ஊரடங்கால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் கோயில் சன்னதி முதல் பிரகாரத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே நான்காம் தேதி நான்கு சிவாச்சாரியார்கள் மட்டுமே பங்கேற்கவும், இதை இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அருள்மிகு கள்ளழகர் கோயில் சி்த்திரைத் திருவிழா கொட்டகைப் பணிகள் தல்லாகுளம் வீரராகவப்பெருமாள் கோயிலில் நடைபெற்றிருக்க வேண்டும். ஊரடங்கால் நடக்கவில்லை. இதை பட்டாச்சாரியார்கள் சம்பிர தாயத்துக்கு அழகர்கோயிலில் நடத்தினர். ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை அமலில் உள்ளதால் கள்ளழகர் கோயிலில் முக்கிய திருவிழா அன்று தொடங்குகிறது. மே 3, 4-ல் கோயில் வளாகத்திலேயே கள்ளழகர் உலா வருவார். மே 5 ம் தேதி மாலை மதுரைக்குப் புறப்படுவார். மே 6 ம் தேதி எதிர்சேவை, மே 7-ல் முக்கிய நி்கழ்வான வைகை ஆற்றில் எழுந்தருளல் நடக்கும். மே 8-ல் மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்ப் பார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியாத நிலையில், அழகர் ஆற்றில் இறங்குவாரா என்பது பெரும் கேள்விக் குறியாக இருந்தன அது ரத்து செய்தது பழைய நிகழ்வு .இது குறித்து அருள்மிகு.கள்ளழகர் அழகர்கோயிலிலிருந்து மதுரை சென்று திரும்புவதற்குப் பதிலாக அனைத்து பக்தர்களின் கோரிக்கைப் படியும் மன்னர் திருமலை நாயக்கர் காலம் தொட்டு நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற திருவிழா இடையில் நிற்காமமல் தொடரும் பொருட்டு, திருக்கோயில் பட்டாச்சாரியார் களின் கருத்துருவின் படி 08.5.2020 அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சமளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கோயிலின் உட்பிராகரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப் படுகிறது.மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் முகநூல் மூலமாகவும் மேற்காணும் நிகழச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் இருந்தே நிகழ்ச்சிகளை கண்டு அருள்மிகு கள்ளழகரின் அருள்பெற திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது..
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்