கோவிட்-19 கொரானோ தொற்று பரவுவல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மூன்றாம் முறை நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவாகிறது. இதற்கிடையே மக்கள் வாழ்வாதாரம் கருதி பொருளாதாரத்தை மேம்படுத்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டது.ஊரடங்கு அமலாகி 45 நாட்கள் கடந்து விட்ட போதும் கொரானோவால் பாதிக்கப் படுபவர்கள் மற்றும் உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாநில முதலமைச்சர் களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரானோ பாதிப்புக்குப் பிறகு அவர் மாநில முதல்மந்திரிகளுடன் 5ஆவது முறையாக நடக்கும் ஆலோசனையாகும். இத் தகவலை பிரதமர் அலுவலகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறார் கள். இதனால் அவர்கள் மூலம் குக்கிராமங்களிலும் கொரோனா தொற்றும் பரவும் ஆபத்து இருப்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதுதான் நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகி றார்கள். மேற்கு வங்காளத்தில் ஊரடங்கை 21ஆம் தேதி வரை மாநில அரசு நீட்டித்துள்ளது.
மே 25 ஆம் தேதி ரம்ஜானிருக்கும் நிலையில், ஊரடங்கை மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு வங்காள இமாம்கள் சங்கத்தின் தலைவர் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசிடமும் இதே கோரிக்கையை எழுப்ப மம்தா பானர்ஜியை கேட்டுக் கொண்டுள்ளதால். இதில் மாநிலங்களின் கொரானோ பாதிப்பு நிலவரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் போன்ற பல அம்சம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார், அதன்படி ஊரடங்கை விலக்கிக் கொள்வதா அல்லது சில கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பதா, எப் பகுதிகளில் நீட்டிப்பது என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்