திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பெரியாங்குப்பம் பகுதியில் வீட்டில் வளர்க்கும் பூனைகளைப் பிடித்து வெட்டி அதன் கறியை மான் கறி எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து வந்த பெரியாங்குப்பம் நமாஸ்மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஊரடங்கில் மான்கறி என நினைத்து பூனைக்கறி சாப்பிட்ட மக்கள் அத்தனை பேரும் ஏமாந்து விட்டனர். ஆம்பூர் பகுதிகளில் சில நாட்களாகவே நாடோடி இனத்தை சேர்ந்த சிலர் திருட்டுத்தனமாக மான் கறி விற்பதாக வனத்துறைக் குத் தகவல் வரவே ஒரு கிலோ மான்கறி 500 ரூபாய்க்கு விற்பதாதவும் தகவல் வரவே
மேலும் பொதுமக்கள் மான்கறியை விரும்புவதால், வியாபாரம் தூள் பறக்கும் நிலை எனப் புகார் வரவும் வனத்துறையினர் அதிரடியாகக் களமிறங்கி கேள்விப்பட்டதைவிட பொதுமக்களில் நிறைய பேர் மான்கறியை ரசித்து சாப்பிட்டுள்ளதும் தெரியவரவே அதனால் விசாரணையை தீவிரப்படுத்தினர்... தனிப்படை வைத்து கண்காணிக்கப்பட்டதில் மணிகண்டன் என்ற இளைஞரின் பெயர் கண்டறிந்துள்ளனர் வீட்டை தேடிச் சென்றனர்.
அப்போது மணிகண்டன் ஒரு பூனையை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ந்தவர்கள் அவரை பிடித்து விசாரித்ததில், இவ்வளவு நாளாக விற்று கொண்டிருந்தது மான்கறி இல்லை, பூனைக்கறி தான் என்றார். சோலூர் அருகே உள்ள நமாஸ்மேடு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர். 25 வயதான மணிகண்டன்
மான் வேட்டைக்கு போகிறேன் என்று சொல்லி பூனையை வேட்டையாடி அந்த இறைச்சியை விற்பனை செய்துள்ளார். மக்களும் தெரியாமல் மான்கறி என்று நம்பிச் சாப்பிட்டுள்ளனர்இதையடுத்து மணிகண்டனை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தேடி வருகிறார்கள். ஒரு கிலோ பூனை கறி 500 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளார்.
இது அறியாமல் நிகழ்ந்த சம்பவம் என்றும் கூறிவிட முடியாது.. மான்கறி வேண்டும் என்று கேட்டது ஒருசில மக்கள்தானாம். வனவிலங்குகளின் இறைச்சியை வாங்கி சாப்பிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை யினர் எச்சரித்துள்ளனர்.மக்கள் அறியாமை. சாப்பிட்ட பலர் வேதனையில்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்