தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவானதும் மே 18ம் தேதி முதல் 50 சதவீத பயணிகளுடன் அரசுப் பேருந்துகளை இயக்க திட்டம். போக்குவரத்துத் துறைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கொரானோ வைரஸ் தாக்கத்தை அடுத்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க பேருந்து, ரயில், விமானம்,கப்பல் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
மே 17ஆம் தேதியுடன் 3ஆவது முறையாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் அதன் பிறகாவது பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் சார்பில் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு பேருந்துகளை இயக்க தயாராக இருக்குமாறு போக்குவரத்துக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறுகையில் தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீதம் பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க தயாராக இருக்க வேண்டும் என கூறிய சுற்றறிக்கையில் தமிழகத்தில் பொது முடக்கம் முடிவடையும் போது 50 சதம் பேருந்துகளை இயக்க வேண்டும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், கையுறை மற்றும் சானிட்டைசர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிகள் ஆறு அடி இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாதவர்களை பேருந்துகளில் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நின்று பயணிக்க அனுமதிக்கக் கூடாது எனவும், இருக்கைகளில் இடைவெளி விட்டு எண் குறிப்பிட வேண்டும் போன்ற விதிமுறைகளும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி ஒரு பயணம் மக்கள் செய்ய வேண்டிய நிலை வருமென யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்