அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை. கொரானோ தாக்கம் படிப்படியாக உயர்ந்து பின்னர் தான் குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எளிதாக பரவும் என்பதை தொடர்ந்து கூறி வருகிறாரார்கள். பொது மக்கள் ஒத்துழைப்பின்றி கொரானோ வைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எந்த அளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கை தளர்த்தி இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும். பொதுமக்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவ முடியுமோ அந்தந்த வகைகளில் அரசு உதவியதாகவும், தனிமனித இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்றவிதிமுறைகளை கடைப்பிடித்தால் கொரானோ வைரஸ் பரவலை தடுக்க முடியும்; பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும். மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் எனவும்,அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சியில்யில் பேச்சு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்