மதுரை மன்னர்கள் விருப்பத்தில் நடந்த திருவிழாக்களில் மாற்றங்கள் ..18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்த சித்தர் பீடம் விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு, தேவாரப்பாடல் பெற்ற 274 வது சிவாலயம், 192வது தேவாரஸ்தலம். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் பாண்டியநாட்டில் ஒன்றான
தேவலோக அரசன் இந்திரனால் கட்டப்பட்ட மதுரைக் கோவிலாகும் என நம்பிக்கை. இராமபிரான் , இலட்சுமணர், வருணன், இந்திரன், தேவர்களும் முனிவர்களும் வழிபட்ட சிவாலயம் இங்கு பிரசாதம் தாழம்பூவில் தரும் குங்குமமாகும்.மூன்றாம் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்தில் மதுரை நகரம் முறையாக நிர்மாணிக்கப்பட்டது என தமிழ்ச் சங்க வரலாற்று தகவல் மதுரை யில் மீனாட்சி பிறப்பானதாகக் கருதுவதால், மீனாட்சியம்மனை வணங்கிய பின்பே சிவபெருமா னை வணங்கும் முறை கடை பிடிக்கும் நிலை . மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விக்கிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள் ஸ்தலம்.பாண்டிய மன்னன் குலசேகரபாண்டியன் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனக்காட்டையழித்து மதுரை மாநகரையும் ஆலயத்தி னையும்அமைத்து வரலாறு.
மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நான்கு மாடங்களமைத் துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயருமுண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்புவட்டமாக தன் வாலை வாயினால்கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்றும் பெயர் ஏற்பட்டதாக வரலாறு.
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் எட்டுக் கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் கொண்ட கருவறை விமானங்கள், இந்திர விமானமென அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.
மீனாட்சி அம்மன் திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடைய.கோவிலின் ஆடி வீதி களில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது. கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல்1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின் 1878 ஆம் ஆண்டில் முடிந்தது. தெற்குக் கோபுரம் மிக உயரமானது 160 அடியாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் புதுப்பித்துக் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சமஸ்தானத்தின் மன்னர் துரைசிங்க சண்முகராஜாவால் திருப்பணி செய்யப் பெற்றது.
சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளமும் உள்ளன. நாயக்கர் மன்னர்கள் காலத்தில்
கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சியில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பானது.
இது தவிர கோயிலின் கிழக்குக்கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புதுமண்டபமாகும் கோவிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத்தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைப்பு பாண்டிய மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் வீதிகளில் நடைபெறும்.மதுரை நாயக்கர் மன்னர்கள் 1545 முதல் 1740 வரை ஆட்சி செய்தவர்கள் திருமலை நாயக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல விழாக்கள் ஏற்படுத்தியவர் அவர் காலத்தில் தான் சைவர்கள் விழாவாக மட்டுமே பாண்டிய நாட்டில் நடந்த பங்குனி-சித்திரை திருவிளையாடல் புராணத்தின்படி நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலயத் திருவிழா வைணவம் கலந்த சித்திரைத் திருவிழாவானதும் அதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் சேர்த்து நடத்தியதில் தான் சைவத்தில் வைணவம் கலந்தது. பெரும்பாலும் நாயக்கர் மன்னர்கள் அனைவரும் இராமம் போடுவதும் பெருமாள் வழிபாடும் உள்ளவர்கள் அப்போது தான் சித்திரைத் திருவிழா மாற்றமானது.மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வலைதளங்களிலும் இன்று நேரடியாக ஒளிபரபரப்பு செய்யப்பட்டது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம்,மற்றும் மூலநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று (மே 4) காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பிரபலமான அனைத்து கோயில்களிலும் பக்தர்கள தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரசித்த பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இந்த தடை உள்ளது.
இந்த நிலையில், சித்தரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று (மே 4 ) காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.
அத்துடன், திருக்கோயிலின் முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில், youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதை ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்து இருந்தது.
இந்த வைபவத்தின்போது, காலை 9:05 முதல் 9:29 மணிக்குள், தாய்மார்கள் மங்கள நாண் மாற்றிக்கொண்ட. நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்