மே 09 சர்வதேச பறவைகள் குடிபெயர்தல் தினம் இன்று.
(International Migratory Bird Day )
Bird migration என்பது பறவைகள் வலசை போதல் அல்லது பறவைகள் குடிபெயர்தல் என்பதைக் குறிக்கும்,
பறவைகள், பருவகாலங்களை யொட்டி புலம் பெயரும், எல்லா பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின் றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்கச்செல்கின்றன.
அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன.
குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப் படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன.பந்தயப் புறாக் கள் இந்த முறையில் தான் தனது இருப்பிடத்தை அறிகின்றன. ‘ஒரு குச்சி ஒரு வானம்’ படிக்க வேண்டிய வரிகள்.. மு.அப்துல் சமது, தமிழ்த்துறை பேராசிரியராக உத்தமபாளையத்தில் பணியாற் றும் இவரது நூல் சமீபத்தில் படித்த நிகழ்வு அதில் குறிப்பிட்ட பறவை யினத்தின் செயல் சுயசார்புக்கு வழிகாட்டும்.ஆகாயத்தில் ஆச்சரியம் நிகழ்த்தும் பறவைகள் உண்டு. உலகம் கடக்கும் நிகழ்ச்சி, அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக் கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கிலோமீட்டர் பயணம் செய்து மார்ச் மாதம் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. அங்குள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்களினின் புதிய தலைமுறை களான குஞ்சுகுளுவான்களுடன் பஞ்சாகப் பறந்து அக்டோபர் மாதம் புறப்பட்டு மீண்டும் 8300 கிலோமீட்டர் தூரம் பறந்து அர்ஜென்டினாவுக்குச் சென்றுவிடும்இனப்பெருக்கத் திற்காக சில ஆயிரம் கிலோமீட்டர் பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியம் எங்கே என நினைக் கலாம் பலர். ஆச்சரியம் உண்டு பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து திரும்பிப் போக, பறக்கும் 16,600 கிலோ மீட்டர் துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது. கடல்.கடல்..கடல்... கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசிக்கு எப்படி இரைஎடுக்கும். களைப்ப டைந்தால் எப்படி ஓய்வெடுக்கும், அர்ஜென்டினாவிலிருந்து புறப் படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றது, எப்பொது அதற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்ற தோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதில் நின்று கொண்டு இரை தேடியும் ஓய்வெடுத்தும் செல்கின்றன.
பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கிலோமீட்டர் பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறதே கை, கால், ஐம்புலன், ஆறறிவு பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல தடை எது அவன் சுயமாக சிந்திக்கமல் இருக்கவைக்கும் தற்போதுள்ள சென்சாருக்கு வராத தொலைக்காட்சித் தொடர்கள், மதுவின் மயக்கம், சொந்த உழைப்பின் மீது நம்பிக்கை இழப்பு இதுவே ஜப்பானியர்கள் போல நம்மைச் சிந்திக்க விடாத வழிகளாகும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்