முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பா ம க  நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பா ம க  நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று எழுதிய கடிதத்தில்
கொரானோ வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைச் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு அழைத்து வரும் 'வந்தே பாரத்' இயக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், இப்போது பல காரணங்களால் அங்கு மிக மோசமான சூழலில் இருப்பது குறித்தும், அவர்களை உடனடியாக மீட்டுத் தாயகம் அழைத்து வருவதற்கான அவசரத் தேவை குறித்தும் தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.
வளைகுடா நாடுகளில் மிகப்பெரியதான சவுதி அரேபியாவில்  40 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரானோ அச்சம் காரணமாக ஊரடங்கைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
அவர்கள் தவிர சிறிய அளவிலான பராமரிப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளைச் செய்வதற்காக 3 மாத வணிக விசாவில் சென்றவர்களும் அவர்களின் பணியை முடித்துவிட்டனர். ஆனால், ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதால், அவர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கு கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் தவிக்கும் இந்தியர்கள் அனைவரும் தங்களிடமிருந்த பணத்தைச் செலவழித்து விட்டனர். அதனால் அடுத்த வேலை உணவுக்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. மற்றொரு புறம் சவுதி அரேபியாவில் கொரானோ வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
அங்குள்ள இந்தியர்களில் பலர்  பாதிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சவுதி அரேபிய அரசு தயாராக இல்லை. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நாட்டினருக்கு மட்டும்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மாறாக, இந்தியர்கள் எவருக்கேனும் கொரானோ பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே மருந்து சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் உயிரிழக்க நேரிடுமோ என இந்தியர்கள் அஞ்சுகின்றனர்.
தாயகம் திரும்புவற்காக அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ள போதிலும், இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாததால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்திலுள்ள அவர்கள் குடும்பத்தினரும் கவலையில் வாடுகின்றனர்.
கத்தார் நாட்டிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரனோ உள்ளிட்ட எந்த நோய்க்கும் சிகிச்சை மறுக்கப்படுகிறது. கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் கரோனா வைரஸ் நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுவோர் இந்தியர்களாகவே உள்ளனர்.
அதே நேரத்தில், எந்த வளைகுடா நாட்டிலும் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லை என்பதால், அங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கொரானோ தாக்கினால் மருத்துவம் பெறுவதற்கு வழியில்லை. அதனால், கத்தாரில் வேலையிழந்து வாடும் இந்தியர்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விரைந்து தாயகம் திரும்ப விரும்புகின்றனர்.'வந்தே பாரத்' இயக்கத்தின் கீழ் கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு கத்தார் நாட்டிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்ப இயலாமல், தங்களைக் கரோனா தாக்குமோ என்ற அச்சத்தில் கத்தாரில் தவித்து வருகின்றனர்.
குவைத் நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் போதிய ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வந்த இந்தியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் 7,340 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு பாமக சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றுள்ளது.
வளைகுடா நாடுகளில் மிக மோசமான கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடு குவைத் ஆகும். அங்கு நேற்று வரை மொத்தம் 11 ஆயிரத்து 975 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர்.
குவைத்திலும் இந்தியர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் கொரானோவுக்கு உயிரிழந்து விட்டனர். ஆனால், அவர்கள் மாரடைப்பால் இறந்து விட்டனர் என்று கூறி அது குறித்த தகவல்களை மறைத்து விடுகிறது.
அதுமட்டுமின்றி, இந்தியா திரும்புவதற்காக குவைத்தில் வாழும் இந்தியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் முகாம்களில் காத்திருக்கும் நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இந்தியர்களின் மன உளைச்சல் அதிகரித்துள்ளது.
குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மே 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மொத்தம் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் இரு விமானங்கள் கேரளத்திற்கும், ஒரு விமானம் ஆந்திரத்துக்கும் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவது தமிழர்கள்தான். அவர்களை மீட்டுத் தாயகத்திற்கு அழைத்து வர வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.
எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்". என கடிதம் வாயிலாக வெளியுறவு அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...