தமிழகத்தில் மே மாதம் 18 ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் அரசு அலுவலங்கள் செயல்படலாம்.
பணியாளர்கள் இரு குழுவாகி பிரிந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறையென சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். அலுவலகத்திற்கு பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பில் இருக்கவும்.
தமிழ்நாட்டில் 50 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமைகளும் இனிமேல் அரசு அலுவலகங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரானோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அமலிலுள்ளது. ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில்
மூன்றாவது கட்டமாக மே.17 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டபோது, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன்பின் இரண்டு நாளில் முடிவடைய உள்ளதைத் தொடர்ந்து, நான்காவது கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என பாரதப்பிரதமர் அறிவித்திருந்த
நிலையில், 50 சதவீத ஊழியர்களுடன் 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் எனவும் வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில், ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
ஒரு குழு திங்கள், செவ்வாய் பணியாற்றினால் அடுத்த குழு புதன் வியாழன் பணியாற்றும். முதல் குழு வெள்ளி, சனி பணியாற்றும். சுழற்சி முறையில் பணியாற்றுபவர்கள் தேவைப்படின் அழைக்கும்போதும் பணிக்கு வருவார்கள்.
அலுவலக பணிக்கு வராத ஊழியர்கள் மின்னணு முறையில் தொடர்பிலிருக்க வேண்டும். தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்துமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்