையும் பாதிக்கும் வகையில் தான் அமையும். என அரசு ஊழியர் சங்கமும்.உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கமும் தங்களுடைய கோரிக்கை களை முன்வைத்துள்ளனர்.
முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டிய அரசாங்கம், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. ஏற்கனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களில் ஒரு நாள் ஊதியத்தைத் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்குத் தானாக முன்வந்து வழங்கியுள்ள நிலையில், பல அரசுஊழியர்கள் தங்களின் ஒரு மாத ஊதியம், மூன்று நாள் ஊதியம் எனவும் வழங்கியுள் ளனர். தற்போது இந்த இக்கட்டான சூழலில், கொரானா எதிர்ப்புப் போரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவத் துறை, பொதுச் சுகாதாரம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, மின்சாரவாரியம், காவல்துறை போன்ற அனைத்துத் தரப்பு அரசுஊழியர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருப்பதோடு அவர்களுக்கு உற்சாகத்தைத் தரவேண்டிய அரசு மாறாக துரோகம் இழைப்பதாகவே கருதுவர்.எனவே, அகவிலைப்படி பறிப்பு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மறுப்பு என எவ்விதமான சம்பள வெட்டு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு, உடனே இவைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அரசின் இத்தகைய தவறான நடவடிக்கை களைக் கண்டிக்கும் வகையில், அனைத்துத்துறை சங்கங்களும் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு முறையீடு அனுப்புவது என்றும், மே முதல் வாரத்தில் கறுப்புப் பட்டை அணிந்து பணி செய்வது போன்ற இயக்கங்களை நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வியும், ஜனார்த்தன னும், அனைத்துத்துறை சங்கங்களின் முடிவை இவ்வாறு தமிழக அரசுக்குத் தெரிவித்துள் ளனர். அதே போல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் நிறுவனர் மாயவன் சார்பில் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்