சென்னை பெருநகர் மாநகராட்சி
இராயபுரம் மண்டலத்திற்குத் தனியாகக் கொரானோ தடுப்புத்திட்டம் செயல்படுத்துவதாகச் சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்
சென்னை பெருநகர் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்சென்னையில் கொரானோ தொற்று பாதிப்பைக் குறைக்க மண்டலத்தில் பகுதி வாரியாக திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்தில் கொரானோ தொற்று பாதிப்பைக் குறைக்க தனித்திட்டம் உருவாக்கப்பட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.
கொரானோ தொற்றுள்ளவர்களைச் சந்திப்பதனால் தான் 70 சதவீதம் பரவும். தொற்று உள்ளவர்களைத்தொடுவதால் வாய், மூக்கு வழியாகப் பரவுகிறது. கொரானோவால் பாதிக்கப்பட்ட 80 சதம் நபர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலை சென்னையில் 65 வார்டுகளில் பத்துக்கு குறைவான பாதிப்பு மட்டுமே உள்ளது. சென்னையில் 70,000 க்கும் மேல் பரிசோதனை நடத்தப்பட்டு அதில் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நோய்க் தொற்றுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இனிவரும் நாள்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமெனவும் கட்டாயமாக முகக்கவசம் அணிவதன் மூலமே பரவலைத் தடுக்க முடியும். கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலம். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்கள். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என்றார் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்னன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவிக்கும் போது சென்னையிலிருந்து தொற்று இல்லாத வெளிமாநிலத்திலிருந்து 16,000 தொழிலாளர்களை அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்