சிறுமி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்ற கொலையாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென பலர் கேட்கும் நிலையில் கட்சியிலிருந்து நீக்கம் செய்து அதிமுகவில் நடவடிக்கை
மனித சமூகம் வெட்கித் தலைக்குனியத்தக்க கொடூரம் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தில் நடந்தேறியிருக்கிறது. அக்கிராமத்தில் பெட்டிக் கடை நடத்தி வரும் ஜெயபால் மகள் பத்தாம் வகுப்பில் படிக்கும் 14 வயது ஜெயஸ்ரீ எனும் மாணவியை அவருடைய தந்தையோடு ஏற்பட்ட முன்விரோதத்தால் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் கலியமூர்த்தி ஆகியோர் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக வீட்டிலி ருந்த போது கொடூரமாக பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துப் படுகொலை செய்த செய்தி மனசாட்சியுள்ள ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிறது. இத்தகைய மனிதத் தன்மையற்ற செயலை பல கட்சியினர் வன்மையாக கண்டிக்கும் நிலையில் குற்றவாளிகளின் பெயரை மரண வாக்குமூலமாக ஜெயஸ்ரீயே சொல்லி இருக்கிறார். ஆகவே இந்தக் கொலை வழக்கை நிரூபிப்பதற்கு ஒரு வலுவான சாட்சியமாக ஜெயஸ்ரீ யின் மரண வாக்குமூலம் அமைந்திருக்கிறது. ஆகவே குற்றவாளிகள் மீது கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் தப்பி விடாதபடி தமிழக அரசு வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று பல தலைவர்களும் வலியுறுத்திவரும் நிலையில் அவர்களை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் சார்பில் ஆறுதல் செய்தியும் வெளியிட்டுள்ள நிலை. இத்தகைய குரூரமான செயலை செய்த முருகன்,கலியமூர்த்தி ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்காமல் சிறைக்குள்ளேயே வைத்து அவர்கள் மீதான வழக்கை நடத்தி முடிக்க வேண்டும், வெளியில் வந்தால் அவர்கள் சாட்சியங்களை கலைப்பதற்கு வாய்ப்பு இருக்கிற காரணத்தினால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி,அதிகபட்ச தண்டனை வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கும் நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்