திருமாலிருஞ்சோலை அழகருக்கு (சுந்தரராஜப்பெருமாள் ) ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மாலை சூடி கொடுத்து அருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு பிரதி சமர்ப்பணமாக ஸ்ரீ அழகர் திருமலையிலிருந்து ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் தான் சூடிக் களைந்த பச்சைப் பட்டுப் புடவையை வெகுமதியாக சமர்ப்பிக்க அதை ஆண்டாள் நாச்சியார் தங்க ஊஞ்சலில் சாத்திக்கொண்டு திருவாராதனம் கண்டருளினார். ''எழிலுடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே''- எனும்
நாச்சியார் திருமொழி.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்