மதுக்கடைகளை தற்காலிகமாக மூடக் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் மனுதாரருக்கு அபராதம் விதிப்பு
நாடு முழுவதும் மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய இரண்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம் வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு , மாநிலத்தின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பது கருத்து.
நீதிமன்ற நேரத்தை வீணடித்த தற்காக கமலஹாசன் சட்ட ஆலோசகர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதிப்பு இப்போது எந்த ஊடகமும் அதை முன்னிலைப் படுத்தவில்லை. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், எஸ்.கே. கவுல், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையில் டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
பின் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தனர். இதனால் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியிருக் கிறது. எனினும், இன்று மாலைக்குள் விரிவான உத்தரவு பிறப்பிக்கப் பட்ட பிறகே கடைகளை திறக்க முடியுமா அல்லது ஆன்லைன் மூலமாக அரசு விற்பனை செய்ய வேண்டுமா? என்பது தெரியவரும்.
கருத்துகள்