புலம் பெயரும் தொழிலாளர் ரயில் பயணக் கட்டணம் தமிழக அரசு உதவியும் ,வங்கி ஊழியர் சங்கம் ஒரு கோடி ரூபாய் நன்கொடையும்
இரயில் கட்டணம் செலுத்த முடியாத நாடு திரும்பும் வெளிமாநிலத் தொழிலார்களுக்கு தமிழக அரசே கட்டணம் செலுத்தும் என கூறியுள்ளது. தொழிலாளரின் சொந்த மாநிலம் செலுத்தாத பட்சத்தில் தமிழக அரசே சேவையாக ஏற்றுக்கொள்ளுமென அறிவித்துள்ளது. ரயில் கட்டணத்துக்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோல புலம் பெயர்ந்து சொந்த ஊர் செல்லும் ரயில் பயணக் கட்டணமாக வங்கி ஊழியர் சங்கம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது
கொரானோ பாதிப்பு வாழ்வில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.
லட்சக் கணக்கில் இனி எவரையும் நம்பிப் பயனில்லை என தனியாகவும், குடும்பத்துடனும் நடைப்பயணம் மேற்கொண்டார்கள் .
ஊரடங்கு, தனிமைப் படுத்தல் என்று எத்தனை தடைகள் மற்றும்
உயிர்ப்பலி.
இன்னும் தொடர்ந்து செல்லும் நடைப் பயணங்களைப் பார்க்கிறோம். இவர்களது பயணக் கட்டணமாக ரயில்வேக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்ற அறிவிப்பைச் செய்துள்ளது AIBEA- உழைக்கும் வர்க்கத்திற்குத்தான் உழைப்பவரின் வலி அதிகமாகத் தெரியும் என வங்கி ஊழியர் சங்கம் அவர்கள் துயரில் பங்கு பெறுகின்றது.
கருத்துகள்