முதல்வருக்கு இன்று அகவை 66. சேலம் மாவட்டத்தில் எடப்பாடித் தொகுதியில் நெடுங்குளம் அருகில் சிலுவம்பாளையத்தி லிருந்து சென்னைக் கோட்டை வரை பயணம் முழுக்கத் தொடர் வாய்ப்புகள் 1954 ஆம் ஆண்டு. அப்போதய கோயமுத்தூர் மாவட்டம் சிலுவம்பாளையக் கருப்பக் கவுண்டருக்கும் தவசியம்மாளுக்கும் மகனாகப் பிறந்து கல்லூரிப் படிப்பு முடித்து வெல்லம் மூட்டை வியாபாரம் துவங்கி, எம்.ஜி.ஆரின் மீதிருந்த பற்று, அரசியலில் சரியான சமயத்தில் அதிமுகவில் செல்வாக் குடனிருந்த செங்கோட்டையனைச் சந்திக்கிறார். அரசியல் துவக்கத் தில் கோனேரிபட்டி கிளைச் செயலாளராகப் பொறுப்புக் கிடைக்கிறது. அடுத்து வாய்ப்பு 1989ஆம் ஆண்டு அதிமுக ஜா அணி ஜெ அணியாக பிரிந்து ஜெ அணிசார்பில் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 1991 -ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். 2011 ஆண்டு எடப்பாடி தொகுதியி லிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு, தமிழக அரசின் நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமு கங்கள் துறை அமைச்சராக பணியாற்றினார். 2016 ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு அமைச்சர வையில் பொதுப் பணித்துறை அமைச்சராக இடம்பெற்றார்.1998 ஆம் ஆண்டு நடந்த, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். 1999, 2004 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் தோல்வியுற்றார். முதல்வர் பதவியில். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று முதல்வராக பதவியேற் றார். அஇஅதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் எதையும் சமாளிக்கும் தகுதியுள்ள முதல்வராக இருக்கும் நிலை. இன்று இவரது பிறந்த நாளில் இப்போதுள்ள சூழலில் எளிமையாகவே இருக்கிறார் சாமாணியர்கள் மத்தியில் பழகும் முறையிலும் தகுதியானவராகவே இருக்குமிவர் அடுத்த.நகர்வுகளில் தான் இவரது ஆளுமைத் தன்மையை மக்கள் அறிய முடியும். தமிழகத்தில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகமே மக்கள் எதிர்பார்ப்பாகும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் மற்றும் வாசகர்கள் சார்பில் முதல்வருக்கு தெரிவிக்கிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்