நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் சபையில், இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகத் திருமூர்த்தி எனும் தமிழர்
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் சபையில், இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரி திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதய. ஐ நா வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் இம் மாதம் ஒய்வு பெறவதால், அடுத்து நிரந்தரப் பிரதிநிதியாக தமிழகத் தைச் சேர்ந்த இந்திய வெளியுறவு அதிகாரியான திருமூர்த்தியை மத்திய அரசு நியமனம் செய்துள் ளது. கடந்த 1962 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி சென்னையில் பிறந்த திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று பின் சட்டக்கல்வி பயின்று ஐஏஎஸ் தேர்வில் 1985 ஆமாண்டு தேர்ச்சியாகி வெளியுறவுத்துறை யில் பணியாற்றினார். கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களி லுள்ள இந்தியத் தூதரகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றி யுள்ளார். மேலும் வங்காள தேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாளராக வும் பணியாற்றியுள்ளார். பாலஸ் தீனம், மலேசியா, ஜகார்தாவில் இ்ந்தியத்தூதராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளராகவும் திருமூர்த்தி, கிஸ்ஸிங் தி ஹெவன் மானசரோ வர் யாத்ரா, கிளைவ் அவென்யு, சென்னை வாசி ஆகிய நூல்களை யும் எழுதியுள்ளார். திருமூர்த்தி யின் மனைவி கௌரி திருமூர்த்தி இவர் முன்னாள் டென்னிஸ் வீரர் ராமநாதன் கிருஷ்ணனின் மகளாவார். இவர்களின் மகள் பவானி திருமூர்த்தியும் இந்திய டென்னி்ஸ் வீராங்கனையாவார்.
தற்போது மத்திய வெளியுறவுத் துறையில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாள ராக திருமூர்த்தி இருந்து வருகிறார். தமிழகத்தை விட்டு வெளியேறிய,தமிழர்களெலாம் ஜொலிப்பது தற்போது நிகழ்வு. வெளியுறவு அமைச்சரும் பூர்வமான தமிழர் தான்.
கருத்துகள்