இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில்
. தமிழகத்தில் நோய் தொற்று பரவல் அதிகமாக இல்லாமல் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பிய நபர்களின் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகியுள்ளது நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் மிகக் குறைவு.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மருத்துவ நிபுணர்களின அறிவுரைப்படி மே 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கீழ்க் காண்ட வழிமுறைகளுடன் நீட்டிப்பென முடிவெடுக்கப்பட்டது. நோய்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போதய நடைமுறைகளில் எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாகும்.
பெரு நகர சென்னைக் காவல் துறை எல்லைப் பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர)
கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரின் ஆய்வுக்குப் பின் சூழலுக்த்தக்கபடி 25 சதவீத பணியாளர்களுடன் 20 நபர்களுக்கு மிகாமல் செயல்பட அனுமதி. நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்: 10 சதவீதம் பணியாளர் 20 நபர்கள் வரை செயல்பட அனுமதி. நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் மட்டும் பணியாளர் வர வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் (e- commerce) ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
அனைத்துத் தனிக் கடைகள் அதாவது முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமென்ட் ,கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் (Home care providers) வீட்டு வேலைப் பணியாளர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்
இவ்வாறு செய்தி அறிவிப்பு உள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்