சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கொரானா தடுப்புப் பிரிவில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் மர்மமாக மரணம். காவல்துறை விசாரணை
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரதீபாவின் இறப்பின் காரணம் வரும்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டில் படிப்பவர் வேலூரைச் சார்ந்த பிரதீபா. கொரானா காரணமாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களைத் தடுப்பு பணிக்கு தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பணியில் ஈடுபடுபட்டு வீட்டுக்குச் செல்லாமல் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தததால். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரானா பிரிவில் பணிபுரிந்து வந்த மாணவி பிரதீபா, கடந்த 16 ஆம் தேதி முதல் பணி முடித்துவிட்டு பெரம்பூரிலுள்ள அவரது வீட்டிற்குச் செல்லாமல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள மாணவியர் விடுதியில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டார்.
இன்று காலையில் பணிக்கு செல்வதற்கு பிரதிபாவின் தோழி அறையைத் திறக்க முயல. அது உள்பக்கமாக தாழ்பாள் போட்டிருந்த காரணத்தால் நீண்ட நேரமாக அழைத்தும் கதவைத் திறக்கவில்லை. இதனையடுத்து சக மாணவிகள் மற்றும் காவலாளிகள் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்க, பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகு அழைத்துச் சென்று பார்க்கும் போது உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கீழ்பாக்கம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் வந்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறை இணை ஆணையர் சுதாகர் ,கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேதப் பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி பிரதீபா நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசியதாகவும், கொரானா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.அதன்பின் இன்று காலை பிரதீபாவின் தோழி பார்க்கும் பொழுது இறந்து கிடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக பிரதீபா தங்க வைக்கப்பட்ட அறை தற்காலிகமாக அவருக்கு ஒதுக்கப்பட்ட அறை என்று தெரியவந்துள்ளது. அறையில் எந்தவித தற்கொலை கடிதங்களும் இல்லையெனவும் மேலும் பிரதீபாவின் செல்போன் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்
இருப்பினும் பிரதீபா எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரதீபா இறப்பதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரானா தடுப்புப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், பல மருத்துவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பிரிவில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவ மாணவி இறந்து கிடப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
நிலையில் பிரதீபா இயற்கையாக இறந்தாரா? இறப்பதற்குகஹ காரணமென்ன? கொரானாவால் பாதிக்கப்பட்டு இருந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? என பல கோணத்தில் விசாரணை நடக்கிறது.கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணி புரிந்த 22 வயதேயான பிரதீபா இன்று மரணமடைந்து விட்டார் காரணம் இவர் மகப்பேறு பிரிவில் பணிபுரிந்தார் அங்கு ஏற்கனவே இருந்த தொற்று பரவி விட்டது என்று மருத்துவ நண்பர்கள் கூறுகிறார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்