சீனா, அமெரிக்கா பொருளாதார இரும்புத் திரை உலகப் பொருளாதாரத்தை சேதப்படுத்துமென எச்சரித்த ஹாங்க் பால்சன்.
நாற்பது ஆண்டுகளாக அமெரிக்க-சீன உறவு நான்கு அம்சங்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தியது: சரக்கு, மூலதனம், தொழில்நுட்பம், மக்கள். இதனால், ராணுவரீதியிலான போட்டி முடிந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை, அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறது என்று நேர்மையான அலசல் தெரிவித்துவிடும் என முன்னாள் அமெரிக்க நிதித் துறை அமைச்சர் ஹாங்க் பால்சன் ஓராண்டுக்கு முன்னால் தெரிவித்தார்.
இரண்டு காரணங்களால் இது நடக்கிறது. முதலாவதாக, அமெரிக்காவிலிருந்து சரக்குகளை வாங்குவதைத் தவிர்க்க, முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுகிறது, அமெரிக்க நிறுவனங்களின் ‘அறிவுசார் சொத்துரிமை’ சட்டத்தை மதிக்காமல், அவர்களுடைய தொழில்நுட்பத்தைத் திருடுகிறது. உலகின் தொழில்நுட்பக் கேந்திரமாக சீனா வளரும் வரை நாமும் இதைச் சகித்துக்கொண்டிருந்தோம். இரண்டாவதாக, சீனா இப்போது தொழில்நுட்ப சக்தியாக வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் கொண்டு அது தயாரிக்கும் அனைத்தும் பொருளாதார, ராணுவப் பயன்பாடு உள்ளவை; முன்பைப் போல பொம்மைகள், டி-ஷர்ட்டுகள், டென்னிஸ் வீரர்களின் காலணிகள் போன்ற அற்பமான பொருள்களல்ல. இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்புக்கும் சேதம் இல்லாமல் பரஸ்பரம் என்ன வாங்கலாம், என்ன விற்கலாம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இரு நாடுகளும் திணறுகின்றன.
“நாற்பதாண்டுகளாக ஒருங்கிணைத்துவிட்டு, இப்போது அந்த நான்கு அம்சங்களிலும் விலகுமாறு இரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் சிந்தனாவாதிகளும் அரசுகளுக்கு ஆலோசனைகளைக் கூறுகின்றனர். இந்தப் போக்கு நீடித்தால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலே நொறுங்கிவிடும். இரு நாடுகளிலும் எழும் பொருளாதார இரும்புத் திரை உலகப் பொருளாதாரத்தையும் சேதப்படுத்தும்” என்று அந்த உரையில் எச்சரித்திருந்தார் பால்சன்.சீனாவுடன் உறவு துண்டிப்பு: டிரம்ப் எச்சரிக்கை கொரானோ வைரஸ் பரவலை சரியாக கையாளாத சீனா மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அந்நாட்டுடனான உறவை துண்டிக்க முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் அளித்த தகவல்: சீன அதிபர் ஷி ஜிங்பிங் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால், தற்போது அவருடன் பேச விரும்பவில்லை. சீனா மீது அதிருப்தியில் உள்ளேன். தற்போது அதைக் கூறுகிறேன் என்றார்.
சீனாவுக்கு பதிலடியாக எங்களால் பல விஷயங்கள் செய்ய முடியும். சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்க முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியாகவும் 500 பில்லியன் டாலர் மிச்சமாகும். கொரானோ வைரஸ் சீனாவிலிருந்து தான் வந்தது. அதனை அவர்களால் தடுத்திருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவில் 25 சதம் சீனர்கள் வாழ்கிறார்கள் சீனப் பொருட்கள் அங்கு அமோகமாக விற்பனை நடக்கிறது, குழந்தைகள், பெரியவர்களென பலரும் உபயோகின்றனர் சீனாவின் தயாரிப்புகள் இல்லாத வீடுகளே கிடையாது எப்படி உறவை துண்டிப்பார்கள்
சீன பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. சீன நாணயத்தின் மதிப்பை சீனா செயற்கையாக குறைத்து உலகம் பூராவும் தன் பொருட்களின் விலையை குறைத்து விக்கிறது. மேலும் சீனாவில் தொழிலாளர்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கும் பழக்கமுண்டு. இதனால் சீன பொருளாதாரம் அதனிடம் பொருட்கள் வாங்கும் நாடுகளைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் இது வரும் நாட்களில் மாற ஆரம்பிக்கும். ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு மிக குறைவு. ஏனெனில் இந்தியாவின் திறன் மிக்க தொழிலாளர்கள், வெளிநாடுகளில் சென்று அதிக சம்பளம் பெற வாய்ப்பு உள்ள நிலையில் இதில் சேர மாட்டார்கள். சீனா வியாபார உத்தி உள்ள நாடு முதலில் சீனாவிலிருந்து தான் பட்டு உருவானது, பட்டாசுகள் உருவானது,பளிங்குப் பொருள் உருவானது, ஆகவே அவரகள் உருவாக்கிய பொருள்களைப் பயன்படுத்தும் நாடுகள் அதிகம் இதில் அமெரிக்கா சீனாவை தடை செய்தால் மக்கள் சீனப் பொருள்கள் வாங்குவதை தடுக்கும் வேறுவகையான பாதிப்பு என்ன என்பதை அமெரிக்கா விளக்காத வரை யாருக்கும் விளங்காத நிலை தான்.
கருத்துகள்