எழுத்துச் சித்தர் பாலகுமாரன் நினைவு நாள் மே 15. தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி கிராமத்தில் 1946ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் தேதி பிறந்த பாலகுமாரன், பள்ளி இறுதிப் படிப்புவரை மட்டுமே படித்தவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், 1969 வாக்கில் கவிதைகளை எழுதத் துவங்கினார்.முதலில் கசடதபற இதழிலும் பிறகு கணையாழி ஆனந்த விகடன், கல்கி போன்ற வெகுஜன இதழ்களிலும் எழுத ஆரம்பித்தார். சிறுகதைகளிலும் பிறகு நாவல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த பாலகுமாரன், 274 நாவல்களை எழுதியிருக் கிறார்.நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் சாவி நடத்தி வந்த சாவி இதழிலும் சிலகாலம் பாலகுமாரன் பணியாற்றி யிருக்கிறார். இவருடைய நாவல்களில் மெர்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள் மிகவும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளா கும். கல்கியில் வெளிவந்த இரும்புக் குதிரை ஒரு மிகச் சிறந்த படைப்பு. எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது.
உடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய நாவல் இவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று.
மெர்க்குரிப் பூக்கள் வடிவமைப் பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது.
தமிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு.
பாலகுமாரன் தனது இறுதிக் காலத்தில் ஆன்மிகம் குறித்து அதிகம் எழுதலானார்.திரைக்கதையும் எழுதியவர்.
சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்தி வந்தார். தமது 72 ஆம் வயதில் மரணமுற்றார்.
அவருடைய எழுத்துகளுக்கு ஒருபோதும் மரணம் கிடையாது. பாலா வேரில் பழுத்த பலா, ஸ்ரீ யோகியார் அருளால் எப்போதும் நம்மிடம் நூல்கள் மூலம் வாழ்வார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்