'நமது தேசத்தைக் காணுங்கள்' வரிசையின் கீழ் 'ஒடிசா- இந்தியாவின் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ரகசியம்' என்னும் தலைப்பில் 18வது இணையக் கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. சுற்றுலா அமைச்சகத்தின் 'நமது தேசத்தைக் காணுங்கள்' வரிசையில், 'ஒடிசா- இந்தியாவின் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ரகசியம்' என்னும் தலைப்பில் 12 மே, 2020 அன்று நடந்த இணையக் கருத்தரங்கம் (வெபினார்), பார்வையாளர்களை ஒடிசாவுக்கு மெய்நிகர்ப் பயணமாக அழைத்துச் சென்றது.
திரு விஷால் தேவ், செயலாளர், (சுற்றுலா), ஒடிசா அரசு, தனது அறிமுக உரை மூலம் விளக்கக்காட்சிக்கு அடித்தளம் அமைத்தார். ஒடிசாவைப் பற்றிய சிறிய முன்னுரையை வழங்கிய அவர், அம்மாநிலத்தின் முக்கிய அம்சங்களான பண்டைய நாகரிகம், கலிங்க பாணியிலான புகழ்பெற்ற கோவில்கள், அழகு ததும்பும் கடற்கரைகளை உள்ளடக்கிய நீண்ட கடல் பரப்பு, கலைகள் மற்றும் கைவினைப் பொருள்கள், கலாச்சாரம், ஒடிசி, கோத்திபுவா போன்ற புகழ்பெற்ற நடன வடிவங்கள் மற்றும் காடுகளைப் பற்றி பேசினார். பசுமைச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் மாநிலத்தின் முயற்சியைப் பற்றியும் அவர் தெரிவித்தார்.
பிதர்கனிகா வனவிலங்கு உய்வகம், உதய்பூர் கடற்கரை, தனித்துவமான மங்கலஜோடி சதுப்பு நிலம், சத்பாடா, அரிய இர்ராவாடி டால்பின்களைக் காணக்கூடிய சிலிகா ஏரி, சிம்லிபால் தேசிய பூங்கா, டெப்ரிகர் தேசிய பூங்கா- ஹிராகுட் அணையில் உள்ள பசுமைச் சுற்றுலா வளாகம், அமைதிப் பள்ளத்தாக்கு- கார்ஜ், தரிங்க்பாடி இயற்கை முகாம், மகாநதிப் பள்ளத்தாக்கு, பெட்னோய் கடற்கரைகள், பழங்குடி பாரம்பரியம், கலை மற்றும் கைவினைகள், ஜவுளி, நடன வடிவங்கள், விழாக்கள் மற்றும் உணவு வகைகள் ஆகியவற்றைப் பற்றி மெய்நிகர் பயணம் விளக்கியது.
இணையக் கருத்தரங்கைத் தவற விட்டவர்களுக்காக, https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் கிடைக்கின்றன.
இணையக் கருத்தரங்கின் அடுத்த பாகம் 14 மே, 2020 வியாழன் அன்று காலை 11 மணிக்கு, 'மைசூரு: கர்நாடகாவின் கைவினைக் கலையகம்' என்னும் தலைப்பில் நடைபெறும். https://bit.ly/MysuruDAD என்னும் சுட்டியில் பதிவு செய்து கொள்வதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் இணையக் கருத்தரங்கில் பங்கு பெறலாம்.ஒடிசாவில் பார்க்க வேண்டிய கொனார்க் சூரியக் கோயில், புரி ஜெகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராஜர் கோயில் அற்புதமானது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்